lundi 24 septembre 2012

மெனிக்பாம் முகாமை அண்டிய பகுதிகளில் நிர்மானிக்கப்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்டவை தொடர்ந்தும் இயங்கும் என வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்சந்திர குறிப்பிட்டுள்ளார்.


வன்னி கட்டளைத் தளபதி
மெனிக்பார்ம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 1185 பேர் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் -

இறுதிக்கட்ட போர் காரணமாக இடம்பெயர்ந்து மெனிக்பார்ம் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 185 பேர் இன்று மீள்குடியேற்றத்திற்காக முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பேருந்துகள் மூலம் இவர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பேனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். இவர்கள் நாளைய தினம் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றப்பட உள்ளனர். 
இடம்பெயர்ந்த இந்த மக்கள் மீள குடியேற்றப்பட்டுள்ள நிலையில், இடம்பெயர்ந்த அனைத்து மக்களுக்கும் முழுமையாக குடியேற்றப்பட்டு விட்டதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட போரில் இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் மக்கள் கடந்த 3 வருடங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சு கூறியுள்ளது.... இந்த சூல்நிலையில் பெனிக்பாம் முகாமை அண்டிய பகுதிகளில் நிர்மானிக்கப்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்டவை தொடர்ந்தும் இயங்கும் என வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிஸ்சந்திர குறிப்பிட்டுள்ளார்.இதன் பின்னோக்கம் என்ன என்பதை வவுனியாவில் ஆட்சிசெய்யும்  ரி.என் .எ   மற்றூம் பிளட்   மக்களூக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றூ அப்பிரதேச மக்கள் கேள்வி எளூப்பி உள்ளனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire