mercredi 12 septembre 2012

பாகிஸ்தான் ஆலைகள் தீ விபத்தில் பலியானோர் தொகை 314ஆக உயர்வு!

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூரில் உள்ள இரண்டு பெரிய தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிர்ச்சிகரமாக 314 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த இரு கட்டிடங்களிலும் அவசர நிலையில் வெளியேறும் வழிகள் இல்லை, அடிப்படையான தீ எச்சரிக்கை வசதிகள் எதுவும் இந்த கட்டிடங்களில் இல்லை என்பது அதிர்ச்சியிலும் அதிர்ச்சி தரும் தக்வலாகும். 

அதிகாரிகளுக்கு பெரிதளவு லஞ்சங்களை வாரி வழங்கி நகரங்களில் தொழிற்சாலைகளை துவங்கும் தொழிலதிபர்கள் பாதுகாப்பு விதிகளை கடுமைஅயாக மீறியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கராச்சி ஜவுளி ஆலை தீ விபத்தில் நேற்று பிடித்த தீயிற்கு பலி எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தானின் 65 ஆணு கால வரலாற்றில் இது போன்ற கொடிய தீவிபத்துகள் ஏற்பட்டதில்லை. சாவு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது ஏனெனில் தீயணைப்புப் படையினர் இன்னமும் உடல்களை மீட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். 

தீ பிடித்து புகை சூழ்ந்ததால் அடித்தளப்பகுதியில் இருந்தவர்கள் மூச்சுத் திணறி இறந்துள்ளனர். தீ எதனால் ஏற்பட்டது என்பதே இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஜவுளி ஆலையின் முக்கிய வெளியேறும் கதவு திறக்க முடியாமல் போனது ஏன் என்ற கேள்வியும் அங்கு எழுந்துள்ளது. 

5 மாடிக் கட்டிடத்தில் மேல் அடுக்குகளில் இருந்தவர்கள் தப்பிக்கவே கடும் பிரயத்னம் செய்துள்ளனர். ஜன்னல்கள் உலோகக் கம்பிகளால் ஆனதால் தப்பித்தல் கடினமானது. பலர் மாடியிலிருந்து கீழே குதித்து படு காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதில் கொடுமை என்னவெனில் 27 வயது கர்ப்பிணியும் மாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறார் என்பதே. இன்னமும் கோரக்காட்சி என்னவெனில் தீப்பிடித்து நெருப்பிலிருந்து தப்பிக்க ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பிக்க முயற்சி செய்தவர்களில் சிலர் எரிந்த நிலையில் ஜன்னல் கம்பிகளில் தொங்கியதாக கூறப்படுகிறது. 

இரண்டு தொழிற்சாலை உரிமியாளர்களும் கிரே எஸ்கேப், போலீஸ் அவர்களுக்கு தீவிர வலை வீசியுள்ளது. 

இது இப்படியென்றால் லாகூர் ஷூ தொழிற்சாலையில் கரண்ட் கட் ஆனபோது ஜெனெரேட்டரை ஆன் செய்தபோது தீப்பொறி ஷூ த்யாரிப்பு ரசாயனத்திற் பட்டு தீ பெரிதானது. ஷூ தயாரிப்பிற்குத் தேவையான ரசாயனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இருந்துள்ளது அதுதான் தப்பிச் செல்லும் வழியும் கூட என்கிறார் அந்த தொழிற்சாலை தொழிலாளி. 

முக்கியக் கதவு அல்லது வழி வெளியேற முடியாமல் அடைக்கப்பட்டதே இவ்வளவு சாவுக்குக் காரணம் என்று தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


Aucun commentaire:

Enregistrer un commentaire