lundi 17 septembre 2012

வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்க வேண்டாம் : சம்பந்தன்


கிழக்கு மாகாண வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளும் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதானது வாக்களித்த மக்களுக்கு இழைத்த துரோகமாகவே கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தை எதிர்த்து போட்டியிட்ட காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைபு கூறூகிரது
கிழக்கு மாகாணசபையில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேரடியாக விடுத்தால் அதுபற்றி பரிசீலனை செய்யத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குத்தாட்டம்  செய்து..யார்...கிழக்கில் ஆட்சியமைக்க ஆளும்கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  ஆதரவு வழங்கலாம். கிழக்கு முதல்வர் பதவி முதல்வர் சந்திரகாந்தனுக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது..........

Aucun commentaire:

Enregistrer un commentaire