lundi 10 septembre 2012

கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியாமல்போனால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும்


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியே மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகிறார்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரே முதலமைச்சராக வரவேண்டுமே தவிர, அவர் முஸ்லிமா அல்லது தமிழரா என்ற பிரச்சனை இல்லை என்று பிபிசி தமிழோசையிடம் சந்திரகாந்தன் சுட்டிக்காட்டினார்.
ஆனால் கிழக்கில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வரமுடியாமல்போனால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார்.
ஆனால் ஆளுங்கட்சியை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியினருக்கே கூடுதல் இடங்கள் கிடைத்துள்ளதாக கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தாம் எதிரணிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
அரசாங்கத்திற்கு கிழக்கில் ஆட்சியமைப்பதற்கான போதிய வல்லமை இல்லை என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் போட்டியிட்டவர்களில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டுமே வெற்றிபெற்றுள்ளார்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் சார்பில் போட்டியிட்டவர்களில் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் மட்டுமே வெற்றிபெற்றுள்ளார்

முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு?

இதற்கிடையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அரசாங்கத் தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் மாறிமாறி பேச்சுக்களை நடத்தியிருப்பதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழோசையிடம் கூறினார்.
ஆனால் அந்தக் கட்சி எந்த முடிவையும் இன்னும் அறிவிக்கவில்லை.
இதனிடையே, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வந்துள்ளது.
நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதியை வழங்கினால் தமது கட்சி தமிழ்க் கூட்டமைப்புக்கு ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள 35 பேரில் 15 பேர் முஸ்லிம்கள்.
தமிழர்கள் 12 பேரும் சிங்களவர்கள் 8 பேரும் இம் முறை மாகாண சபைக்கு இன ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
'முஸ்லிம் காங்கிரஸ் இரு தரப்புடனும் பேச்சு நடத்துகிறது'
'முஸ்லிம் காங்கிரஸ் இரு தரப்புடனும் பேச்சு நடத்துகிறது'
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட 11 வேட்பாளர்களில் முன்னாள் மதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டுமே இம்முறை வெற்றி பெற்றுள்ளார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 31 பேர் இந்த தேர்தலில் போட்டியிட்ட போதிலும் முன்னாள் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.சுபைர், எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் விமலவீர திசாநாயக்கா உட்பட 13 பேரே மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் மாகான விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா உட்பட 18 பேர் தோல்வியடைந்துள்ளார்கள்.இவர்களில் 6 பேர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire