சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பாக ஆராய வந்துள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் நிபுணர் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 3000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். 2009 இல் முடிவடைந்த போரின்போது, மீறல்கள் இடம்பெற்றதாக சிறிலங்கா மீது ஐ.நா அவப்பழி சுமத்துவதாக அவரக்ள குற்றம்சாட்டினர். அத்துடன் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையால், அனுப்பப்பட்டுள்ள நிபுணர்கள் குழு, சிறிலங்கா மீதான அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கான முதற்படி என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நவநீதம்பிள்ளையின் பணியகத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு சிறிலங்காவில், உண்மை கண்டறியும் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் நிலையிலேயே இந்தப் போராட்டம் நடந்துள்ளது. |
vendredi 21 septembre 2012
ஐ.நாவுக்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழும் பெளத்த பிக்குகள்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire