samedi 7 février 2015

ராஜபக்‌ஷே விசாரணையில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியது தொடர்பாக

ராஜபக்‌ஷே சீசெல்ஸ் நாட்டில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கியது தொடர்பாக புதிய அரசு விசாரணையை தொடங்கியுள்ளது.
இலங்கையின் அதிபராக  மகிந்த ராஜபக்‌ஷே இருந்த போது சீசெல்ஸ் நாட்டில் ஒரு தீவினை விலைக்கு வாங்கி,  அவ்வப்போது சென்று தங்கி வந்தார். அவருக்கான அலுவலகம் ஒன்றும் அங்கு திறக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தேர்தலில் ராஜபக்‌ஷே தோல்வியடைந்து, புதிய அரசு பதவியேற்ற பின் ராஜபக்‌ஷே வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது. இவ்விசாரணையில், சீசெல்ஸ் நாட்டிலுள்ள தீவு முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இது தொடர்பான விசாரணை விரைவில் நடைபெறும் எனத் தெரிகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire