vendredi 21 septembre 2012

பாகிஸ்தானின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.



இந்தக் குழுவினர் சிறிலங்கா படை அதிகாரிகளுடன் இரண்டு நாட்கள் அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களில் பங்கேற்றுள்ளனர்.

இது இரு நாட்டு ஆயுதப்படைகளுக்கும் இடையிலான முறைப்படியான முதலாவது அதிகாரிகள் மட்ட சந்திப்பாகும்.

இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் பரந்துபட்ட விவகாரங்கள், ஒத்துழைப்புகளை மையப்படுத்தி இந்தப் பேச்சுக்கள் நடந்துள்ளன.

பாகிஸ்தானிய குழுவுக்கு, அந்த நாட்டின் கூட்டுப்படைத் தலைமையகத்தின் சர்வதேச இராணுவ ஒத்துழைப்புப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் இனாம் உல் ஹக் தலைமை தாங்கினார்.

சிறிலங்கா குழுவுக்கு இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தலைமை வகித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire