சீனாவில் வாகன விபத்தொன்றின்போது, அந்தக் காட்சியைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்த வீதிப் பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
36 பேர் கொல்லப்பட்ட குறித்த வாகன விபத்தின் காட்சிகளைப் பார்த்து அந்த பாதுகாப்பு அதிகாரி சிரித்துக்கொண்டிருக்கும் படங்கள் வெளியானதை அடுத்து அந்த சம்பவம் சீனாவில் பொதுமக்கள் மத்தியில் பெரும் விசனங்களை ஏற்படுத்தியிருந்தது.
சீனாவின் இணையதளங்கள் எங்கும் பரவியிருந்த யாங் டகாய் என்ற அந்த அதிகாரியின் படங்கள் மக்கள் மத்தியில் ஆத்திரம் கலந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
விலையுயர்ந்த கைக்கடிகாரம், கைச்சங்கிலி, கண்ணாடி போன்றவற்றை அணிந்திருந்த அந்த அதிகாரியின் சம்பளம் எவ்வளவாக இருக்கும் என்ற கேள்வியையும் மக்கள் மத்தியில் எழுப்பியிருந்தது.
விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருந்தமை மற்றும் பொது ஒழுங்கை கடுமையாக மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களை அடுத்து குறித்த அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சீனாவின் அரச ஊடகம் அறிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire