mercredi 12 septembre 2012

1008 தேங்காய் உடைத்து இந்து கட்சியாக மாறீவரும் த.தே.கூட்டமைப்பு சிறப்புப் பிரார்த்தனையுடன் வவுனியாவில் போராட்டம்





தேங்காய் உடைத்து கைதிகளுக்கு விடுதலை வேண்டும் நிலை

வவுனியாவில் இன்று புதன்கிழமை தமிழ் தேசியகூட்டமைப்பு ஏற்பாடு செய்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க நீதி வேண்டி ஆண்டவன் சந்நிதியில் 1008 தேங்காய்களை உடைக்கும் போராட்டத்தை செய்தனர்
கடந்த பல தசாப்தங்களாகவும் முள்ளிவாய்க்கால் போரின் போதும் இலங்கை படையாலும் புலனாய்வு துறையாலும் மற்றும் இனந்தெரியாதவர்களால் கடத்த கடத்தப்பட்டவர்கள் தொடர்பாகவும் பல ஆயிரக்கணக்கானோரின் அவர்களின் விடுதலை கோரியும் அவர்கள் தொடர்பாக தகவல் கோரியும் பல பத்து ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
ஆயினும் இன்னமும் அவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் எந்த தீர்வும் அளிக்கப்படவில்லை. அண்மைக்காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தாக்கப்பட்டு ஊனமாக்கபட்டும் கொல்லப்பட்டும் வருவது அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் ஜனநாயக வழியிலான போராட்டங்களும் தீவிரம் பெற்று வருகின்றன. இந்த நிலையில் வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்த போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க நீதி வேண்டி ஆண்டவன் சந்நிதியில் 1008 தேங்காய்களை உடைக்கும் போராட்டத்தை செய்தனர்
இதில் த.தே.கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் பா.உறுப்பினர்களும் முன்னாள் பா.உறுப்பினர்களும் ஜனநாயக மக்கள் முன்னணி தென்னிலங்கையின் தமிழர் ஆதரவு சிங்கள சகோதர கட்சி உறுப்பினர்களும் கலந்து மக்களுக்கு ஆதரவு அளித்தனர்.




Aucun commentaire:

Enregistrer un commentaire