தமிழ் மொழியில் சட்டப் புத்தகங்கள் அதிகம் இன்மையால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களைத் தீர்க்க தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளார். குற்றவியல் மற்றும் அரசியல் ரீதியற்ற சட்டமூலம் (சிவில்) நியாயமற்ற செயற்பாடுகளுக்குரிய சட்ட நியமங்கள் தொடர்பான 1979 இலக்கம் 15ற்கு உரிய நியமம் சாட்சிகளுக்கு கட்டளைச்சட்டம், தண்டனைச் சட்டமூலம் போன்றன தமிழ் மொழிபெயர்ப்பின்றி இருப்பதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் மட்டுமன்றி நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் தமிழ்மொழியில் சட்டரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத அசௌகரியங்கள் காணப்படுவதாக அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை நிவர்த்திசெய்யும் வகையில் பொறுப்புவாய்ந்த நிறுவனம் மற்றும் சட்டவாக்க பிரிவுடன் கலந்தாலோசித்து மிக முக்கியமான சட்ட நியமங்களை தமிழில் மொழிபெயர்த்து அச்சிடத் தேவையான செயற்பாடுகளை அமைச்சர் மேற்கொண்டுள்ளார். இதனை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire