lundi 27 février 2012

அமொரிக்காவின் இந்த நடவடிக்கைளுக்கு இந்திய அரசின் ஆதரவும் ஆசிர்வாதம் தான் காரணம் என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்களா

ஜெனிவாவில் மார்ச் 27ம் திகதி முதல்; ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இம்மாதம் 27ஆம் திகதி தொடங்கும் இந்தக் கூட்டத்தொடர் ஏப்பிரல் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஆபிரிக்காவுக்கு 13 இடங்களும் ஆசியாவுக்கு 13 இடங்களும் லத்தீன் அமெரிக்காவுக்கு 8 இடங்களும் கிழக்கு ஐரோப்பாவுக்கு 6 இடங்களும் மேற்கு ஐரோப்பாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் 7 இடங்களும் மனிதஉரிமைகள் பேரவையில் ஒதுக்கப்பட்டுள்ளன. சிரியா, லிபியா, மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளின் விவகாரங்கள் இதில் முக்கியமானதாக இருக்கும் எதிர்பாக்கபடுகிறது குறிப்பாக, இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று இந்தக் கூட்டத்தொடரில் கொண்டு வரப்படலாம் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரப்போகின்ற நாடு அமெரிக்கா என தெரியவருகிறது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளான றொபேட் ஓ பிளேக்கும், மரியா ஒரேரோவும் அமெரிக்கா இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகவே கூறியுள்ளனர். இதில் உள்ள முக்கிய கேள்வி என்ன வென்றால் இந்தியாவின் செயற்பாடு எவ்வாறு இந்த மனிதஉரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடர அமையபோகின்றது என்பதுதான் தமிழ் மக்கள் அணைவரும் இந்தியா ஒட்டுமொத்தமாக இலங்கைக்கு எதிராக செயற்பட்டு இலங்கை அரசையை பழிவாங்க வேண்டும் என எதிர்பாக்கின்றனர் ஆனால் அது சாத்தியமா அதற்க்காக புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அல்லது தமிழ் அமைப்புகள் ஊடகங்கள் அல்லது புத்திஜீவிகள் 2009ம் மே 19 பிறகு எந்தவிதமான நடவடிக்கைளை மேற்கொண்டார்கள் என்ற கேள்வியை நாம் கேட்டு பார்க்கவேண்டும் எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளமால் இந்தியாவின் உதவியை எவ்வாறு எதிர்பார்ப்பது என்ற கேள்வி எழாமால் இல்லை எது எவ்வாறு இருந்தாலும் ஏற்கனவே 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த கையோடு, ஜெனிவாவில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சுவீடன் கொண்டு வந்த போது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவுகாக செயற்பட்டது என ஒரு குற்றசாட்டை எம்மவர்களால் முன்வைக்கபடுகிறது ஆனால் இது ஒரு இந்தியாவின் ராஜதந்திர நகர்வு என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் இந்தியா யுத்த முடிவடைந்த கையுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை முன்நோக்கி பல விடயங்களை மேற்கொண்டது அதில் அணைத்து தமிழர் தரப்பிணையும் ஒரு அணியின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்கிய வேளை அதற்கக எதிராக ராஜபக்ச குடும்பம் கருணா பிள்ளையான்; மற்றும் கே.பி. டக்ளஸ் போன்றவர்களுக்கு போதிய அளவிற்க்கு நிதியினையும் ஊடாக வசதியினையும் ஆழனியையும் வழங்கி இந்தியாவிற்க்கு எதிரான கருத்துகளையும் இந்தியாவிற்க்கு எதிரான போரட்டத்தினையும் வெற்றிகர செய்வித்தனர் அதேவேளை புலபெயர்ந்த நாட்டில் சிதறிபோய்யுள்ள புலி ஆதரவு அமைப்புகளும் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் அனுகுமுறைபற்றி சிந்திக்காமால் இந்தியாவிற்க்கு எதிரான கருத்துகளை விதைப்பதில் கவனத்தை செலுத்திய அதேவேளை இதற்கு ஆதரவாக இலங்கை அரசிடமிருந்து கே.பி ஊடாக நிதியினை பெற்ற தொலைகாட்சியினை பயன்படுத்தி கொண்டனர் இத் தொலைகாட்சி நிறுவனத்தினர் புலிகளின் காலத்தில் புலிகளிடமிருந்து பெரும் தொகைநிதியினை பெற்று சுயநிர்ணயம் தேசியம் தன்னாட்சி பேசியவர்கள் என்பது குறிப்பிடதக்கது இந்த நடவடிக்கையானது ராஜபக்ச குடும்பம்த்தின் திட்டமான தமிழர்களை இந்தியாவிடன் ஒன்று இணைக்க கூடாது என்பதுக்கு வலுசேர்ப்பதாக அமைந்தது இப்படியான ஓரு நிலையில்தான் இந்திய தமிழ் மக்களுக்கு சார்பாக ஜெனிவாவில் செயற்படவேண்டும் எனவும் எதிர்பாக்கபடுகிறது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான உறவுகளை சரிவரப் புரிந்து கொண்டால், இந்தியா இத்தகைய கட்டத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் அண்மைக்கால போக்கைப் பார்க்கின்ற எவருமே, இலங்கை விடயத்தில் அதன் நெகிழ்வுத்தன்மையை குறைத்து மதிப்பிடமாட்டார்கள். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா அண்மையில் கொழும்பு வந்திருந்த போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதாக உறுதியளித்ததாக கூறியிருந்தார். பல நாட்கள் கழித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, தான் அப்படியான எந்த உத்தரவாதத்தையும் இந்தியாவுக்கு வழங்கவில்லை என்று குத்துக்கரணம் அடித்தார். எஸ்.எம்.கிருஸ்ணா உறுதிமொழி பற்றிக் கூறியதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவோ, இலங்கை அரசோ உடனடியாக அதுபற்றி எந்தக் கருத்தையும் கூறவில்லை. அதுபோலவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அப்படியான உத்தரவாதம் எதையும் கொடுக்கவில்லை என்று கூறியபோது இந்தியாவும் எந்தக் கருத்தையும் கூறவில்லை. பல நாட்கள் கழித்தாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தான் அப்படிக் கூறவில்லை என்று மறுத்தார். இந்தியாவின் இந்த மௌனம் ஏமாந்து போய் விட்டதை வெளிப்படுத்துகிறது என்றே பலரும் கூறுகின்றனர். ஆனால் அதற்கு மாறான இன்னொரு அர்த்தமும் உள்ளது. தாம் ஏமாந்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையே அது. சீனா விடயத்தில் தாம் ஏமாந்து விடக் கூடாது என்று இந்தியா கருதுகிறது. ஆனால் அதை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. சீனாவும், ரஸ்யாவும் சிரியா விடயத்தில் நடந்து கொண்ட முறை மேற்குலகை கடும் அதிருப்தி கொள்ள வைத்துள்ளது.மீண்டும் ஒரு முறை இந்த விவகாரத்தினால் குட்டுப்படுவதை மேற்குலகம் விரும்புமா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு இந்தியாவின் ஆதரவு கிடைத்து விட்டால், சீனாவினது செல்வாக்கு அதிகரிக்கும். அது இலங்கை மீதான இந்தியாவின் பிடியை தளர்த்தி விடும். எனவே இந்த விடயத்தில் இந்தியா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தீர்மானம் ஒன்றுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. ஒன்றுக்குப் பல முறை யோசித்தே முடிவு எடுக்கும். இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஒரு கருவியாகத் தான் அமெரிக்கா கருதுகிறது. அதாவது நல்லிணக்கம், அமைதி, இனப்பிரச்சினைக்கான தீர்வு போன்றவற்றை அடைவதற்கான ஒரு கருவியாகவே அமெரிக்கா இதனைப் பார்க்கிறது எனவே மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அடுத்த நாளே ஸ்ரீலங்கா அரசையும் மஹிந்த ராஜபக்சவையும் குர்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடப் போவதில்லை. இத்தீர்மானம் நாட்டின் ஆட்சியாளரை சர்வதேச அரங்குகளில் வெட்கித் தலைகுனிய வைப்பதற்கான ஒரு கருவியாக அமையலாம். அதையும் விட உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற கடன் வழங்கும் அமைப்புக்களிலிருந்து கடன்களைப் பெற்றுக் கொள்வது சிரமமான காரியமாக அமையலாம். தனிப்பட்ட நாடுகளும் கூட தமது பொருளாதார உதவிகளை நிறுத்திக் கொள்ளலாம். தன்னார்வ அமைப்புக்கள் ஸ்ரீலங்காவை பகிஸ்கரிக்குமாறு பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம். ஸ்ரீலங்காவிற்கு உல்லாசப் பயணம் செல்ல வேண்டாம் எனவும் ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி பொருட்களை கடைகளில் வாங்க வேண்டாம் எனவும் அவை மக்களை கேட்டு பிரச்சாரம் செய்யலாம். மிக அண்மைக்காலம் வரை பர்மா மீது இத்தகைய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அதிகாரத்தின் பெயரால் ஒரு உயிர் பறிக்கப்பட்டதற்கும் ஒரு நபர் காணாமல் போனதற்கும் காரணமாயமைந்தது எது அல்லது யார் என்ற வினாவிற்கு விடை சொல்ல வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. இறுதி யுத்ததின் முடிவில் தமது பிள்ளைகள் அல்லது உறவினர் இராணுவத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டதை நேரில் கண்டவர்கள் இன்றுவரை அவர்கள் ஏன் திரும்பி வரவில்லை என்ற கேள்விக்கு விடைதேடி காத்திருக்கிறார்கள். அதேபோல் ஒயாத அலைகளின் போது கைதிகளாகப் பிடிக்கபட்ட இராணுவ உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உண்டு. பிரிவும் உயிரிழப்பும் தருகின்ற துயரத்திலிருந்து மீண்டெழுந்து தமது வாழ்க்கையை முன்னோக்கி சீரமைத்துக் கொள்வதற்கான மனரீதியான மற்றும் பொருளியல்ரீதியான உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் முக்கியமான கடமை. அதற்கும் ஒருபடி மேலே சென்று இனங்களுக்கிடையேயான சுமுக உறவையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அரசின் மிக முக்கிய பொறுப்பு. நாட்டு மக்கள் அனைவரினதும் சுமுகமான எதிர்காலத்தை மனதில் கொண்டு ஐ. நா. தீர்மானம் தரக்கூடிய அழுத்தங்கள் எதிநோக்கப்பட வேண்டும். ஏற்கனவே கற்றுக் கொண்ட அனுபவப் பாடங்கள் இத்தகைய பெருந்துயர் கொண்ட பேரழிவு மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும் சமூகங்களுக்கிடையேயான நட்பும் புரிந்துணர்வும் வளர்வதற்கான காரணியாகவும் அமைய வேண்டும். தீர்மானத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளைவிட மக்களின் எதிர்காலம் குறித்த அக்கறை முன்னிறுத்தப்பட வேண்டும். இன்றைய நிலையில் அமொரிக்காவின் இந்த நடவடிக்கைளுக்கு இந்திய அரசின் ஆதரவும் ஆசிர்வாதம் தான் காரணம் என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்களா ? இனியாவாது தமிழர்கள் ஒன்றிணைந்து இந்தியாவின் ஆதரவுடன் இனப்பிரச்சi தீர்ப்பதற்க்கு ஒன்றுபடுவார்களா என்ற கேள்வி தான்

Aucun commentaire:

Enregistrer un commentaire