வடமாகாணத்தில் உள்ள நிலைமைகளை நேரடியாக வந்து பார்வையிடுமாறு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.புதுடில்லியில் இடம்பெற்ற விருந்து நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் இடம்பெறுகின்ற பகுதிகளை தவிர, மக்கள் தங்கி இருந்த ஏனைய பகுதிகளில் மீள்குடியேற்றங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கம் வடக்கில் தமிழ் மக்களுக்கு போதுமான சேவைகளை வழங்கி வருகிறது.
இவற்றை நேரடியாக பார்க்காமல், தமிழகத்தில் இருந்துக் கொண்டு கண்டன அறிக்கைகளை விடுவதில் நியாயம் இல்லை.
இந்த நிலையில் ஜெயலலிதா ஜெயராம் நேரடியாக இலங்கை வந்து, வடக்கு தமிழர் பிரதேசங்களுக்கு சென்று நேரடியாக பார்வையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire