lundi 20 février 2012

கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் புனித பிரதேசமாக பிரகடனம்

இலங்கையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரதேச அபிவிருத்திக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் வெள்ளிக்கிழமை கொக்கட்டிச்சோலை கருணா அம்மான் கலாசார நிலையத்தில் நடைபெற்ற பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பட்டிப்பளை- கொக்கட்டிச்சோலை பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்தாஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், பட்டிப்பளை பிரதேச சபைத்தவிசாளர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் நிறைவில் பிரதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தினையும் பார்வையிட்டனர். கடந்த காலத்தில் சட்டவிரோத மதுபான விற்பனைகள் மற்றும் சமூகவிரோத செயற்பாடுகள் நடைபெற்று வந்தன. கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் புதிய மதுபான சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்களிடமிருந்து முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தினை புனித பிரதேசமாக அறிவிப்பதாகவும் புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது எனவும் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அறிவித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இப்பிரதேசத்தில் தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார். கடந்த கால யுத்தங்களின் போது மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் தற்போது மீள் எழுச்சி பெற்றுவருகின்றமைள குறிப்பிடத்தக்கது

Aucun commentaire:

Enregistrer un commentaire