samedi 21 février 2015

கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.பூண்டு தினமும் உண்டால் ஆரோக்கியம் உண்டு!

garlic-newsபூண்டு ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக பயன்படுகிறது. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின்,
இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
பூண்டின் மணத்திற்கு காரணம், அதில் உள்ள சல்பரே.
இது ஒரு சிறந்த கிருமி நாசினி. வியர்வையை பெருக்கும், உடற்சக்தியை அதிகப்படுத்தும், தாய்பாலை விருத்தி செய்யும், சளியை கரைத்து, சுவாச தடையை நீக்கும், ஜீரண சக்தியை அபிவிருத்தி செய்யும், ரத்த கொதிப்பை தணிக்கும், உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். இதய அடைப்பை நீக்கும், நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைக்கும், ஆண்களின் ஹார்மோன் உற்பத்தியை பெருக்கி, வீரியம் அதிகரிக்கச் செய்யும்.
பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றி
விடும். தொண்டை சதையை நீக்கும்.
மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும். மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்யும். நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். மூட்டு வலியைப் போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
உள்நாக்கு வளர்தலுக்கு: வெள்ளை பூண்டை இஞ்சி சாறுவிட்டு அரைத்து கொஞ்சம் தேனும் கலந்து காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன், இரண்டு தேக்கரண்டி சாப்பிட்டு வரவும். இவ்விழுதை தொண்டையின் வெளியே பூசி வர வேண்டும்.
சுளுக்கு: வெள்ளை பூண்டை உப்பு சேர்த்து இடித்து, சுளுக்கு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.
தேமல்: வெள்ளை பூண்டையும் வெற்றிலையையும் சேர்த்து அரைத்து, தேமலின் மீது தடவினால், கொஞ்சம் கொஞ்சமாக தேமல் மங்கி கொண்டே வந்து கடைசியில் மறைந்துவிடும்.
ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், தினமும் இரவு படுக்க செல்லும் போது பூண்டை பசும்பாலில் கொதிக்க வைத்து, பிறகு பூண்டுடன் பாலை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.
காசநோய்: ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும்.
ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும். பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire