சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்றுகாலை அவர் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள 33 ஆயிரம் கிலோவாட்ஸ் திறனுள்ள இரண்டு மின்விநியோக இணைப்புகளை வழங்கும் உபமின்நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார். இதன் மூலம் யாழ்.குடாநாட்டின் சாவகச்சேரி, பருத்தித்துறைப் பகுதிகளுக்கான மின்விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் கிளிநொச்சியில் பல்வேறு திட்டங்களையும் அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார். கிளிநொச்சியை அடுத்து முல்லைத்தீவுக்குச் செல்லும் சிறிலங்கா அதிபர் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தையும் திறந்து வைக்கவுள்ளார் சிறிலங்கா அதிபரின் வன்னிக்கான பயணத்தை முன்னிட்டு கிளிநொச்சி படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா, மாங்குளம்- முல்லைத்தீவு பிராந்தியங்களுக்கான மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் நீல் தளுவத்த ஆகியோரின் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
mardi 25 septembre 2012
அதிபர் இன்று கிளிநொச்சி, முல்லைத்தீவுக்குப் பயணம்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire