வி.சந்திரகுமார் (திரிகோணமலை)
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆருடங்கள் ஒருபுறமிருக்க, இத்தேர்தல் பலரின் முகத்திரையையும் பித்தலாட்டங்களையும் கிழித்து வைத்திருக்கிறது. முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உள்ளக் கிடக்கைகளையும், முன்னுக்குப் பின் முரணனான போக்குகளையும் தாராளமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதிலும் அதன் தலைவர் இரா.சம்பந்தனின் நிதானமிழந்த பேச்சுகள், அவரது கபடத்தனத்தை மட்டுமின்றி சிறுபிள்ளைத்தனத்தையும் புட்டு வைக்கின்றன.
சம்பந்தனை பொதுவாக ஊடகங்கள் மூத்த அரசியல்வாதி என்று விழிப்பதுண்டு. அவரது ஆதரவாளர்களோ இன்னும் ஒருபடி மேலே போய், அவர் ஒரு மிகப்பெரிய இராஜதந்திரி எனக் கூறுவதுண்டு. அப்படியான, தமிழர்களின் மரியாதைக்குரிய மனிதர், கிழக்கு மாகாணசபைத் தேர்தல் சன்னியால், எப்படி எப்படி எல்லாம் பிதற்றியிருக்கிறார் என்று பாருங்கள்!
ஆரம்பத்தில், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தான் நிச்சயம் வெற்றி ஈட்டி, மாகாண நிர்வாகத்தைக் கைப்பற்றும் என சம்பந்தன் அடித்துக் கூறி வந்தார்.
பின்னர் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கூட்டாக கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைக்கும் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார். அவரது அறிவித்தலுக்கு முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமோ அல்லது அவரது கட்சி உயர்பீடமோ எவ்வித பிரதிபலிப்பையும் வெளியிடவில்லை. முஸ்லீம் காங்கிரசின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் சிலர் மட்டும் சம்பந்தனின் ஆசை சரிப்பட்டு வராது என அறிக்கை விடுத்தனர்.
சம்பந்தன் பின்னர் தனது சொந்த ஊரான திரிகோணமலையில், தனது ஆதரவாளர்களுடன் நடாத்திய கலந்துரையாடல் ஒன்றில், தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியை அமைக்கும் என உறுதிபடக் கூறினார். அதாவது தமது கட்சிக்கு இத்தேர்தலில் 13 ஆசனங்கள் கிடைக்கும் என்றும், ஐ.தே.கவுக்கு 7 ஆசனங்கள் கிடைக்கும் என்றும், இருவருமாகச் சேர்ந்து 20 உறுப்பினர் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் எனக் கூறியுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஐ.தே.கவும் சேர்ந்து கிழக்குத் தோதலில் 10 உறுப்பினர்களையாவது வெல்வார்களா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்து, மலையகத் தமிழர்களின் வாக்குரிமையையும் பிரஜாவுரிமையையும் பறித்தெடுத்து, தனிச் சிங்களத் திட்டத்தை முன்மொழிந்து, 1977, 1981, 1983 எனப் பல தடவைகள் தமிழர்கள் மீது வன்செயலைக் கட்டவிழ்த்துவிட்டு, இனப்பிரச்சினையை யுத்தமாக மாற்றிய ஐ.தே.கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன அடிப்படையில் கூட்டாக ஆட்சி அமைக்கப் போகின்றது என்ற பெரிய கேள்வி, தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமின்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மத்தியிலும் எழுந்து நிற்கின்றது.
நாளுக்கொரு பேச்சுப் பேசிவரும் சம்பந்தன் இப்பொழுது கூறுகிறார், ‘கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களில் 80 வீதமானவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் கூட்டமைப்பு வெற்றி பெறும’; என்று. இது அடுத்ததொரு பித்தலாட்டக் கதை. ஏனெனில் சனத்தொகை விகிதாசாரத்தை எடுத்துப் பார்க்கையில,; தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அங்கு வாழ்கின்ற 100 வீதமான தமிழர்களும் வாக்களித்தால் கூட, கூட்டமைப்பு வெற்றிபெற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க சம்பந்தன் இவ்வாறு கூறி, கணிதத்தில் தனக்குள்ள ஞானசூனியத்தை வெளிப்படுத்துகிறாரா அல்லது தமிழ் மக்களுக்கு கணக்கு விடுகிறாரா என்று தெரியவில்லை.
இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை தனது வடபகுதி ஜம்பவான்கள் எவரையும் பிரச்சாரக் களத்தில் இறக்காமல் தவிர்த்து வருவதன் மர்மம் என்னவென்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது. வடக்கின் ‘பிரச்சாரப் பீரங்கிகளான’ மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் கிழக்கில் வந்து வாய் திறந்தால், கூட்டமைப்புக்கு விழுகிற வாக்குகளும் விழாமல் போய்விடும் என்ற பயம்தான், அவர்களைக் கிழக்கில் களமிறக்காததின் மர்மம் எனக் கூறப்படுகிறது. கூட்டமைப்பில் வலிந்து சென்று சேர்ந்து கொண்ட வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன் போன்றோருக்கும் பெரிதாக அழைப்பு ஏதுமில்லை.
இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைமை தனது வடபகுதி ஜம்பவான்கள் எவரையும் பிரச்சாரக் களத்தில் இறக்காமல் தவிர்த்து வருவதன் மர்மம் என்னவென்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது. வடக்கின் ‘பிரச்சாரப் பீரங்கிகளான’ மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் கிழக்கில் வந்து வாய் திறந்தால், கூட்டமைப்புக்கு விழுகிற வாக்குகளும் விழாமல் போய்விடும் என்ற பயம்தான், அவர்களைக் கிழக்கில் களமிறக்காததின் மர்மம் எனக் கூறப்படுகிறது. கூட்டமைப்பில் வலிந்து சென்று சேர்ந்து கொண்ட வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன் போன்றோருக்கும் பெரிதாக அழைப்பு ஏதுமில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் தேர்தல் வெற்றிக்காக கிழக்கில் கண்மண் தெரியாமல் பேசிவரும் பேச்சுக்கு, அங்குள்ள மக்கள் செப்ரெம்பர் 8ம் திகதி என்ன பதில் அளிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire