mardi 11 septembre 2012

முதலமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கே உண்டு


தேர்தல் இடம்பெற்ற வடமத்தி, கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங் களுக்காக, முதலமைச்சர்களை நியமி க்கும் அதிகாரம், இம்மாகாணங்களின் ஆளுநர்களுக்கே உண்டு எனவும், தகைமை கொண்டோர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இணக்கத்துடன் இவ்வாரத்திற்குள் நியமிக்கப்படுவர் என சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.

மாகாண சபையை நிர்வகிப்பதற்கு தகைமை கொண்டோர், ஆளுநர்களினால் நியமிக்கப்படுவர். கூட்டமைப்பு பெயர்களை பரிந்துரை செய்வதுடன், இதற்கான இறுதி அங்கீகாரம் ஆளுநரினால் வழங்கப்படும். மாகாண சபைக்காக தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள், நாளை வர்த்தமானியில் வெளியிடப்படுமென, தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகளுக்கான அமைச்சர்களின் பெயர்களும், ஆளுநர்களுக்கு சமர்ப்பிக்கப்படுமென, அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.


Aucun commentaire:

Enregistrer un commentaire