இலங்கையில் தனியார் பஸ் உரிமையாளர்களின் போராட்டத்தை எதிர்கொள்ளவென சீனாவிடம் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி செய்வது குறித்து இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறது.
இது குறித்து சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்று வரும் நிலையில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையிடம் 5000 பஸ்கள் காணப்படுவதாகவும் அவற்றில் 3500 பஸ்கள் 15 வருடங்களுக்கு பழைமையானது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் பஸ் கொள்வனவு குறித்து சீனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால் போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்...வட்டுக்கோட்டை தீர்மானம் ஈழம் என்பது .ஆனால் தனியார் பஸ் உரிமையாளர்களாள் ரவுடிகலிடம் ஈழம் அகப்பட்டது ..ஆதாரம் ரயில் தன்டவாளம் கலட்டியமை..
Aucun commentaire:
Enregistrer un commentaire