இறுதிப் போரின்போது இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்ட "மனிக் பாம்' எனப்படும் மாணிக்கம் பண்ணை, மூடப்பட்டதைத் தொடர்ந்து அதன் பெருமளவு நிலப் பகுதியையும் தம் வசப்படுத்த படையினர் முயன்று வருகின்றனர்.
எஞ்சிய பகுதியில் அரச திணைக்களங்களும் தனியார் நிறுவனங்களும் பங்கு கேட்டு வருகின்றன. செட்டிகுளம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள 6,000 ஏக்கர் நிலப் பகுதியில் இடம்பெயர்ந்தோருக்கான தடை முகாம்கள் அமைக்கப்பட்டன.
படிப்படியாக அங்கிருந்து மக்கள் வெளியேறி மீளக் குடியமர்ந்ததை அடுத்து அதன் பெரும் பகுதியைத் தன் கைவசப்படுத்தும் பணிகளை இராணுவம் ஆரம்பித்துள்ளது.
"செட்டிகுளத்தில் காணிகள் தருமாறு கேட்டு பல தரப்பினரிடம் இருந்தும் எமக்கு விண்ணப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை நாம் கவனமாகப் பரிசீலித்து வருகின்றோம்.
தீர ஆராய்ந்த பின்னர் அது பற்றி முடிவெடுப்போம்'' என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜானக பண்டார தென்னக் கோன் தெரிவித்தார். மனிக் பாம் தடுப்பு முகாமின் வலயம் 3 அமைந்திருந்த பகுதியில் ஏற்கனவே இராணுவத்தினர் 200 ஏக்கர் நிலப்பகுதியைத் தம் வசப்படுத்தி விவசாயப் பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர். 3 கோடி ரூபாய்க்கு மேல் அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினரால் பண்ணை அமைக்கப்பட்ட பகுதியினுள் 35 முஸ்லிம் குடும்பங்களினுடைய காணிகள் அகப்பட்டுக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. அவற்றைத் தங்களிடம் திரும்பி ஒப்படைக்குமாறு அந்தக் குடும்பங்கள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பாக ஆராயும் கூட்டம் ஒன்று அண்மையில் வவுனியா செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தப் பகுதியில் தமக்கு 40 ஏக்கர் காணி தேவை என தொல்பொருள் திணைக்களமும் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றும் தொழிற்சாலை அமைப்பதற்காக அந்தப் பகுதியில் காணி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இவை தவிர்ந்த ஏனைய பெருமளவு நிலப்பகுதிகளைத் தன்வசப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் படைத்தரப்பு மேற்கொண்டு வருகிறது என்று தகவல்கள் கூறுகின்றனர்.........கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் சினி சன்முகத்தின் கானி என்பது குறீப்பிடத்தக்கது .சன்முகத்தையும் அவர் தம்பிஜையும் பிரேமதாச காலத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொலை செய்யப்பட்டார்கள் கானி அபகரிக்கப்படலாம் என்றூ செட்டிகுளம் மக்கள் விசினம் தெரிவிக்கின்றார்கள்
Aucun commentaire:
Enregistrer un commentaire