இடிந்தகரை கூடங்குளம் கடற்கரையில் போலீசு நடத்திய தடியடித் தாக்குதலைக் கண்டித்து கூடங்குளத்தில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் நகரில் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க வந்த போலீசு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கி சூட்டையும் மீறி மக்கள் போலீசை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.போலீஸ் நிலையத்தை மணப்பாடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பலர் முற்றுகையிட்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மணப்பாட்டை சேர்ந்த மீனவர் அந்தோணி ஜான் (வயது 48) என்பவர் குண்டு பாய்ந்து பலியானார். இறந்து போன அந்தோணி ஜானின் சொந்த ஊர் குமரி மாவட்டம் கேசவன் புத்தன் துறையாகும். இவரது மனைவியின் ஊரே மணப்பாடு. திருமணத்திற்கு பிறகு அந்தோணி ஜான் மணப்பாட்டிலேயே தங்கி தொழில் செய்து வந்தார்.
கூடங்குளம் போராட்டத்திற்கு சென்று துப்பாக்கி சூட்டில் அந்தோணி ஜான் இறந்த தகவல் கேசவன் புத்தன் துறையில் உள்ள அவரது உறவினர்களுக்கு இன்று தெரியவந்தது. கதறி துடித்த அவர்கள் இன்று உடனடியாக மணப்பாடு புறப்பட்டு சென்றனர் தூத்துக்குடியில் பாசிச ஜெயா ஆட்சியின் கொடுர தாக்குதலைக் கண்டித்து சில பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதே போன்று தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து மீனவக் கிராமங்களிலும் பெரும் கலவரம் எழுந்திருக்கிறது. அடக்குமுறைக்கு அஞ்சாத மக்கள் சக்தி இந்த அணுமின்நிலையத்தை விரைவில் மூடப்போவது உறுதி.

Aucun commentaire:
Enregistrer un commentaire