கிழக்கு மாகாண சபை தேர்தலில்,மட்டக்களப்பு மாவட்டத்தில்
அதி கூடிய விருப்பு வாக்குகள் பெற்று சிவநேசதுரை சந்திரகாந்தன் வெற்றி நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் உத்தியோகப் பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி த.தே.கூ 11 ஆசனங்களையும் ஐ.ம.சு.மு 14 ஆசனங்களையும், மு.கா 7 ஆசனங்களையும், ஐ.தே.க 4 ஆசனங்களையும் ஏனையவை 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
பிரதான கட்சிகள் பெற்ற வாக்கு விபரங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி 1 இலட்சத்து 93 ஆயிரத்து 827 (30.59 %) வாக்குகள் பெற்று 11 ஆசனங்களையும்,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 இலட்சத்து 44 (31.58 %) வாக்குகள் பெற்று இரண்டு மேலதிக ஆசனங்களுடன் 14 ஆசனங்களையும்,
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 917 (20.98 %) வாக்குகள் பெற்று 7 ஆசனங்களையும்,
ஐக்கிய தேசியக் கட்சி 74 ஆயிரத்து 901 (11.82 %) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும்,
தேசிய சுதந்திர முன்னணி 9 ஆயிரத்து 522 (1.5 %) வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
கிழக்கு மாகாண சபையின் மாவட்ட ரீதியான வாக்குகள் விபரம் :
மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி : 1,04,364 (50.83%) வாக்குகள் பெற்று 06 ஆசனங்களையும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 64,190 (31.17%) வாக்குகள் பெற்று 04 ஆசனங்களையும்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 23,083 (11.21%) வாக்குகள் பெற்று 01 ஆசனத்தையும்
சுயேட்சைக் குழு 8 : 5,355 (5.38%) வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி : 1026 (1.03%) வாக்குகளையும் பெற்று
திருகோணமலை மாவட்டம்
இலங்கை தமிழரசு கட்சி - 44,396 (29.088%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும்
ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 43,324 (28.38%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (17.15%) வாக்குகள் பெற்று 2 ஆசனங்களையும்
ஐக்கிய தேசியக் கட்சி - 24,439 (16.01%) வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும்
தேசிய சுதந்திர முன்னணி - 9,522 (6.24%) வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.
அம்பாறை மாவட்டம்
ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 92,530 (33.66%) வாக்குகள் பெற்று 5 ஆசனங்களையும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83,658 (30.43%) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும்
ஐக்கிய தேசியக் கட்சி - 48,028 (17.47%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும்
இலங்கை தமிழரசு கட்சி - 44749 (16.28%) வாக்குகள் பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன..
Aucun commentaire:
Enregistrer un commentaire