lundi 3 septembre 2012

ஜேவிபி அலுவலகங்கள் மூன்றிற்கு தீ வைப்பு



ஜேவிபி அலுவலகங்கள் மூன்றிற்கு தீ வைப்பு

அம்பாறை, பதியத்தாளை பிரதேசத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் அலுவலகங்கள் மூன்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 

இனந்தெரியாத ஆயுதங்கள் தாங்கிய குழு ஒன்று நேற்று இரவு இவ் அலுவலகங்களுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நேற்று இரவு 11.30 மணிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பதியத்தாளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

இச் சம்பவம் தொடர்பில் அத தெரண பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டது. இச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகமும் உறுதி செய்தது. 




Aucun commentaire:

Enregistrer un commentaire