முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அம்பலவன் பொக்கணை, ஆனந்தபுரம் கிழக்கு ஆகிய பகுதிகளில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி நிர்க்கதியான நிலையில் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சொந்தக் காணிகளில் கொட்டில், தறப்பாள் வீடுகளை அமைத்துக் குடியிருந்தால் மட்டுமே தற்காலிக வீடுகளைத் தருவோம் என தொண்டுநிறுவனங்கள் இந்த மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
வன்னியில் இறுதியுத்தம் நடைபெற்ற ஆனந்தபுரம் கிருஷ்ணன்கோயில் சூழலிலும் அம்பலவன் பொக்கணை கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட புதுமாத்தளன், மாத்தளன், பொக்கணை ஆகிய பகுதிகளிலும் நேற்று முன்தினம் பொதுமக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்து இப்பகுதிகளுக்கு அழைத்துவரப்பட்ட சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்தவர்களையே இப்பிரதேசத்தில் மீள்குடியமர்த்தியுள்ளனர்.
ஆனால் இந்த மக்களுக்குரிய எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக அம்பலவன் பொக்கணைப் பகுதியிலுள்ள குடிநீர்க்கிணறுகள் கூட இதுவரையும் சுத்தம் செய்யப்படவில்லை.
இக்கிணறுகள் இரும்புப் பொருட்கள் போடப்பட்டு மணலால் தூர்க்கப்பட்டுள்ளதால் பொதுமக்களால் சுத்தம் செய்ய முடியவில்லை.
இதனால் இம்மக்கள் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இரணைப்பாலைப் பகுதிக்குச் சென்று குடிநீரைப் பெறவேண்டிய அவல நிலையிலுள்ளனர்.
இதனால் இம்மக்கள் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இரணைப்பாலைப் பகுதிக்குச் சென்று குடிநீரைப் பெறவேண்டிய அவல நிலையிலுள்ளனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire