samedi 22 septembre 2012

கலைஞர் தொலைகாட்சியா அல்லது காவி தொலை காட்சியா ?

கலைஞர் என்றாலே மதவாத பார்ப்பன சக்திகளுக்கு எதிரானவர் என்பதை நாம் எல்லோரும் அறிவோம் .
ஆனால் அவர்களால் நடத்தப்படும் தொலைகாட்சியில் நட
ந்துமுடிந்த சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியை 
கண்டு அதிர்ச்சியுற்றோம் .இந்தியாவின் சுதந்திரம் என்ற தலைப்பில் ,இந்தியசுதந்திரதிர்ற்கு சிறிதும் சம்பந்தம் 
இல்லாத ,சுதந்திரத்திற்காக பாட்டுபட்ட தியாகிகளை ஆங்கிலேயரிடம் காட்டிகொடுத்த தேசவிரோத ஆர். எஸ்.எஸ்.
இன் அரசியல் பிரிவான பாஜக வின் மாநில துணை பொது செயலாளரான தமிழிசை சௌந்தரராஜனை அழைத்து 
அவரிடம் இந்தியாவின் சுதந்திரதின சிறப்பை பற்றி விவாதித்து அதை நேரலையாகவும் ஒளிபரப்பியது .
நாட்டை மதத்தின் அடிப்படையிலும் ,சாதிய அடிப்படையிலும் ,பிரிப்பதற்கு நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமுமாக 
திட்டம் தீட்டி ,பலகலவரங்களை நடத்தியதை இந்தியமக்கள் அனைவரும் அறிவார்கள் .இந்த தேசத்தின் தந்தை 
காந்தி அடிகளையே சுட்டுகொன்ற RSS மற்றும் பாஜகவிடமே சுதந்திரத்தின் சிறப்பை பற்றி விவாதித்தது 
வேடிக்கையாகவும் ,வியப்பாகவும் ,விந்தையாகவும் இருந்தது .அதுமாத்ரம் அல்ல கடந்த இருதினங்களுக்கு 
முன் RSS இன் தேசிய தலைவர் சுதர்சன் மறைந்ததை மிக முக்கியத்துவத்துடன் எழுத்துக்கள் போட்டு காண்பித்தது.
கலைஞர் அவர்களே ,ஒருகையில் திராவிட கொடியையும் ,மறுக்கையில் குரானையும் ஏந்திதான் உங்களின் முதல் போராட்டத்தை 
நீங்கள் துவக்கினீர் என்பதை மறந்துவிட்டீரோ ?உங்களின் தலையை வெட்டி எடுத்து வருபவர்க்கு ,ஒரு கோடி ருபாய் பரிசு என்று 
அறிவித்த விஸ்வ ஹிந்து பரிசத் அயோக்கியர்களை மறந்துவிட்டீரோ ?பாம்பை காட்டிலும் பார்ப்பான்தான் விஷம் 
என்ற பெரியாரின் தத்துவத்தை உங்களுக்கு நினைவூட்டி ,நீங்கள் நடத்தும் தொலைகாட்சிக்குள்ளும் ,ஒருசில பாம்புகள் 
நுழைந்து விட்டதோ என்று என்ன தோன்றுகிறது ..ஆகவே வரும்காலங்களில் இதுபோன்ற மாபெரும் தவறுகள் நடக்காமல் 
பார்த்துக்கொள்ள வேண்டுமென உரிமையுடன் கேட்டுகொள்கிறோம் .........shaik fareed
 

Aucun commentaire:

Enregistrer un commentaire