mercredi 29 février 2012

வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்கு ஏதுவாக போலி ஆவணங்கள் தயாரிக்கும் இடமொன்றை வவுனியாவில் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்

போலி ஆவணங்கள் தயாரித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். வெளிநாட்டில் வாழும் தமிழர்களை விசாரணையொன்றுக்காக இராணுவ முகாமுக்கு வருமாறு தெரிவித்துப் போலி கடிதங்கள் தயாரித்து ரப்பர், சீல் குத்தப்பட்டு பெருந்தொகையான பணத்துக்கு விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். ஜோசப் முகாம், கண்டி வீதி, வவுனியா என்ற விலாசத்தை குறிப்பிட்டே இந்த போலி கடிதங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன என வவுனியா இராணுவ முகாமின் அதிகாரிகள் சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவத்துள்ளன. இத்தகவலின் அடிப்படையிலேயே பொலிஸார் போலி ஆவணங்கள் தயாரித்தவர்களை கைது செய்துள்ளனர். போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்கள், ரப்பர் சீல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமை புரியும் லிகிதர் ஒருவரும், அலுவலக உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இராணுவத்தினர் விசாரணைக்கு அழைத்து தம்மை துன்புறுத்துவார்கள். சித்திரவதை செய்வார்கள் எனவே நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என வெளிநாடுகளில் காண்பிப்பதற்காகவும் இலங்கையில் தான் இவ்வாறு இராணுவத்தினரின் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதால் இங்கு வாழ முடியாது. வெளிநாட்டில் புகலிடம் கோருவதற்காகவும் இவர்கள் போலி ஆவணங்களை தயாரித்து வழங்பியுள்ளதாகத் தெரியவருகிறது

Aucun commentaire:

Enregistrer un commentaire