mardi 18 septembre 2012

1லட்சம் ரூபா ஊதியமும் பல சிறப்புரிமைகளும்



கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்படட்தன் பின்னர் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தின் போது வெற்றி பெற்ற பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்;றார்.
இந்நிலையில் இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய போதும் இவர் கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
ஒரு லட்சம் ரூபா ஊதியமும்,  பல சிறப்புரிமைகளும் 
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ. சந்திரகாந்தன் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.  கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் சார்பில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்டார்.
முதுலமைச்சராக நியமிக்கப்படாத சந்திரகாந்தனுக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவியை வழங்கி சமாதானப்படுத்தியுள்ளார்.  ஏற்கனவே ஜனாதிபதிக்கு பல துறைகளுக்காக ஏராளமான ஆலோசகர்கள் இருக்கும் நிலையில் சந்திரகாந்தனும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. 
அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசகராக இருப்பவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபா ஊதியமும்,  பல சிறப்புரிமைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் அமைச்சராக இருந்த பொது கிழக்கில் எந்த இன ரீதியான பாகுபாடும் காடாமல் , குழப்பங்கள் , போராடங்கள் இல்லாமல் வழிநடத்தினார் என்பது உலகம் அறியும்.  சந்திர காந்தன் நாட்டுக்கு நல்லதை செய்யும் நல்லதொரு எம்மக்கு கிடைத்த  கிழக்கு மண்ணை மீட்ட மண்ணின் மகிந்தர்களில் ஒருவர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire