vendredi 2 octobre 2015

பொன்னான வாழ்வு மண்ணாகி போனால் துயரம் நிலைதானா? உலகம் இதுதானா?

Brin Nath இன் புகைப்படம்.
ஜூலை 29, இலங்கை - இந்திய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாள். இவ் ஒப்பந்தம் பின்வரும் முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
1) ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். இலங்கை ராணுவத்தினரும், போராளிகளும் போரை நிறுத்த வேண்டும்.
2) மூன்று நாட்களுக்குள் ராணுவத்தினர் அவர்களுடைய முகாமுக்குத் திரும்பிவிட வேண்டும். போராளிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.
3) இலங்கையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். ஆயுதங்களை ஒப்படைத்த போராளிகள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்று, மற்ற குடிமக்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள்.
4) தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரே தமிழ் மாகாணமாக அமைக்கப்படும். இந்த மாகாண சட்டசபைக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும். ஒருவேளை தாமதமானால் அதே ஆண்டு டிசம்பர் 31 ற்கு முன்னர் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெறும்போது, அதை மேற்பார்வையிட இந்தியாவில் இருந்து பார்வையாளர்கள் வருவார்கள்.
5) இந்த மாகாணத்திற்கு முதலமைச்சர் இருப்பார். அவரை பொதுமக்கள் தேர்ந்து எடுப்பார்கள். கவர்னரை ஜனாதிபதி நியமிப்பார்.வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் நிரந்தரமாக இணைந்திருக்க விருப்பமா என கேட்டு, 1988 இறுதிற்குள் கிழக்கு மாகாணத்தில் பொது ஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.கலவரம் காரணமாக இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய 1,30,000 தமிழ் அகதிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளலாம்.
6) இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கும், சுதந்திரத்துக்கும் ஆபத்து உண்டாக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளும், இந்திய மண்ணில் நடக்காதபடி இந்திய அரசாங்கம் பார்த்துக் கொள்ளும்.
7) இந்தியாவுக்கும், இலங்கைக்கும் மத்தியில் உள்ள கடல் பகுதியில் போராளிகள் போர் நடவடிக்கையில் ஈடுபடாதபடி இந்திய கப்பல் படைகளும், கடலோர பாதுகாப்பு படையினரும் கவனித்துக் கொள்வார்கள்.
8) இந்த ஒப்பந்தத்துக்கு இலங்கை பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்படும். இதற்காக பாராளுமன்றம் கூட்டப்படும்.
9) ஒப்பந்தத்தின் அம்சங்களை நிறைவேற்றுவதில் இந்திய ராணுவ உதவியை இலங்கை அரசாங்கம் நாடினால் அதற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.
10) இந்தியா வந்துள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்பி அனுப்பும் பணியை, இந்தியா துரிதப்படுத்தும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire