அரசாங்கம் அழைத்தால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கம் அழைத்தால், தமது கட்சி பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் ஆறு மாதங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், மீளவும் அழைத்தால் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார
பேச்சுவார்த்தைகளை நடாத்த தமது கட்சி தயாராக இருந்த போதிலும், அரசாங்கம் தயாராக இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவது வரவேற்கப்பட வேண்டியது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire