dimanche 4 octobre 2015

தரைமட்டமான ஐ.எஸ். தீவிரவாத நிலைகள் ரஷ்ய போர் விமானங்களின் குண்டு மழையில்

ரஷ்யா தாக்குதல் ்கிய நிலைகள் மீது ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதில், ராக்காவுக்கு அருகே உள்ள ஐ.எஸ். தலைமை நிலை முற்றிலுமாக தரைமட்டமானது.

குறிப்பாக, சுகோய் -34 ரக போர் விமானங்கள் கான்கீரீட்டை கூட துவம்சம் செய்து பொடிப்பொடியாக்கும் BETAB-500 ரக குண்டுகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் அதிகமுள்ள ராக்கா பகுதி மீது வீசியது. இந்த வீடியோவை ரஷ்ய ராணுவம் இன்று வெளியிட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஏற்கனவே வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை அங்கு பதுக்கி வைத்திருந்ததாகவும், அதன் மீது குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சிரியாவின் வடமேற்கு பகுதியில் இத்லிப் மாகாண எல்லையில் அமைந்துள்ள ஜிசர் அல்-சுகுர் நகரத்தில் மலைப்பகுதியில் வெடிபொருட்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்ததாகவும், அதை ரஷ்யா தனது சுகோய் -24 ரக குண்டு வீசும் போர் விமானங்களால் தாக்கி அழித்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரஷ்ய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



ரஷியாவுக்கு அமெரிக்கா ஆலோசனை 'சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துங்கள் '

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போர் நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.

அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு வலுவூட்டுகிற வகையில், கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா வான்தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் 3 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும் என ரஷியா அறிவித்துள்ளது.

ஆனால் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை விட, சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷியா வான்தாக்குதல்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி ஆலோசனை கூறினார்.

'தெளிவானது இதுதான்'. இதைத்தான் நாங்கள் உணர்த்தி இருக்கிறோம் '' எனவும் அவர் குறிப்பிட்டார்.                                    

Aucun commentaire:

Enregistrer un commentaire