dimanche 30 septembre 2012

கிழக்கு மாகாண சபையின் சபை முதலவர் தமிழர்


கிழக்கு மாகாண சபையின் முதல்வராக தமிழ் உறுப்பினர் ஒருவரை முன்மொழிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கிழக்கு மாகாண சபையில் எந்த ஒரு தமிழ் உறுப்பினருக்கும் எந்த பதவியும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் மாகாண சபையின் சபை முதலவராக தமிழர் ஒருவரை நியமிக்க தீர்மானித்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் ஆளும் கட்சி தலைவர் பதவியை தங்களுள் ஒருவருக்கு வழங்குமாறு ஏற்கனவே அனைத்திலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரிஸினுள் காணப்படுகின்ற முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகஇ கட்சியின் உயர்பீடத்தை கூட்ட வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவளித்திருந்தமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் சில உறுப்பினர்களுக்கு இன்னும் உடன்படவில்லை என்று கூறப்படுகிறது.
அத்துடன் இவ்வாறான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீடத்தை கூட்டுமாறு கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிர முயற்சி மனிக்பாமை ஆக்கிரமிக்க இராணுவம் 6,000 ஏக்கரில் பெருமளவை விழுங்குகிறது


news

 இறுதிப் போரின்போது இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்ட "மனிக் பாம்' எனப்படும் மாணிக்கம் பண்ணை, மூடப்பட்டதைத் தொடர்ந்து அதன் பெருமளவு நிலப் பகுதியையும் தம் வசப்படுத்த படையினர் முயன்று வருகின்றனர்.
 
 எஞ்சிய பகுதியில் அரச திணைக்களங்களும் தனியார் நிறுவனங்களும் பங்கு கேட்டு வருகின்றன. செட்டிகுளம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள 6,000 ஏக்கர் நிலப் பகுதியில் இடம்பெயர்ந்தோருக்கான தடை முகாம்கள் அமைக்கப்பட்டன. 
 
படிப்படியாக அங்கிருந்து மக்கள் வெளியேறி மீளக் குடியமர்ந்ததை அடுத்து அதன் பெரும் பகுதியைத் தன் கைவசப்படுத்தும் பணிகளை இராணுவம் ஆரம்பித்துள்ளது.
 
"செட்டிகுளத்தில் காணிகள் தருமாறு கேட்டு பல தரப்பினரிடம் இருந்தும் எமக்கு  விண்ணப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை நாம் கவனமாகப் பரிசீலித்து வருகின்றோம். 
 
தீர ஆராய்ந்த பின்னர் அது பற்றி முடிவெடுப்போம்'' என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக பண்டார தென்னக் கோன் தெரிவித்தார். மனிக் பாம் தடுப்பு முகாமின் வலயம் 3 அமைந்திருந்த பகுதியில் ஏற்கனவே இராணுவத்தினர் 200 ஏக்கர் நிலப்பகுதியைத் தம் வசப்படுத்தி விவசாயப் பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர். 3 கோடி ரூபாய்க்கு மேல் அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இராணுவத்தினரால் பண்ணை அமைக்கப்பட்ட பகுதியினுள் 35 முஸ்லிம் குடும்பங்களினுடைய காணிகள் அகப்பட்டுக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. அவற்றைத் தங்களிடம் திரும்பி ஒப்படைக்குமாறு அந்தக் குடும்பங்கள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று அண்மையில் வவுனியா செயலகத்தில் நடைபெற்றுள்ளது. 
 
இந்தப் பகுதியில் தமக்கு 40 ஏக்கர் காணி தேவை என தொல்பொருள் திணைக்களமும் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றும் தொழிற்சாலை அமைப்பதற்காக அந்தப் பகுதியில் காணி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. 
 
இவை தவிர்ந்த ஏனைய பெருமளவு நிலப்பகுதிகளைத் தன்வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் படைத்தரப்பு மேற்கொண்டு வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றனர்.........கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் சினி சன்முகத்தின் கானி என்பது குறீப்பிடத்தக்கது  .சன்முகத்தையும் அவர் தம்பிஜையும் பிரேமதாச காலத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார்கள் கானி அபகரிக்கப்படலாம்  என்றூ செட்டிகுளம் மக்கள்  விசினம் தெரிவிக்கின்றார்கள்

இராணுவத்துக்காக காணி சுவீகரிக்க வேண்டாம்'



இலங்கை உச்சநீதிமன்றம்இலங்கை உச்சநீதிமன்றம்அம்பாறை மாவட்டத்தில், ஒலுவில் பிரதேசத்திலுள்ள கேசன்கேணி கிராம மக்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்காமல் அவர்களின் காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தடுக்கும் விதத்தில் இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கேசன்கேணி மக்களில் சிலர் தாக்கல்செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமது குடியிருப்பு பகுதிக்கு வந்த இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைக்க வேண்டியிருப்பதால் அங்கிருந்து தம்மை வெளியேறுமாறு உத்தரவிட்டதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
இந்த அறிவித்தலை அடுத்து பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் இன்னும் 50 குடும்பங்கள் வரை தமது இருப்பிடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கேசன்கேணி மக்கள் வழக்கில் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களின் வாழ்விடப் பிரதேசங்கள் பெருமளவில் இராணுவ முகாம்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மக்களின் வாழ்விடப் பிரதேசங்கள் பெருமளவில் இராணுவ முகாம்களுக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்
இந்த மனுதொடர்பில் அரச தரப்பு விளக்கங்களை முன்வைத்த சட்டமாஅதிபர், இராணுவமுகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு பதிலாக மாற்றிடங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் கூறினார்.
குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால் அவர்களுக்கு அந்த தொழிலை கொண்டுநடத்தக்கூடிய விதத்திலான மாற்றுக்காணிகளே வழங்கப்பட வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பான சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் அக்டோபர் 17-ம் திகதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், மாற்றுக் காணிகளை வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அன்றைய தினம் அறிவிக்கவேண்டும் என்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

samedi 29 septembre 2012

ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு, சகோதர யுத்தமே காரணம்! பழ. நெடுமாறனுடைய பொய்யான, நஞ்சுத்தனமான அறிக்கைகளுக்கு ஈ.என்.டி.எல்.எப். (E.N.D.L.F.) பதில். Part - 1


  05-09-2012 தேதியிட்ட ஜூனியர் விகடன் வார இதழில் பழ. நெடுமாறன் எழுதியுள்ள, “சகோதரச் சண்டையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்” என்ற தலைப்பிட்ட கட்டுரையில் எங்களது ஈ.என்.டி.எல்.எப். இயக்கம் பற்றித் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இவர் இப்படித் தன்னுடைய கற்பனையை வரலாறாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

   “டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், பிளாட் ஆகிய இயக்களிலிருந்து விலகியவர்களை ஒன்றுசேர்த்து ஈ.என்.டி.எல்.எப். என்னும் ஓர் அமைப்பை “ரா” உளவுத்துறை உருவாக்கியது. இதற்குத் தலைவராக பரந்தன் ராஜன் என்பவர் பொறுப்பேற்றார்.” இந்த அமைப்புக்கும் ஆயுதங்கள் வழங்கி தமிழ்ப் பகுதியில் புலிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய மக்களை மிரட்டவும், படுகொலை செய்யவும் ‘ரா” உளவுத்துறை பயன்படுத்தியது.” என்று ஜூனியர் விகடனில் நெடுமாறன் எழுதியுள்ளார்.

   ஈழத் தமிழ் இனத்தின் வரலாறுப் பேராசிரியராய் மாறிய பழ.நெடுமாறன் பல்வேறு விரிவுரைகளை வழங்கியுள்ளார் ஜூனியர் விகடன் இதழில்!

   இவர் பற்றி மதுரையில் இருக்கும் பேராசிரியர் ஒருவரிடம் விசாரித்தோம். “அந்த ஆள் ஒரு வெட்டிப் பயலுங்க” அவருக்கெல்லாம் நீங்கள் பதில் கூற வேண்டியதில்லை என்றார். ஆனால் வாரப் பத்திரிகையை வாங்கிப் படிக்கும் தமிழ் மக்கள் இந்த நபரது பொய்யை உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்பதால் நாம் பதில் கூற வேண்டியுள்ளது.

   பிளாட் இயக்கத்தில் இருந்து பிரிந்தவர்கள்தான் ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தினை ஆரம்பித்தவர்கள். ஈ.என்.டி.எல்.எப். இயக்கத்தில் ஒரு டெலோ உறுப்பினரோ அல்லது ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினரோ இணைந்ததில்லை. எங்களுடைய (ஈ.என்.டி.எல்.எப்.) இயக்கத்தில் இதுவரை நாம் பிற இயக்கத்தவர் எவரையும் இணைத்துக் கொண்டதும் கிடையாது என்பதை இந்தப் பொய்யருக்குக் கொடுக்கும் பதில் மூலம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். “பிளாட்” இயக்கத்தினுள் நடைபெற்ற படுகொலைகளைத் தொடர்ந்து அவ்வியக்கம் உடைந்தது. பிளாட் இயக்கத்தினுள் படுகொலைகளை நிகழ்த்தும்படி “ரா” அமைப்பு உமாமகேசுவரனைத் தூண்டிவிடவில்லை. புலிகளுக்கு நெடுமாறன் போன்று, உமா மகேசுவரனுக்குத் தூண்டிவிடும் நபர்கள் யாரும் இருந்ததில்லை. உமாமகேசுவரனது சொந்த முடிவுகளாலேயே இயக்கத்தினுள் படுகொலைகள் நிகழ்ந்தன. ஈ.என்.டி.எல்.எப். உருவானதற்கும் “ரா” அமைப்பிற்கும் எதுவித தொடர்பும் கிடையாது.

   நாங்கள் எந்த உளவுத் துறையையும் சார்ந்திருந்ததில்லை. அதே போன்று எங்களுடைய எதிரியான இலங்கை அரசிடமும் நாம் சோரம் போனதில்லை. நண்பன் யார்? எதிரி யார்? என்பது தெரியாத மூடர்கள் அல்ல நாம். போர் முனையில் முன்னாலும் சுட்டு, பின்னாலும் சுடும் பைத்தியம் எங்களுக்கு இருந்ததில்லை.

   விடுதலைப் புலிகள் இயக்கம், தமிழர்களின் எதிரியான சிங்கள அரசிடம் 1988இல் மண்டியிட்டவர்கள். யாரிடமிருந்து விடுதலையைப் பெற வேண்டுமோ அவர்களிடமே சென்று, உறவு கொண்டாடி, பணம், ஆயுதம், புகலிடம் என்று பெற்று, விடுதலைப் போராட்டத்திற்கே புலிகள் களங்கம் விளைவித்தனர். ஈ.என்.டி.எல்.எப். இயக்கம் இது போன்று பச்சோந்தி விடுதலைப் போராட்டம் நடத்தியதில்லை.

   1989ஆம் ஆண்டு பிரேமதாச சிறிலங்காவின் ஜனாதிபதி ஆன இரண்டே மாதங்களில் 1989 மார்ச்சு 12ஆம் தேதி மட்டக்களப்பு மாவட்டத்தின் புல்லுமலை என்னும் இடத்தில் வைத்து இலங்கை இராணுவ உளவுத்துறை 2 கண்டயினர் ஆயுதங்களையும் அவற்றுக்கான குண்டுகளையும் புலிகளுக்கு வழங்கினர். மூன்றாவது கண்டயினரை அந்தப் பகுதியின் சிங்கள இராணுவத் தளபதி கைப்பற்றிப் புலிகளுக்கு வழங்காமலேயே தமது முகாமுக்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

   “பிரேமதாசாவுக்கு என்ன பைத்தியமா? தமிழர் எங்களின் எதிரிகள். புலிகள் எங்களின் (சிங்கள) சிப்பாய்கள் பலரைக் கொன்றவர்கள். அவர்களுக்கு ஆயுதங்களை நாங்களே வழங்குவதா?”

   திருமதி. சந்திரிகா குமாரத்துங்கா அரசில் நடந்த விசாரணை வேளையில் அந்த அதிகாரி தமது வாக்கு மூலத்தின் போது மிகவும் ஆத்திரம் கொண்டு நீதிமன்றத்தில் தெரிவித்தவை இவை!

   லோரன்ஸ் திலகர், அடேல் பாலசிங்கம், அன்ரன் பாலசிங்கம், யோகரட்னம் (யோகி), பரமமூர்த்தி ஆகிய விடுதலைப்புலிகளின் புpரதிநிதிகள் ஜனாதிபதி பிரேமதாசாவுடன் காணப்படுகின்றனர். 1989 மே 5ம் தேதி எடுக்கப்பட்டது இந்தப்படம். தமிழரின் எதிரியான சிங்கள அரசின் ஜனாதிபதி பிரேமதாசாவுடன்டன் கூட்டுச் சேர்ந்து தமிழர் இயக்கங்களையும், உதவிக்கு வந்த அமைதிப்படையையும், தமிழ் அரசியல் கட்சிகளையும் கூட தாக்கி அழித்தனர் புலிகள்.

   உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் இது போன்று எதிரியிடம் மண்டியிட்டுக் கையேந்தவில்லை; எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று சக போராளி இயக்கத் தலைவர்களையும், அவர்களது இயக்க அங்கத்தினரைப் படுகொலை செய்தவர்கள் புலிகள் மட்டுமே. பிரேமதாசா சிங்கள இராணுவத்தைத் தாக்குவதற்காவா ஆயுதங்களைப் புலிகளுக்கு வழங்கினார்? எந்த ஒரு தமிழ் இயக்கமும் எமது எதிரியிடம் மண்டியிட்டுக் கையேந்தவில்லை. இப்படியான செயலை ஆரம்பித்து வைத்தவர்களே புலிகள்தான். உலகத்திலேயே மிகவும் வெக்கக்கேடான போராட்டம் ஈழத்தில்தான் நடந்தது என்றால் அது மிகையல்ல. துரோக வழியில் பெற்ற ஆயுதங்களைக் கொண்டுதான் புலிகள் இயக்கம் இருபதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்களைக் கொன்றனர் என்பதை மிகவும் சுலபமாக மறைத்துவிட்டார் நெடுமாறன்!

   “1991ஆம் ஆண்டு பிரேமதாசா சிறிலங்காவின் ஜனாதிபதியானதும் இந்திய அமைதிப்படையை வெளியேற வேண்டும்; மாகாண அரசைக் கலைக்க வேண்டும்” என்று கோரினார் என்று நெடுமாறன் கூறியுள்ளார்.

   பிரேமதாச 1989-02-01இல் குடியரசுத் தலைவரானார். அமைதிப்படை வெளியேற வேண்டும், மாகாண அரசைக் கலைக்க வேண்டும் என்று தமிழகத்தின் தெருக்களில் நின்று நெடுமாறன் வகையாறாக்கள் கூச்சல் போட்டதை மறைத்து, பிரேமதாச கோரிக்கை வைத்தார் என்று கதைவிடுகிறார் நெடுமாறன். இந்த நபர் செய்த தவறுகளை மறைத்து ஏனையவர்கள் மீது பழி சுமத்தி தன்னைப் புனிதராகக் காண்பிக்கிறார் பழனி. நெடுமாறன்!

   இந்த வரலாற்று ஆசிரியர் இன்னும் ஓரு வரலாற்றுக் குறிப்பையும் தமிழருக்கு எடுத்துரைத்துள்ளார். அதாவது, “குட்டிமணியின் மரணத்துக்குக் காரணம் சிங்களவரல்ல் நம்மவர்களில் ஒருவரான கருணாநிதிதான்”

   27-06-2012 தினமணி நாளிதழின் நடுப் பகுதியில் நெடுமாறனின் வரலாற்றுப் பேருரை உள்ளது. அதில், “1973ஆம் ஆண்டு தமிழ் நாட்டிலிருந்து செயற்பட்ட டெலோ இயக்கத் தலைவர்களில் ஒருவரான குட்டிமணியை, வெடிப்பொருள்கள் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் தமிழகக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி சிங்களக் காவல்துறை கேட்டபோது ஒப்படைக்க உத்தரவிட்டவர் முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த இதே கருணாநிதிதான். இதன் விளைவாக ஈழப் போராட்ட இயக்கத்தின் தளபதிகளில் ஒருவராகத் திகழ்ந்த குட்டிமணி சிறையில் அடைக்கப்பட்டு 1983ஆம்; ஆண்டில் சிறையிலேயே கொடூரமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டார். குட்டிமணியின் மரணத்துக்கு இந்தக் கருணாநிதிதான் காரணம்”

   இதுதான் நெடுமாறனின் ஆராச்சிக் கண்டுபிடிப்பு! இந்த நபர் ஓர் அப்பட்டமான பொய்யர் என்பது யாராலுமே கண்டுபிடிக்க முடியாதிருந்தது. காரணம் இவரது பொய்ப் பிரச்சாரங்களுக்கு யாருமே பதில் கொடுத்ததில்லை. இதனால் தொடர்ந்தும் பொய்யுரைத்து வருகிறார்.

   புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் ஏமாற்றிப் பணம் பறிப்பதை நாம் குறை கூறவில்லை. ஆனால் ஈழத் தமிழரின் வரலாற்றைத் திரித்து ஈழத் தமிழருக்கே பாடம் புகட்ட முன்வரக்கூடாது இந்த நெடுமாறன்.

   குட்டிமணி பற்றிய உண்மைச் செய்தியைத் தருகிறோம்: இவை யாரோ சொல்லக் கேட்டதோ, அல்லது யாரோ எழுதப் படித்தவையோ அல்ல. குட்டிமணியின் கைது விவரம்!

   1973ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் தமிழகத்தில் தங்கியிருந்த குட்டிமணி அவருடைய உறவினரது படகு ஒன்றில் 40,000 (நாற்பதாயிரம்) டெட்டனேற்றர்களை(Detonators) யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தப் படகு நடுக்கடலில் பழுதாகி நின்ற போது சிங்களக் கடற்படையிடம் மாட்டிக் கொண்டது. இலங்கைப் பத்திரிகைகள் பெரிய செய்தியாக இதனை வெளியிட்டன. அதே ஆண்டின் (1973) ஜனவரி, பெப்பரவரி, மார்ச்சு மாதங்களில் தமிழ் மாணவர் பேரவையின் முக்கிய தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். இதில் திரு. சத்தியசீலன் அவர்கள், திரு. ஞானசேகரன் (ராஜன், ஈ..என்.டி.எல்.எப். தலைவர்), திரு. சிறிசபாரெத்தினம் (டெலோ தலைவர்), திரு. மாவை சேனாதிராசா, திரு சபாலிங்கம் (1994-05-01இல் புலிகளால் பிரான்சு நாட்டில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டவர் ), திரு. முத்துக்குமாரசாமி, திரு. நாராயணதாஸ் போன்றோர் அடங்குவர். இந்தக் காலகட்டத்தில் குட்டிமணி அனுப்பிய டெட்டனேற்றரும் கடலில் வைத்துப் பிடிபட்டதால் சிங்கள உளவுத் துறை இரண்டையும் முடிச்சுப் போட்டு குட்டிமணியின் வல்வெட்டித்துறை வீட்டை முற்றுகையிட்டது.

   அங்கு எதுவும் சிக்காதபடியினால் வீட்டிலிருந்த குட்டிமணியின் அக்காவின் கணவரான திரு. இராசேந்திரம் என்பவரைக் கைது செய்து தமிழ் மாணவர் பேரவையினரை அடைத்து வைத்திருந்த “கண்டி போகம்பறைச் சிறைச் சாலை”யில் அடைத்தனர்.

   குட்டிமணி சரணடைந்தால்தான் அவருடைய மைத்துனரை விடுவிப்போம் என்று உளவுத்துறை கூறிவிட்டது. திரு. இராசேந்திரம் அவர்கள் நோய்வாய்பட்டவர், அவர் சிறையில் இருப்பது ஆபத்தானது. காரணம் மருந்துவ வசதிகள் கண்டிச் சிறையில் இல்லை. குறிப்பாகத் தமிழ்க் கைதிகளைத் தனிமைப்படுத்திதான் வைத்திருந்தனர் சிறை அததிகாரிகள். குட்டிமணிக்கும் தருமசங்கடமான நிலை. திரு. இராசேந்திரம் அவர்களைப் பார்வையிட மாதம் ஒருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தரும் குட்டிமணியின் சகோதரி அழுது கொண்டு வீடு திரும்புவார்.

   தம்முடைய மைத்துனரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் குட்டிமணி சரண் அடைவதைத் தவிர வேற வழியில்லை. எனவேதான் குட்டிமணி சரணடையும் முடிவை எடுத்தார். நேரடியாக இலங்கை சென்று சரணடைந்தால் சிங்கள உளவுத் துறை படுகொலை செய்துவிடுவார்கள் என்று கருதி, இந்தியாவில் சரணடைந்தால், சர்வதேச ரீதியில் உயிருக்குப் பாதுகாப்பு இருக்கும் என்று சட்ட ஆலோசகர்கள் அறிவுரை வழங்கியதால், 1973-11-18ம் தேதி அன்று குட்டிமணி தஞ்சை காவல்துறையிடம் சரணடைந்தார்.

   தமிழகத்திலிருந்து கொழும்புக்குத் தகவல் அனுப்பப்பட்டது. கொழும்பிலிருந்து பஸ்தியாம் பிள்ளை எனகிற உளவுத் துறை அதிகாரியின் தலைமையில் வந்த போலிஸ் படை குட்டிமணியைக் கொழும்புக்கு அழைத்துச் சென்றது. விசாரணையில் அந்த டெட்டனேற்றர்கள் வியாபார நோக்கில் அனுப்பப்பட்டவை, அல்லாமல் அவை பயங்கரவாதச் செயலுக்கு அல்ல என்று கண்டறியப்பட்டது. இருந்த போதிலும் குட்டிமணியும் கண்டி போகம்பறைச் சிறைக்குக் கொண்டுவரப்பட்டார். 1974 மே மாதத்தில் குட்டிமணியின் மைத்துனர் திரு. இராசேந்திரம் விடுவிக்கப்பட்டார். பின்னர் 1975 ஆம் ஆண்டு மே மாதத்தில் குட்டிமணி விடுவிக்கப்பட்டார். குட்டிமணியுடன் திரு. சிறிசபாரெத்தினம், மாவை சேனாதிராசா போன்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஈ.என்;.டி.எல்.எப். தலைவர் திரு. ஞானசேகரன் (ராஜன்) மற்றும் திரு. அமரசிங்கம் ஆகிய இருவரும் விடுவிக்கப்படவில்லை. தொடர்ந்து அவர்கள் சிறையில் இருந்தனர். இலங்கை அரசிடம் சரணடைய வேண்டும் என்ற முடிவினை குட்டிமணிதான் எடுத்தார். ஈழத் தமிழரது பிரச்சினையில் தமிழகத்தில் இலாபம் தேடும் முயற்சியின் விளைவே நெடுமாறனின் இந்த வரலாற்றுப் புரட்டுப் பாடம்.

   சிறையிலிருந்து வெளியே வந்த குட்டிமணி, சிறிசபாரெத்தினம், போன்றோர் மூன்று ஆண்டுகள் கழித்து, ஒன்றிணைந்து, 1978இல் “டெலோ” இயக்கத்தை ஆரம்பித்தனர். இவர்களுடன் 1980ஆம் ஆண்டு இறுதியில் இணைந்தார் பிரபாகரன். 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ;குரும்பசிட்டி என்ற ஊர்pல் இருந்த வன்னிய சிங்கம் என்பவரது அடைவுக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது. அதில் இரு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். பின் இந்தப் பணத்தைப் பயன்படுத்தி 1981 மார்ச்சு 25ஆம் தேதி யாழ்ப்பாணம் நீர்வேலி என்னும் இடத்தில் வைத்து “மக்கள் வங்கி”யின் பணம் வழிமறித்துக் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் கொள்ளையிடப்பட்ட பணம் 40,00,000 (நாற்பது இலட்சங்கள்). இந்த இரு கொள்ளைகளிலும் பிரபாகரன் நேரிடையாகக் கலந்து கொண்டார்.

   இந்தக் கொள்ளையில் தேடப்பட்டவர்களில், திரு. பிரபாகரன், திரு. சிறிசபாரெத்தினம், திரு.ஜெகன், திரு. குட்டிமணி மற்றும் திரு. தங்கத்துரை ஆகியோர் முக்கியமானவர்கள்.

   குட்டிமணி, தங்கத்துரை மற்றும் ஜெகன் ஆகிய மூவரும் 1981-04-05 அன்று குடத்தனை நாகர்கோவில் கடற்கரையில் வைத்து சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 மற்றும் 27ம் தேதிகளில் குட்டிமணி, தங்கத்துரை உட்பட மொத்தம் 53 தமிழ் இளைஞர்கள் வெலிக்கடைச் சிறையில் வைத்து சிங்களக் கைதிகளாலும், சிறை அதிகாரிகளாலும் இராணுவத்தின் துணையுடன் படுகொலை செய்யப்பட்டனர்.

   1974ஆம் ஆண்டு கொழும்புச் சிறைக்குச் சென்ற குட்டிமணி 1983ஆம் ஆண்டு வரை அதாவது 9 ஆண்டுகள் சிறையிலா இருந்தார்?

   நெடுமாறன் எந்தவிதமான கற்பனையில் இந்தக் கதையை இட்டுக்கட்டினார்? இவரிடம் யார் வரலாறு கேட்டது? தானாகத் தனது சிறு மூளைக்கு எட்டியதை எழுதுகிறாரா? அல்லது கோமாளி அரசியலா? வரலாறு யாருக்குத் தெரியப் போகிறது என்ற எண்ணத்தில்தானே இந்தப் புதிய வரலாறு சொல்லும் தொழிலைத் தொடர்கிறார்.

   “பழ நெடுமாறன்” புலிகள் இயக்கத்தின் தமிழ் நாட்டுத் தளபதி என்கிற அளவுக்கு தன்னைத் தானே விளம்பரங்கள் மூலமாக உயர்த்திக் கொண்டவர். அடிக்கடி அறிக்கை விடுவதும் எந்தக் கட்சியாவது ஈழத் தமிழ் மக்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினால் அந்த இடத்தில் ஆஜராகி (அழைக்காமலேயே) புகைப்படம் எடுத்துப் பிற நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். படத்தைப் பார்த்த ஈழத் தமிழர்கள் பழ. நெடுமாறன்தான் தலைமை ஏற்றுப் போராட்டத்தை நடத்துகிறார் என்று நம்பி இவருக்கு அமெரிக்க டாலர்களாக பணம் அனுப்பி வைப்பார்கள்.

   இப்படியாக இவரது வாழ்க்கை ஈழத் தமிழர்களின் பணத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் வேளையில் 2009-க்குப் பின் வரவு குறையத் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், விடுதலைப் புலிகள் என்னும் அமைப்புக்கு அதிகாரப் பூர்வமாக உரிமை கோர யாரும் இல்லாததைக் கண்டு மீண்டும் எழுச்சி பெற்ற நெடுமாறன் வாராவாரம் கதைகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார். தினசரிகளிலும், வார இதழ்களிலும் தொடர்ந்து இவருடைய கட்டுரைகளும் அறிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன. இதுவரையில் சில முக்கியமானவர்கள் புலிகளின் பெயரைப் பயன்படுத்திப் பிழைப்பு நடத்தியுள்ளனர். அந்த வகையில் இவரே முதன்மையானவர். வயிற்றுப் பிழைப்புக்காகக் கதை சொல்லுகிறார் என்று கருதி இவருடைய நஞ்சு கலந்த அறிக்கைகளுக்குப் பதில் கொடுக்காமல் விட்டு விட்டோம். பதில் கொடுக்காதபடியால் மீண்டும் மீண்டும் எழுதி அதையே வரலாறு ஆக்கிவிடுவார் போலத் தோன்றுவதால் எங்களது இயக்கத்தினால் இவருடைய கூற்றுகளுக்குப் பதில் கூறவிழைகிறோம்.

   குறிப்பாக, ஈழ விடுதலை பற்றிய வரலாறு பழ, நெடுமாறனுக்குத்தான் தெரியும், அவர்தான் “ஈழத்துப் பல்கலைக்கழகம்” என்று பலரும் கருதும்படியாகத் தன்னை வளர்த்துக் கொண்டார் இந்த நபர். தனது தோற்றத்தினாலும் புகைப்படங்களுக்கு கம்பீரமாக நின்று வடிவம் கொடுப்பதனாலும் தமிழக மக்களையும், ஈழத் தமிழர்களையும் திறம்பட ஏமாற்றி வந்துள்ளார். இவருடைய ஏமாற்று வேலையை வெளிப்படுத்த வேண்டியது ஈழ மக்கள் சார்பாக எங்களுடைய கடமையாகிறது.

   பழ. நெடுமாறனாக மாறிய காமாட்சி:

   இவரது இயற் பெயர் “பழனியப்பன் காமாட்சி” இந்த “காமாட்சி” என்னும் பெயரை மாற்றிக் கொண்டு பழ. நெடுமாறனாக அரசியலுக்குள் நுழைந்தார். பெயரைக் கேட்டால் தமிழருக்கு ஓரு பயம் வரவேண்டும் என்கிற நோக்கில் பெயரை மாற்றிக் கொண்டதாக மதுரையில் கூறினர்.

   இவரது குடும்பத் தொழில் ஆண்டுக்கொருமுறை பஞ்சாங்கம் அச்சிட்டு விற்பனை செய்வது. வேறு எந்த வருமானமும் இல்லாத நிலையில்தான் ஈழத் தமிழரின் விடுதலைக்காகப் போராட வந்த இளைஞர்களின் தொடர்பை எற்படுத்திக் கொண்டார். குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, இலங்கையிலிருந்து வருபவர்களை தமிழகத்தில் சில நபர்கள் ஏமாற்றிப் பொருள்கள், பணம் என்று பெற்றுக் கொண்டு அவர்களை மோசம் செய்த சம்பவங்கள் 1970 மற்றும் 1980 களில் வாடிக்கையாக இருந்தன. பழ. காமாட்சிக்கும் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்ட போது இலங்கையிலிருந்து வந்தவர்களுக்கு உதவிகள் செய்தால் வருவாய் கிடைக்கும் என்று நம்பினார். அவரது கணக்குச் சரியாக இருந்தது. அன்றைய நிலையில் ஈழத்து இளைஞர்களுக்குக் கட்சி, தொழில், வருவாய் இல்லாத நபர் தேவைப் பட்டது. அவர்களது தேவைக்கு இவர் சரியானவராக இருந்தார்.

   காமாட்சியும் (நெடுமாறன்) எதிர்பார்த்த மாதிரியே வருவாய் கொட்டியது. இந்த வருவாய்க்கு நிகர் வேறு ஏதும் இருக்க முடியாது. தமிழகத்து மக்களுக்கு ஈழ விடுதலையின் தூணாகத் தன்னைக் காண்பித்தார். ஆனால் இவருக்குத் தூணாக இருந்தது பணம்தான் என்பது எவருக்கும் தெரியாது. இவரது தோற்றத்தைப் பார்த்தால் பஞ்சத்தில் அடிபட்ட பிச்சைக்காரன் போல் தோன்றும். “இவரிடம் பணமா! இருக்கவே வாய்ப்பில்லை” என்று அனைவரும் சொல்வர். பல கோடிகளுக்கு அதிபதி என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் தெரியும். “போராளிகளை குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்கும்படி எம்.ஜி.ஆர் அவர்கள் அழைப்பு விடுத்ததார். அதற்கு முதல்நாள் கலைஞர் போராளிகளை அழைத்து அவர்களுக்குள் பகையை உண்டுபண்ணிவிட்டார்” என்று காமாட்சி நெடுமாறன் ஜூனியர் விகடன் வார இதழில் கூறியுள்ளார்.

   முன்னாள் முதலமைச்சர் எ.ம்.ஜி.ஆர். அவர்கள் ‘ஈழ விடுதலை இயக்கப் போராளிகளை ஒரு போதும் பகிரங்கமாக அழைத்ததில்லை’, அவர் இரகசியமாக அழைத்துப் பண உதவிகள் செய்துள்ளார். கலைஞர் 1984-இல் தனது பிறந்த நாளில் சேர்த்த பணத்தைப் போராளிகளுக்கு வழங்க பகிரங்கமாக அழைத்தார். இதில் ஒன்றுபடவிடாமல் தடுக்கும் நோக்கம் எங்கிருந்து வந்தது? விடுதலை இயக்கங்களுக்கு அவர் சேர்த்த பணத்தைச் சமமாக பிரித்துக் கொடுத்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அப் பணத்தைப் பெற்றுக்கொள்ளச் செல்லவில்லை. இதனால் இயக்கங்கள் பிரிந்து மோதிக்கொண்டனவா? என்ன, பணத்துக்காகவா இயக்கங்கள் போராடப் புறப்பட்டன? இந்த நபர் (காமாட்சி) பணத்திற்காகப் பணிகள் செய்வதால், கலைஞரின் பணத்தினால்தான் இயக்கங்கள் மோதிக்கொண்டன என்று இவராகவே முடிவெடுத்துக்கொண்டார் போலும்!

   எதற்காக இந்த காமாட்சி இப்படிக் கதை கட்டுகிறார்? யாருக்கு உண்மை தெரியப் போகிறது என்ற எண்ணத்தில் தானே இந்த வம்புச் செய்தி!

   “திம்பு மாநாட்டில் போராளிகள் ஒன்றுபட்டு வைத்த கோரிக்கையை இந்திய அரசு ஏற்கவில்லை, போராளிகளை மிரட்ட, “ரா” (இந்தியாவின் வெளிநாட்டு புலனாய்வு உளவு நிறுவனம்) அமைப்பு திட்டமிட்டது, “ரா” விரித்த வலையில் முதலில் டெலோ இயக்கமும் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கமும் விழுந்தன. புலிகளுடன் மோதும்படி இந்த இயக்கங்களுக்கு “ரா” அமைப்பு ஆயுதங்களை வழங்கித் தூண்டிவிட்டது. புலிகள் இயக்கத் தளபதி, கேப்டன் லிங்கம் என்பவரை டெலோ இயக்கத்தினர் படுகொலை செய்தனர். இதன் விளைவாகத்தான் மோதல் வெடித்தது. சிறிசபாரெத்தினம் கொல்லப்பட்டார்.” காமாட்சி ஜூனியர் விகடன் இதழில் இப்படி எழுதியுள்ளார். ஈழத்தவருக்கு பாடம் புகட்டும் இந்த ‘காமாட்சி” நெடுமாறன் திரித்த கயிறு மிகவும் பலவீனமானது. உண்மையைப் புரட்டி ஜோடித்துள்ளார் காமாட்சி.

   “திம்பு மாநாடு” தோல்விக்கான காரணம்:

   திம்பு மாநாடு 1985 ஜூலை 8 முதல் 13ம் திகதி வரையில் முதல் கட்டமாகவும், 1985 ஆகஸ்ட் 12 முதல் 17ம் திகதி வரையில் இரண்டாம் கட்டமாகவும் நடைபெற்றது. இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில் வைத்துச் சிங்கள இராணுவத்தினர் 200 தமிழர்களைப் படுகொலை செய்தனர். இப்பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தமிழர்களைக் கொல்லும் ஜெயவர்த்தனாவின் சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்று அனைத்துத் தமிழ் விடுதலை இயக்கங்களும் வெளியேறின. இதுதான் நடந்த உண்மை.

   இந்தியா சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எடுத்த முயற்சி தோல்வி கண்டதும் இந்திய அதிகாரிகளுக்கும் இயக்கங்களுக்கும் இடையில் மனப்பிணக்கு ஏற்பட்டது. இதனால், இயக்கங்களின் தலைவர்கள் இந்தியா திரும்பினர். டெலோ இயக்கத்தின் பிரதிநிதிகளாகத் திம்புவில் கலந்துகொண்ட திரு.சத்தியேந்திராவும், திரு. சந்திரகாசனும் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

   திம்;புவில் “ரா” வின் வலையில் டெலோவும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கமும் வீழ்ந்திருந்தால் டெலோ இயக்கப் பிரதிநிதிகளை எதற்காக நாடு கடத்தியது இந்தியா?

   காமாட்சி தொடர்ந்தும் பூச்சுற்றக் கூடாது. ஈழத் தமிழ் இனத்தின் வரலாற்றைத் தனது கோணல் புத்தியால் திரிபு படுத்தக்கூடாது.

   “திம்புப் பேச்சுவார்த்தை தோல்வி கண்டதும் டெலோ அமைப்புக்கு ஆயுதங்கள் கொடுத்து புலிகளை அழிக்கச் சொல்லியது “ரா” உளவுத்துறை. இதனைத் தொடர்ந்து புலிகளின் கேப்டன் லிங்கம் என்பவரை டெலோ இயக்கத்தினர் சுட்டுக் கொன்றனர். இதன் விளைவாகத்தான் இரு தரப்பினரிடையியேயும் மோதல் ஏற்பட்டு சிறிசபாரெத்தினம் கொல்லப்பட்டார்” இப்படி - ஜூனியர் விகடன் இதழில் காமாட்சி நெடுமாறன் கூறியுள்ளார்.

   இந்தியா வழங்கிய ஆயுதங்களால், புலிகள் செய்த படுகொலைகள்!

   திம்புப் பேச்சுவார்த்தை முடிவுற்றது 17-08-1985இல். டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரெத்தினம் அவர்கள் கொல்லப்பட்டது 06-05-1986 அன்று. அதாவது 9 மாதங்கள் புலிகளுக்கும் டெலோவுக்கும் மோதல் நடந்தது என்று காமாட்சி சரித்திரம் சொல்கிறாரா? லிங்கம் என்ற நபர் கொல்லப்பட்டதாக எந்தச் செய்தியும் கிடையாது. இது முழுக்க முழுக்க காமாட்சியின் கட்டுக்கதை!

   இவருடைய கூற்றுப்படியே வைத்துக் கொள்வோம், லிங்கம் என்பவர் கொல்லப்பட்டதற்காக 600 தமிழ் இளைஞர்களையா கொல்வது?

   அப்படியாயின் திரு. அமிர்தலிங்கம் போன்றோரைப் படுகொலை செய்ததற்காக புலிகளில் எத்தனை பேரைக் கொன்றிருக்க வேண்டும்!

   “எந்த இயக்கத்தையும் விடக்கூடாது. அனைவரையும் கொலை செய்ய வேண்டும்” என்பது விடுதலைப் புலிகளின் தலைவரது திட்டம். ஏனைய இயக்கங்கள் இருந்தால்தான் பின்நாளில் ஆட்சியில் பங்கு கேட்பார்கள். எனவே தீர்த்துக் கட்டிவிட்டால் புலிகளின் ‘நானே ராஜா நானே மந்திரி’ என்னும் கொள்கைக்கு வெற்றி கிடைத்துவிடும். இப்படியான கொள்கைக்குத் துணை போனவர்களில் நெடுமாறன் என்கிற இந்தக் காமாட்சி முக்கியமானவர்!

   “ரா’ வழங்கிய ஆயுதத்தினால் லிங்கத்தைக் கொன்றார்கள் என்று காமாட்சி சொல்கிறார். டெலோ இயக்கத் தலைவர் சிறிசபாரெத்தினம் அவர்களையும் அவரோடு அவருடைய இயக்கத் தோழர்கள் 600 பேரையும் புலியினர் படுகொலை செய்தனர். இவ்வளவு டெலோ போராளிகளையும் புலிகள் படுகொலை செய்தது “இந்தியா வழங்கிய ஆயுதங்களினால்தான்” என்பதை முற்றாக மறைத்துவிட்டார் இந்தப் பொய்யர்! இந்தியா வழங்கிய ஆயுதங்களிலால்தான் சிறிசபாரெத்தினம் அவர்களையும் ஏனைய 600 தமிழ் இளைஞர்களையும் புலிகள் படுகொலை செய்தனர்.

   இந்தியா அனைத்து முக்கிய தமிழ் இயக்கங்களுக்கும் ஆயுதங்கள் வழங்கியது உண்மை! அது எதற்காகவென்றால், தமிழர்கள் தங்களைத் தாங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். 1980களில் விடுதலை இயக்கங்களிடம் போதிய ஆயுதங்கள் இருந்ததில்லை. இலங்கை அரசு முப்படைகளையும் பயன்படுத்தி தமிழர்களை அழிப்பதால், தற்காத்துக் கொள்வதற்காகத்தான் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. தமிழர்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்வதற்காக இந்தியா கொடுத்த ஆயுதங்களினால்தான் சகோதர இயக்கங்களை அழித்தார் புலிகளின் தலைவர் பிரபாகரன்!

   யாழ்ப்பாண வீதிகளில் டயர்களைப் போட்டுத் தீயிட்டு, அதனுள் டெலோ இயக்க உறுப்பினர்களை வீசி எறிந்தனர் புலிகள். தீ கொழுந்து விட்டு எரியும் போது வேதனை தாங்காமல் டயரிலிருந்து தப்பிப்பவர்களைத் துப்பாக்கியால் சுட்டு மீண்டும் தீயினுள் போட்டனர். இந்தியா வழங்கிய ஆயுதங்களைச் சகோதர யுத்தத்துக்குத்தான் பயன்படுத்தினர் புலிகள். பலருடைய கைகளைக் கட்டிவிட்டு அவர்களின் கழுத்துகளில் டயரைப் போட்டு எண்ணெய் ஊற்றித் தீயிட்டனர்.

   சிங்கள இராணுவத்தினரும், சிங்களக் காடையர்களும் இது போன்று பல சந்தர்ப்பங்களில் தமிழர்களைக் கொன்றனர். 1958, 1977, 1980, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்கள் இனக்கலவரம் என்கிற போர்வையில் கொல்லப்பட்டனர். தமிழ் மக்களையும், தமிழர்களின் சொத்துகளையும் சிங்கள இனத்தவர் தீயிட்டுத்தான் அழித்தனர். சிங்களவர் தமிழர்களை அழித்ததை விட மிகவும் மோசமாகத் தமிழர்களைப் படுகொலை செய்தனர் புலிகள்.

   டெலோ இயக்கத்தினரைப் படுகொலை செய்து அழிப்பதற்கு “ரா” புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கித் தூண்டியது என்று டெலோ இயக்கம் குற்றம் சாட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி வீண்பழி சுமத்தவில்லை. காரணம்: புலிகளின் தலைவரைப் பற்றி அவர்களுக்கு (சிறிசபாரெத்தினம்) முன்னரே தெரியும். தூண்டுதல் தேவையில்லை; பிரபாகரன் அதிகார வெறி பிடித்தவர் என்பது முன்னரே தெரிந்த ஒன்றுதான். இதில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது ஒன்று உண்டு. சிறிசபாரெத்தினம் அவர்கள் கொல்லப்படும் போது அவர் யாழ்ப்பாணத்தில் போர் முனையில் நின்றார்; பிரபாகரன் சென்னை அடையாறு பகுதியில் இருந்தார். உண்மை இப்படி இருக்க டெலோ இயக்கத்தினரை அப்படியே துரோகிகள் என்று புரட்டிக் கதை சொன்னார்கள் புலிகளின் கோயபல்சுகள்(புரட்டுப் பொய்யர்கள்).

   டெலோ இயக்கத்தில் இணைந்துதான் பிரபாகரன் இரண்டு கொள்ளைகளை நடத்தினார். பணத்தில் பாதி கைக்கு வந்ததன் பின்னர் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் பிடிபட்டனர். அவர்கள் பிடிபட்ட பின்னர் இந்தியா வந்து மீண்டும் புலிகள் இயக்கத்தை தொடங்கினார் பிரபாகரன். பணமும், பலமும் வந்து சேர்ந்ததும்தான் தான் இணைந்திருந்த அதே இயக்கத்தை பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி அழிக்கிறார் பிரபாகரன்.

   டெலோ இயக்கத்தினரைப் படுகொலை செய்வதற்கு முன்னர், பிரபாகரன் ஈழத்தில் மைக்கல், அப்பன், சுந்தரம், ஒபரே தேவன் என்று பலரைக் கொன்றுள்ளார். சென்னை பாண்டிபசாரில் வைத்து உமா மகேசுவரன் மற்றும் கண்ணன் என்பவரையும் 1982ல் துப்பாக்கியால் தானே முன்னின்று சுட்டார். இதனால் ஏற்படவிருக்கும் அவமானங்கள் பற்றி அவர் கவலைப்படவில்லை. தமிழ்ப் போராளிகள் கடைத் தெருக்களில் சுடுபட்டுக் கொண்டார்கள் என்று சிங்களப் பத்திரிகைகள் கேவலப்படுத்தி எழுதின செய்திகளை. ஓரு விவேகம் உள்ள போர் வீரன் சக போராளியை அந்நிய நாடு ஒன்றில் வைத்து விவரமே தெரியாத பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கியால் சுடுவானா? அதிலும் குறிதவறி!

   “இராஜீவ் - ஜெயவர்த்தன” ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு நிராயுதபாணிகளாக நடமாடிய புலிகளை ஒழித்துக்கட்ட “ரா” உளவுத்துறை, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி ஏவிவிட்டது. 22 புலிகள் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் எடுத்த பதில் நடவடிக்கையின் விளைவாக டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கங்கள் முறியடிக்கப்பட்டு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

   காமாட்சியின் கண்டுபிடிப்பும் கட்டுக் கதையும் மேற்கண்டவாறு ஜூனியர் விகடன் இதழில்; உள்ளது. உண்மையில் காமாட்சியைக் கட்டுக்கதை வல்லுனர் என்று அழைக்க வேண்டும்!

   ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு நிராயுதபாணிகளாக நடமாடினராம் புலிகள்! பாருங்கள் எவ்வளவு யோக்கியமானவர்கள் புலிகள் என்று? இந்தியா சொன்னவுடன் அப்படியே ஆயுதங்களைக் கையளித்துவிட்டனராம். காமாட்சி கண்டுபிடித்துள்ளார். 1987-ஜூலை 29 முதல் 1987 அக்டோபர் 5ஆம் தேதி வரை மொத்தம் 68 நாள்களில் புலிகள் இயக்கத்தின் ஒட்டு மொத்தப் பணியுமே சகோதர இயக்க உறுப்பினர்களை வீடு வீடாகச் சென்று படுகொலை செய்வதாகத்தான் இருந்தது. இவ்விதம் 68 நாள்களில் மொத்தமாக 6000 (ஆறாயிரம்) தமிழ் இளைஞர்களை இவர்கள் படுகொலை செய்தனர். அமைதிப்படை வந்துவிட்டது, இனி அமைதி திரும்பிவிடும் என்ற நம்பிக்கையில் தத்தமது இல்லங்களில் தமது தாய்தந்தையரைப் பார்க்கச் சென்ற அப்பாவி இளைஞர்களை நயவஞ்சகமாக இரவு வேளையில் வேட்டையாடினர் புலிகள். இந்திய அமைதிப்படையினாலோ, தமிழர் அமைப்புகளினாலோ இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒவ்வொரு இரவிலும் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிகமான தமிழ் இளைஞர்களை எந்தப் புலி சுட்டுக் கொல்கிறாரோ அந்த நபருக்குப் பதவி உயர்வு வழங்கி மகிழ்ச்சியடைந்தார் பிரபாகரன்.

   22 புலிகள் படுகொலை செய்யப்பட்டனர் என்று பொய் உரைத்துள்ளார் காமாட்சி நெடுமாறன்! இந்தக் கால கட்டத்தில் 22 புலிகள் எந்த இடத்திலும் பிற இயக்கங்களால் கொல்லப்படவில்லை! காமாட்சி கூச்சமின்றிப் பொய்களை அள்ளி வீசுகிறார்!

   முதலில் டெலோ, பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப்., அதன் பின்னர் பிளாட் ஆகிய இயக்கங்களை அழித்து விட்டதாகவும் அவற்றைத் தடை செய்துவிட்டதாகவும் அறிவித்தனர் புலிகள். 1986 மே மாதம் முதல் 1987 மே மாதம் வரையிலும் சகோதர இயக்கங்களின் உறுப்பினர்களை இவ்விதம் படுகொலை செய்தனர் புலிகள். இதில் ஏறக்குறைய 2000 போராளிகளைக் கொன்றனர் புலி வீரர்கள்!

   இலங்கை அரசு புலிகளது செயலை ஊக்குவித்துப் பிற இயக்கங்களைப் புலிகள் அழிப்பதற்கு உதவிகளும் செய்தது. இந்திய அரசு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தித்தான் புலிகள் பிற இயக்க உறுப்பினர்களைக் கொன்றார்கள் என்பது ஈழத் தமிழர் அனைவருக்கும் நன்கு தெரிந்ததுதான். இந்தக் காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளது சமூகப் பொறுப்புணர்வு எப்படி இருந்தது என்பதை நாம் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.                                                                                        தொடரும்.......                                               

முதலாவது பௌத்த அறநெறி பாடசாலை ஆரம்பம் யாழ்ப்பாணத்தில் :



யாழ்ப்பாணத்தில் முதலாவது பௌத்த அறநெறி பாடசாலை ஆரம்பம் :

பௌத்த சமயத்தை பரப்பும் நோக்கிலும் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் யாழ்ப்பாணத்தில் முதலாவது பௌத்த அறநெறி பாடசாலை நாளைய (30) தினம் திறந்து வைக்கப்பட்டு, கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. யாழ்ப்பாணத்தில் இயங்கும் தமிழ் பௌத்த சங்கம் இதனை ஆரம்பித்துள்ளது.
 
யாழ்ப்பாணத்தில் பௌத்த அறநெறி பாடசாலை தொடங்குவது, இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த உதவியாக இருக்கும் என தமிழ் பௌத்த சங்கத்தின் தலைவர் ஏ. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

சோமாலியா தலைநகர் Mogadishu ல் ஊடகவியலாளர் ஒருவர் தலையற்ற நிலையில் சடலமாக மீட்பு

சோமாலியா தலைநகர் Mogadishu ல் ஊடகவியலாளர் ஒருவர் தலையற்ற

நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் Abdirahman Mohamed என்ற ஊடகவி யலாளரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் சோமாலிய அரசாங்கத்திற்கு சொந்தமான இணையத்தளம் ஒன்றில் பணியாற்றி வருவதாக குறிப்பிடப்படுகிறது அத்துடன், குறித்த ஊடகவியலாளரின் கொலை சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு அமைப்பினரும் பொறுப்பேற்காத நிலையில், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் சோமாலிய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதில் சோமாலியா முதலிடத்திலுள்ளதுடன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 14 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நேபாளத்தில் விமான விபத்து: 19 பேர் பலி


நேபாள தலைநகர் காத்மண்டுவிலிருந்து எவரெஸ்ட் பிராந்தியத்தை நோக்கிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 19 பேரும் பலியாகியுள்ளனர்.

எவரெஸ்ட் பிராந்தியத்திலுள்ள லுக்லா நகரை நோக்கிச் சென்ற வேளையிலேயே குறித்த சிறிய ரக விமானம் மனோஹரா என்ற ஆற்றங்கரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்துள்ளது.


விமானம் புறப்பட்டு சில நிமிடங்களுக்குள் அதன் பின்பக்கம் சூடாக மாறுவது உணரப்பட்டதாகவும் இதனால் விமானிகள் விமானத்தை ஆற்றங்கரையில் தரையிறக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது விமானத்தில் 16 பயணிகளும் 3 விமான ஊழியர்களும் பயணித்துள்ளனர். பயணிகளில் குறைந்தது 12 பேர் வெளிநாட்டுப் பிரஜைகளாவர்.



விபத்தில் சிக்கி உயிரிழந்த வெளிநாட்டவர்களில் 9 பேர் பிரித்தானியர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

விமானத்தின் கறுப்புப் பெட்டி தற்போது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.விபத்துக்கான காரணம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாத போதும் இயந்திரக்கோளாறே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.


நேபாளத்தின் மலைப் பிராந்தியங்களில் சிறி ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றனர்.

பாதுகாப்பற்ற சிறிய விமானங்களில் பயணிக்கும் போது பிரயாணிகள் கவனமாக இருக்கவேண்டுமென நேபாள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

சர்வதேச ஐநா சட்ட ஆலோசனை குழு அமர்வில் ஹக்கீம் பங்கேற்பார்


நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
உலக முஸ்லிம் தலைமைத்துவப் பேரவை, லண்டன் மேபெயார், டார்மூத் ஹவூஸில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் ‘சிறுபான்மை சமூகமொன்றை வழிநடாத்துதல் – ஓர் இலங்கை அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் புதன்கிழமை தலைமைத்துவம் பற்றிய உரையாற்றியுள்ளார்.
உலக முஸ்லிம் தலைமைத்துவ பேரவை இஸ்லாமிய உலகில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி அண்மைக்காலமாக கூடுதல் கவனம் செலுத்தி வருவதோடு, முஸ்லிம் உலகிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையில் தொடர்பாடலை பொறுத்தவரை ஓர் இணைப்புப் பாலமாகவும் உள்ளது. அதன் ஐரோப்பிய செயலகம் லண்டன் நகரிலும், ஆசியச் செயலகம் மலேஷியாவில் கோலாலம்புர் நகரிலும் அமைந்துள்ளன.
நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆலோசனை குழுவின் ஆறாவது அமர்விலும் இலங்கையின் சார்பில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்ளவுள்ளார். அடுத்த மாதம் 06 திகதி அவர் இலங்கை திரும்பவுள்ளதாக முஸ்லிம் காங்கிஸ் தெரிவித்துள்ளது.

ஊழல் மோசடிகள் செய்யக் கூடிய துறைக்கே அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கும்: ரோசி சேனாநாயக்க குற்றச்சாட்டு!


ஊழல் மோசடிகள் செய்யக் கூடிய துறைக்கே அரசாங்கம் அதிக நிதியை ஒதுக்கி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். கல்வித்துறையில் மோசடி செய்ய முடியாத காரணத்தினால் அரசாங்கம் அதிக பணத்தை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதில்லை.
எமது நாட்டின் கல்வித்திட்டம் பிரமிட் கட்டமைப்பை ஒத்தது. ஆரம்பத்தில் பலர் இதில் இணைந்து கொள்வார்கள். எனினும், இறுதியில் ஒரு சிலர் மட்டமே எஞ்சுகின்றனர்.
பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்பதே பெற்றோரின் இலக்காகக் காணப்படுகின்றது. உலகின் வறிய நாடுகள் கூட அதிகளவான பணத்தை கல்வித்துறைக்காக ஒதுக்குகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் ஊடாக கல்வித்துறை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
பாடசாலை மாணவ மாணவியருக்கு பகல் உணவு வழங்குதல், ஒவ்வொரு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய பாடசாலை ஒன்றை நிறுவுதல் போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலவச கல்வி உரிமைக்காக இன்று கொழும்பில் பேரணி!

இலவச கல்வி உரிமைக்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஏற்பாடு செய்த பேரணியில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ எம்பி, தயாசிறி ஜெயசேகர எம்பி, அகிலவிராஜ காரியவசம், நவசம சமாஜக் கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன , ஐமமு மாநகரசபை உறுப்பினர்களான எஸ்.குகவரதன், சி.பாஸ்கரா, கே.ரீ. குருசாமி, பிரியாணி குணரட்ன ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.





கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவராக த.தே.கூ.யின் சி.தண்டாயுதபாணி தெரிவு,

நடந்து முடிந்த தேர்தலில் (06) உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கு தமது வாக்குகளை வழங்கிய மட்டு மாவட்ட மா மேதைகள் சம்பந்தனால் புறமொதுக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி த.தே. கூட்டமைப்பில் களமிறங்கிய வேட்பாளர்களில் ஆகக்கூடுதலான வாக்குகளைப்பெற்றவரும் (29.141) கடந்த மாகாண சபை நிர்வாகத்தில் நான்கு வருடகாலம் பணியாற்றியவருமான இரா துரைரெத்தினம் அவர்கள் பழிவாங்கப்பட்டு திரு சி தண்டாயுதபாணி எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் பெற்றுள்ளமை திட்டமிட்டு மட்டு வாக்காளர்களை ஏமாற்றியமை இன்று அம்பலமாகியுள்ளது......சம்பந்தனின் அறிக்கை
கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிங்காரவேலு தண்டாயுதபாணி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சும்பந்தன் தலைமையில் சற்றுமுன்னர் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுரேஸ் பிரேமசந்தின், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன், ஆனந்தசங்கரி ஆகியோரைத் தவிர தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது..... தனிமனித முடிவு என்பது அழிவை நோக்கி நகரும் என்றூ கிழக்கு மாகாண மக்கள் முனு முனுக்கிரார்கள்

vendredi 28 septembre 2012

வீடியோச் செய்திகள்

இந்தியாவிலேயே பெண்கள் சுதந்திரத்தில் தமிழ்நாட்டுக்கு முதலிடம்: கருத்துகணிப்பில் தகவல்

கொல்கத்தா,செப்.27-தேசிய அளவில் குடும்ப நலன் தொடர்பாக 2011-ஆம்  ஆண்டு நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் பெண்களிடையே கருத்து கேட்கப்பட்டது. திருமணமான குடும்ப பெண்களில் படித்தவர்களின் செல்வாக்கு வீட்டில் எப்படி இருக்கிறது, அவர்கள் பேச்சு எடுபடுகிறதா? குடிநீர் தேவையை எப்படி சமாளிக்கிறீர்கள், மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்களா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இதில் நாட்டிலேய மேற்கு வங்காளமும், ராஜஸ்தான் மாநிலமும்தான் குடும்பத்தில் பெண்கள் நிலை மிகவும் பின்தங்கி உள்ளது. மேற்கு வங்காளத்தில் பெண்கள் கருத்துரிமை கூட இல்லாத நிலையில் வாழ்கின்றனர் என்ற கசப்பான உண்மையை சுட்டிக் காட்டியுள்ளது.

குடிநீர் பிடிப்பற்காக அன்றாடம் 2 மணி நேரத்தை பெண்கள் செலவிடுவதாகவும், அடுப்பு எரிப்பதற்காக விறகு சேகரிக்க 6 மணி நேரம் மேற்குவங்க பெண்கள் அலைவதாகவும் இந்த அறிக்கை வருத்தத்துடன் குறிப்பிடுகின்றது.

அம்மாநிலத்தை சேர்ந்த அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், சிந்தனைவாதிகள் என்று புகழப்படும் வெகு சில பெண்களின் முன்னேற்றத்தை மட்டுமே அளவுகோலாக வைத்து பார்க்காமல், ஆழ்ந்து நோக்கினால் ஆண்- பெண் பிறப்பு விகிதாச்சாரம், பெண்கள் கல்வியறிவு ஆகியவற்றை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் குடும்பங்களில் கருத்து கூறுவதற்கு கூட பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்படாத நிலையில் ஆணாதிக்கம் ஓங்கி உள்ளது.

கணவனின் அனுமதி இல்லாமல் பெற்றோரை பார்ப்பதற்கு கூட பெண்களால் முடியவில்லை. வீட்டிற்கு தேவையான சாதனங்களை வாங்குவதில் தொடங்கி என்ன சமையல் செய்ய வேண்டும் என்பது வரை பெண்ணின் ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

1 கோடியே 70 லட்சம் பெண்கள் திறந்தவெளி கழிப்பிடங்களையே உபயோகிக்கின்றனர். 58 சதவீத பெண்களுக்கு பள்ளிகளில் போதிய கழிப்பிட வசதி இல்லை. மேற்கு வங்க மாநிலம் நிலையான முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்றால் சமுதாயத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள் முடிவுக்கு வரவேண்டும் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் கல்வியறிவு, அதிகபட்ச இலக்கு 65 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு வங்க பெண்கள் 71 சதவீத கல்வியறவில் தேறியவர்களாக இருந்தபோதும் பெண்ணுரிமை செயலாக்கத்தில் அம்மாநிலம் மிகவும் பின் தங்கியே உள்ளது.

தேசிய அளவிலான பெண்ணுரிமை இலக்கு 37 சதவீதமாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலமும் மேற்கு வங்காளத்தை போலவே உள்ளது.   ஆனால் இந்தியாவிலேயே சர்வசுதந்திரத்துடன் குடும்பத் தலைவியாக நிர்வாகம் செய்யும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு தலைசிறந்தும், தலை நிமிர்ந்தும் நிற்கின்றது.

தமிழ்நாட்டில் 49 சதவீதம் பெண்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்துக்கு அடுத்த இடத்தில் மராட்டியத்தில் பெண்கள் சுதந்திரம் 45 சதவீதமாகவும், ஆந்திராவில் 40 சதவீதமாகவும் உள்ளது.

சீனாவிடம் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி செய்வதற்கு முயற்சி

இலங்கையில் தனியார் பஸ் உரிமையாளர்களின் போராட்டத்தை எதிர்கொள்ளவென சீனாவிடம் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறது.
இது குறித்து சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வரும் நிலையில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையிடம் 5000 பஸ்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 3500 பஸ்கள் 15 வருடங்களுக்கு பழைமையானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் பஸ் கொள்வனவு குறித்து சீனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்...வட்டுக்கோட்டை தீர்மானம் ஈழம் என்பது .ஆனால் தனியார் பஸ் உரிமையாளர்களாள்  ரவுடிகலிடம் ஈழம் அகப்பட்டது ..ஆதாரம் ரயில் தன்டவாளம் கலட்டியமை..

jeudi 27 septembre 2012

வீடியோச் செய்திகள்

காட்டில் மக்கள் விலங்குகளைப் போல் பலவந்தமாக மீள்குடியேற்றம்

இலங்கையின் வடக்கே வவுனியா செட்டிகுளம் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் திங்களன்று மூடப்பட்டதையடுத்து சொந்தக் காணிகளுக்குப் பதிலாக வேறிடத்தில் குடியேற்றப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கேப்பாப்பிலவு பகுதி மக்கள், கேப்பாப்பிலவுக்கு அருகில் உள்ள சீனியாமோட்டைக்குக் கொண்டு சென்று, அடிப்படை வசதிகளற்ற நிலையில் விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் ஓரிரவு வற்றாப்பளை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வற்றாப்பளை பாடசாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை சீனியாமோட்டையில் உள்ள காட்டுப்பகுதிக்குத் தங்களை இராணுவத்தினர் பலவந்தமாக அழைத்துச் சென்று விட்டதாகவும், அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இருக்கவில்லை என்றும் சீனியாமோட்டைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். 

அந்தப் பகுதியில் தற்போதுதான் புல்டோசர்கள் மரங்கள் பற்றைகள் என்பவற்றை அகற்றித் துப்பரவு செய்வதாகவும், அவ்வாறு துப்பரவு செய்யப்படுகின்ற இடங்களிலேயே மக்கள் உடனடியாகக் குடியமர்வதற்கு விடப்படுவதாகவும் அந்த மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஒதுங்கி நிற்பதற்கு எந்தவிதமான கட்டிடங்களோ மர நிழல்களோ அற்ற நிலையில் பலர் குடை நிழல்களிலேயே அழுகின்ற பிள்ளைகளை வைத்திருந்ததாகவும், போதிய தண்ணீர் வசதியோ, கழிவிட வசதிகளோ செய்யப்பட்டிருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 

முகாமில் இருந்து தாங்கள் கொண்டு வந்த மரம், தடிகள், தகரங்கள் என்பற்றைப் பயன்படுத்தி தாங்களே கொட்டில்களை அமைப்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

இது குறித்து முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கேப்பாப்பிலவு பகுதி மக்கள் காட்டுப்பகுதியில் விடப்படவில்லை என்றும் முன்னர் பயிர் செய்யப்பட்டு கைவிடப்பட்டிருந்த ஒரு வெளியான காணியிலேயே விடப்பட்டுள்ளதாகவும், அங்கு பத்து பிளாஸ்டிக் தண்ணீர்த் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன் தற்காலிக கழிவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நிரந்தர கழிவிடங்கள் மற்றும் நிரந்தர வீடுகள் என்பவற்றை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் தெரிவித்தார். 

கேப்பாப்பிலவு பகுதி மக்களை அவர்களது சொந்தக் காணிகளுக்குப் பதிலாக வேறிடத்தில் குடியேற்றுவதென்ற முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த போதிலும், அந்த மக்கள் தமது சொந்தக் காணிகளே வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்ததனால், மாற்றிடத்தில் அவர்களுக்கான வசதிகளை முன்கூட்டியே செய்ய முடியவில்லை. அத்துடன் மனிக்பாம் முகமில் இருந்து இந்த மக்களை அதிகாரிகள் பவலந்தமாக அழைத்து வரவுமில்லை. 

அவர்களுடன் இருந்த மந்துவில் கிராம மக்கள் மீள்குடியேற்றத்திற்காக முகாமிலிருந்து அனுப்பப்பட்டால் தனிமையில் மனிக்பாம் முகாமில் தங்களுக்குப் பாதுகாப்பு இருக்கமாட்டாது என தெரிவித்து தங்களையும் அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு அவர்கள் கேட்டதையடுத்தே, கேப்பாப்பிலவு மக்கள் அழைத்து வரப்பட்டு இப்போது சீனியாமோட்டையில் விடப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகன் கூறினார். 

mercredi 26 septembre 2012

22 மாடுகளை ஏற்றிச் சென்ற ஐவர் கஹவத்தையில் கைது

சித்திரவதை செய்யும் வகையில் 22 மாடுகளை ஏற்றிச் சென்ற ஐந்து சந்தேகநபர்கள் கஹவத்தை - எல்லேவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

விசேட அதிரடிப்படை உடவலவ முகாம் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களால் கொண்டு செல்லப்பட்ட மாடுகளின் பெறுமதி 7 லட்சம் என தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

முல்லைதீவுக்கு விஜயம் - இறுதிக்கட்ட மீள்குடியேற்ற நிகழ்வுகளில் பங்கேற்பு



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று(செப்டெம்பர்-25) முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து, இறுதிக்கட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உட்பட, அங்கு இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்துகொண்டார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களும் இந் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
பெருந்திரளான மீள்குடியேற்றப்பட்ட மக்கள் கூடியிருந்த புதுக்குடியிருப்பு, வெள்ளமுள்ளி வாய்க்காலில் இடம்பெற்ற மாபெரும் கூட்டத்தில் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். மக்கள் நலன்புரி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அப்பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் பல்தரப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முன்னேற்றம் குறித்து பார்வையிடுவதற்காகவே விஷேடமா ஜனாதிபதி அங்கு விஜயம் செய்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்ட மக்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இன, மத, பேதமின்றி அனைத்து மக்களும் ஒரே தாய் பிள்ளைகள்போல் வாழக்கூடிய சூழல் தற்போது உருவாக்கியுள்ளது. மீள்குடியேற்றப்பட்ட மக்கள் சிலருக்கு வீடுகள் கிடைத்துள்ள போதிலும், மேலும் சிலருக்கு வீட்டுப் பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் ஊடாக, இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இன்று மிகப் பின்தங்கிய நிலையிலுள்ள இந்தப் பிரதேசம் நாட்டின் முன்னேற்றமான பிரதேசமாக மீளக்கட்டியெழுப்பப்படுகின்றது. உங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் விவசாய உபகரணங்கள், கைத்தொழில்களுக்கான உபகரணங்கள் அனைத்தையும் பெற்றுக்கொடுப்பதுடன் வேலைவாய்ப்புகளையும் நாம் உருவாக்கிக் கொடுப்போம்.
அதேவேளை, உங்கள் பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொடுக்க சகல நடவடிக்கையும் எடுப்போம். தெற்கு மக்கள் அனுபவிக்கின்ற சகலதையும் உங்களுக்கும் பெற்றுக்கொடுப்போம். வடக்கு, கிழக்கு என்ற பேதம் எமக்குக் கிடையாது. அனைத்து மக்களும் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதே எமது நோக்கம். அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் எனத் தெரிவித்தார்.
இதன்போது மக்களுக்கான உலர் உணவு ரேஷன் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளடங்கிய பரிசிப் பொதிகளையும் ஜனாதிபதி அவர்கள் வழங்கிவைத்தார். மேலும் சுயதொழிலுக்கான கடனுதவி உதவியும் உரிய நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இந் நிகழ்வுகளின் போது, பாடசாலை மாணவர்களால் அழகான நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் மாணவர்களுடன் இணைந்து புகைப்படங்ளும் எடுத்துக்கொண்டார்.
முல்லைத்தீவு “கரையோரப்பத்து” பிரிவின் புதிய மாவட்ட செயலாளர் கட்டிடத்தை ஜனாதிபதி அவர்கள் திறந்து வைத்தார். முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைளின் போது மக்களுக்கு இவ் அலுவலகம் பேருதவியாக அமையும் அதேவேளை. அபிவிருத்தி நடவடிக்கைகளும் இதன் மூலம் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும்.
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றிய நாடுகளில், உலகிலேயே இலங்கை மட்டும்தான் சாதனை படைத்துள்ளது. நேற்றய தினம் உள்நாட்டில் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 361 குடும்பங்களை சேர்ந்த 1186 பேர் இறுதிக்கட்டமாக மீள்குடியமர்த்தப்பட்டனர். 2009 மேயில் 295,000 மக்கள் இலங்கையில் உள்நாட்டில் குடிப்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
25 வருடங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் தேசிய மின்வலையமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 33 கிலோவோல்ட் மின் பரிமாற்றம் கிளிநொச்சி உப மின்நிலையத்தில் இருந்து யாழ்பாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர கிளிநொச்சி உப மின்நிலையத்தில் இருந்து யாழ் சுன்னாகம் பிரதெசத்திற்கான 132 கிலோவோல்ட் மின் பரிமாற்ற நடவடிக்கைகள் இரண்டாம் கட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வுகளில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இராணுவத்தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

மக்கள் காட்டுப்பகுதியில் இறக்கிவிடப்பட்டனர்

இருக்க இடமோ குடிக்கத் தண்ணீரோ உண்ண உணவோ இல்லாமல் நந்திக் கடலேரியை அண்டிய காட்டுப் பகுதிக்குள் கேப்பாபிலவு மக்கள் நேற்று மாலை அநாதைகளாக இறக்கிவிடப்பட்டனர்.
நேற்றுமுன்தினம் செட்டிக்குளம் முகாமைத் திடீர் என மூடிய இராணுவத்தினர் அங்கிருந்த இந்த மக்களை அப்புறப்படுத்தினர். இங்கிருந்த 360 குடும்பங்களில் கேப்பாபிலவு பகுதியைச் சேர்ந்த 110 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நேற்றுமுன்தினம் வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் இறக்கி விடப்பட்டனர். அவர்களுக்கு உணவு மட்டும் வழங்கப்பட்டது.
ஆயினும் அந்த இடத்தில் இருந்து நேற்று மீண்டும் ஏற்றிச் செல்லப்பட்ட மக்கள் நேற்று மாலை நந்திக் கடலேரிக் கரையோரத்தில் உள்ள சூரியபுரம் காட்டுப்பகுதியில் எவ்வித வசதிகளோ, பாதுகாப்போ எதுவுமின்றி இறக்கிவிடப்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்தனர்.
மக்களின் நிலை இவ்வாறிருக்க கிளிநொச்சியில் கட்டட்ம் திறந்த்துவைப்பதாகக் கூச்சலிடுகிறது மகிந்த -டக்ளஸ் தேச விரோதக் கும்பல்.

mardi 25 septembre 2012

யாழ் குடாவுக்கு மின்சாரம்

இலங்கையின் தேசிய மின் விநியோக வலையமைப்பின் ஊடான யாழ்ப்பாணத்திற்கான மின் விநியோகம் 25 வருடங்களின் பின்னர், செவ்வாயன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றது.
ஜப்பானிய அரசின் 3500 மில்லியன் ரூபா நிதியுதவியில் கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சார விநியோக நிலையத்தின் ஊடாக இந்த மின் விநியோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபையின் வவுனியா உள்ளிட்ட கிளிநொச்சி பிராந்திய பிரதம பொறியியலாளர் செல்வராஜா பிரபாகரன் தெரிவித்தார்.
வவுனியாவையும் கிளிநொச்சியையும் 132 கிலோவாட் (கே.வி) உயர் மின் அழுத்தத்துடன் இணைத்துள்ள ஒரு உப மின்நிலையமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில் இருந்து யாழ் குடாநாட்டின் ஒரு பகுதியாகிய மருதங்கேணி ஊடான பருத்தித்துறை உள்ளிட்ட வடமராட்சி பகுதிக்கு 10 கே.வி மின்சாரம் வழங்கப்படும்.
இது யாழ் குடாநாட்டின் 45 கே.வி மின்சாரத் தேவையின் ஒரு பகுதியைப் பூர்த்தி செய்யவுள்ளது.
இதனால் மின்பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்) ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகின்ற மின் விநியோகம் மேலும் சீரடையும் என நம்பப்படுகின்றது.
கடந்த 1987 ஆம் ஆண்டு யுத்த மோதல்கள் தீவிரமடையத் தொடங்கியதையடுத்து, தேசிய மின் விநியோக வலையமைப்பின் ஊடான மின் விநியோகம் தடைபட்டிருந்தது.
இதனையடுத்து, விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது, சக்திவாய்ந்த மின்பிறப்பாக்கிகளின் மூலமே தமக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்று வந்தார்கள்.
இதன் ஒரு பகுதி பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. எனினும் அது அனைவருக்கும் கிடைக்கவில்லை.
இதேவேளை, மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்களுக்கு அரசாங்கம் இலவசமாக மின் இணைப்புக்களை வழங்கி வருகின்றது.
இதன் ஊடாக சுமார் 14ஆயிரத்து 500 மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்கள் இதுவரையில் பயனடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஜனாதிபதி.

 
இந்தக் கூட்டத்தில் அரச அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி வன்னிப் பகுதி மக்கள் யுத்தம் காரணமாக 30 வருடங்கள் பின்தள்ளப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர்களது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு வேலைத்திட்டங்களை மக்கள் பயனடையும் வகையில் அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த மக்கள் அனைவரும் எமது மக்கள் என்ற அடிப்படையில் எந்தவிதமான பாரபட்சமுமின்றி அதிகாரிகள் மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.கிளிநொச்சியில் 38 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட பொதுச்சந்தை கட்டத் தொகுதியை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (செப்டம்பர் 25) காலை திறந்துவைத்தார். இப் பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் 110 வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இவற்றை 64 காய்கறி விற்பனையாளர்களுக்கும் 46 மீன் மற்றும் இறைச்சி விற்பனையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான நகரங்களை கட்டியெழுப்பும் திட்டத்தின் ஒரு அங்கமாக கிளிநொச்சி பொதுச் சந்தை கட்டடத் தொகுதி நேற்று முதல் மக்களின் பயன்பாட்டிற்காக ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த கட்டடத் தொகுதியின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு 38 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு இரண்டு கட்டத் தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதன் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக 200 மில்லியன் ரூபா செலவில் மேலும் மூன்று கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வீடியோச் செய்திகள்

வெற்றி பெற்றிருந்தால் நானே முதலமைச்சர்


புலம்பெயர் தமிழர்களே நாட்டை குழப்புகிறார்கள் - பிள்ளையான் - இணைப்பு 2

நடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் உணர்ச்சிகரமான பேச்சில் மயங்கி அவர்களுக்கு வாக்களித்துள்ளதாக கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பட்டுள்ளார்.
இதேவேளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்பது போல கிழக்கு மாகாணத்தில் சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை வழங்க அரசியலமைப்பு திட்டத்தில் இடமுண்டா? என ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுழற்சி முறை முதலமைச்சர் திட்டமானது அபிவிருத்தி வேலைகளை பாதிக்கும் என்பதால் அது பொருத்தமானதல்ல எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார். 
நடைபெற்ற கிழக்கு மாகாணசபைக்கான தேர்தில் தான் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கிலேயே போட்டியிட்டதாகவும், தனக்கு 15 ஆயிரம் வாக்குகள் இன்னும் மேலதிகமாக கிடைத்து, தமது கட்சி சார்பில் மூவர் வெற்றி பெற்றிருந்தால் நிச்சியமாக தான்தான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பேன் எனவும் கூறினார்.
அதன் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்கள் அரசியலைப் புரிந்து கொள்ளவில்லை என தான் கவலையடைவதாகவும், இந்த பின்னடைவை ஒரு தற்காகலிக பின்னடைவாகவே பார்ப்பதாகவும், எதிர்காலத்தில் வெற்றிப்பயணத்தை தொடர்வோம் எனவும் பிள்ளையான் நம்பிக்;கை வெளியிட்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது:-
கிழக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாக அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேலும் 3 ஆசனங்களை கைப்பற்றியிருந்தால் அந்த ஆசை நிறைவேறியிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். முதலமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், ஜனாதிபதி தனக்கு ஆலோசகர் பதவி ஒன்றை வழங்கியுள்ளதாகவும்  இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளில் முன்னின்று செயற்பட முடியும் எனவும் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் இனவாதத்தை முன்வைத்து போட்டியிட்டதாகவும்  எனினும் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து மாகாண சபையின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளதால்,  மாகாண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தேர்தலில் தமிழ் மக்கள் குறைவாக வாக்களித்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

அதிபர் இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குப் பயணம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இன்றுகாலை அவர் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 33 ஆயிரம் கிலோவாட்ஸ் திறனுள்ள இரண்டு மின்விநியோக இணைப்புகளை வழங்கும் உபமின்நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இதன் மூலம் யாழ்.குடாநாட்டின் சாவகச்சேரி, பருத்தித்துறைப் பகுதிகளுக்கான மின்விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் கிளிநொச்சியில் பல்வேறு திட்டங்களையும் அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

கிளிநொச்சியை அடுத்து முல்லைத்தீவுக்குச் செல்லும் சிறிலங்கா அதிபர் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தையும் திறந்து வைக்கவுள்ளார்

சிறிலங்கா அதிபரின் வன்னிக்கான பயணத்தை முன்னிட்டு கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, மாங்குளம்- முல்லைத்தீவு பிராந்தியங்களுக்கான மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் நீல் தளுவத்த ஆகியோரின் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிர்ச்சி தகவல் : பள்ளி மாணவிகளை செக்ஸ் அடிமைகளாக்கிய கடாபி

 லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபி, பள்ளி மாணவிகளை கடத்தி சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்து சித்ரவதை செய்தார் என்று புது புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தியவர் கடாபி. இவரை எதிர்த்து மக்கள் புரட்சி ஏற்பட்டது. ராணுவம் மூலம் மக்களை கொன்று குவித்தார் கடாபி. கடைசியில் புரட்சி படையினரால் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கொல்லப்பட்டார். இந்நிலையில், பிரான்ஸ் நிருபர் அன்னிக் கோஜீன் என்பவர், கடாபியின் கொடுமைகள் பற்றி புத்தகம் எழுதி உள்ளார். அதில், பள்ளி மாணவிகளை கடாபி கடத்தி, செக்ஸ் அடிமைகளாக்கி சித்ரவதை செய்தார் என்று கூறியுள்ளார். கடந்த 2004ம் ஆண்டு சொராயா என்ற 15 வயது மாணவியை கடாபி கடத்தி சென்று எப்படி எல்லாம் செக்ஸ் சித்ரவதை செய்தார் என்பதை கோஜீன் தனது புத்தகத்தில் விரிவாக கூறியுள்ளார். கடாபியின் பிடியில் சொராயா 5 ஆண்டுகள் சித்ரவதை அனுபவித்துள்ளார். அவரது அரண்மனையில் ஏராளமான பள்ளி மாணவிகள் இருந்துள்ளனர். அவர்களை தன் சொல்படி நடக்கும் வகையில் கடாபி மாற்றி இருந்தார். கடாபியிடம் மாணவிகள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்களோ அதேபோல் சொராயாவையும் செயல்பட கட்டாய பயிற்சி அளித்துள்ளனர். பல்வேறு வகையில் செக்ஸ் சித்ரவதைகளை அனுபவித்த மாணவிகள் பல ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களை குடும்பத்தினரே ஏற்க மறுத்து ஒதுக்கி உள்ளனர் என்று புத்தகத்தில் கோஜீன் ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார். சொராயாவின் பேட்டியும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் கடாபியின் அந்தரங்க வாழ்க்கை பற்றி சொராயா பல தகவல்களை கூறியுள்ளார். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலவசக் கல்விக்கு பாதுகாப்பு வழங்கு


யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடுத்தெருவில்; இலவசக் கல்விக்கு பாதுகாப்பு வழங்கு
news
பல்கலைக்கழக பேராசிரியர்களின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக யாழ்ப்பாணத்திலும் இன்றைய தினம் மாபெரும் வாகனப் பேரணியொன்று இடம்பெற்றது.

 யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இப்பேரணியை ஒழுங்கு செய்திருந்தது. இப்பேரணி இன்று காலை 9 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து ஆரம்பமாகி பருத்தித்துறை வீதி வழியாக நெல்லியடி,அச்சுவேலி,புத்தூர் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளூடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.

இதில் அரச கல்வியை காப்பாற்று,பல்கலைக்கழகம் கோமாழிகளின் கூடாரங்களல்ல!, பல்கலைக்கழகத்தின் சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாப்போம், உறுதியளித்த சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்ந்து போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.