தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சிவனேசதுரை – சந்திரகாந்தன் அவர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் கிழக்கு மாகாண ஆலோசகராக பதவி வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2012 மாகாண சபைத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்து, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த சிவனேசதுரை சந்திரகாந்தனையே அரச தரப்பு முதல்வராக மீண்டும் நியமிக்க முடிவுசெய்திருந்தது. இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சதியினாலும், முஸ்லிம் காங்கிரசுடனான ஒப்பந்தத்தின் காரணத்தினாலுமே இறுதிநேரத்தில் முடிவு மாற்றப்பட்டது.
முஸ்லிம் காங்கிரசுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்பட்டதனால், சந்திரகாந்தனுக்கு மாகாண சபையில் அமைச்சு பதவி வழங்கப்பட்டது. இருந்தும், மாகாண சபையில் அதிகாரமுள்ளதும், முழுமையாக அபிவிருத்தி செய்யக்கூடியதுமான முதல்வர் பதவியை போல்லலாது, அமைச்சு பதவியினால் முழுமையாக மக்களின் அனைத்து தேவைகளையும நிறைவேற்றி வைக்கமுடியாது என்ற காரணத்தினாலும், இனரீதியான சமூக முரண்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் சந்திரகாந்தன் அவர்கள் தமது அமைச்சு பதவியையும் தியாகம் செய்தார். இருந்தும் மாகாண சபை உறுப்பினராக இருப்பதற்கு முடிவெடுத்தார்.
மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒரு தமிழ் மகனை புறக்கணிக்க முடியாது என்பதை உணர்ந்த அரசாங்கமும், ஜனாதிபதியும் தமது ஜனாதிபதியின்கிழக்கு மாகாண விசேட ஆலாசகராக சந்திரகாந்தன் அவர்களை நியமித்தது. இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பரிந்துரைசெய்யப்படுவதற்கும், அபிவிருத்திகளுக்கான நிதிப்பங்கீடு தொடர்பான தீர்மானம் எடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்குமான அதிகாரம் சந்திரகாந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மட்டக்களப்பு கச்சேரியில்(அரசாங்க அதிபர் பணிமனை) ஜனாதிபதியின் கிழக்கு மாகாண ஆலோசகர் சந்திரகாந்தன் அவாகளுக்கான உத்தியோகபூர்வ பணிமனை ஒன்றும் திறந்துவைக்கப்பட உள்ளடதுடன், நியமனம் மற்றும் அவருடைய கடமைகள் பற்றிய சுற்றிக்கை , கிழக்கு மாகாணத்லுள்ள மூன்று மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. அந்தவகையில்; சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிறைவேற்றமுடியாத வார்த்தைகளுக்கு வாக்களித்து சோர்ந்து போயுள்ள தமிழர்களுக்கும் சுபீட்சமானதொரு எதிர்காலத்தை கிழக்கு மண்ணில் உள்ள தமிழர்களின்பால் உள்ள அக்கறையினாலும்,தொடர்ந்தும் கிழக்கு வாழ் மக்களுக்காக ஜனாதிபதியின் விசேட ஆலோசகராகவும் இருந்து கொண்டு சேவையாற்ற இருக்கின்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire