mardi 21 février 2012

83 இனக் கலவரத்தை தூண்டிய கிரிமினல் பிக்கு பொலிஸ் ஆணைக் குழுவில்

பொலிஸ் ஆணைக் குழுவில்!


கிரிமினலும் சண்டியருமான பிக்கு ஒருவர் சுயாதீன பொலிஸ் ஆணைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவரின் பெயர் எல்ல குணவன்ஸ.

இவர் ஒரு பேரினவாதி. பேரினவாதம் பேச தொடங்கினால் நிறுத்தவே மாட்டார்.

இவரைப் போன்ற பிக்குமார் அரசியல்வாதிகளுடன் ஒட்டி நின்று சுயநல தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இவருக்கு காலம் சென்ற அமைச்சர் காமினி திஸநாயக்கவுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

அந்நாட்களில் பிக்குமாருக்கு குணவன்ஸ கராட்டி வகுப்புக்களை ஒழுங்கு பண்ணி நடத்துவித்து இருக்கின்றார். பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று இவர் ராஜபக்ஸ அரசுக்கு மிக நெருக்கமானவர். அரசில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்.

1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தில் முக்கிய பங்காற்றியவர் இப்பிக்கு என டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சிங்க ரணசிங்க 1988 ஆம் ஆண்டு புத்தகம் ஒன்றில் எழுதி உள்ளார்.

இவரைப் போன்றவர்கள் பொலிஸ் ஆணைக் குழுவுக்கு நியமனம் பெற்று இருக்கின்றமை நாட்டில் நிரந்தர சமாதானம், சகவாழ்வு, இன ஐக்கியம் ஏற்படும் என்கிற நம்பிக்கையை அறவே இல்லாமல் செய்கின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire