dimanche 4 octobre 2015

ஐக்கிய நாடுகள் சபை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை இராஜதந்திர வெற்றி என்பதை ஏற்க முடியாது – மஹிந்த ராஜபக்ஸ

635_nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை குறித்த அமெரிக்காவின் பிரேரணை, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை, இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என்ற சிலரின் கருத்தை தான் ஏற்கப் போவதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மற்றும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை பொறிமுறையில் வௌிநாட்டு நீதிபதிகள், பரிசோதகர்கள், விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் இடம்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்தத் தீர்மானித்தின் படி இலங்கை பாதுகாப்புப் பிரிவில் மனித உரிமைகளை மீறியதாக சந்தேகிக்கப்படுபவர்களை, நீதிமன்றத்தின் முன் நிறுத்த போதுமான சாட்சிகள் இல்லையாயின், அவர்களை நிர்வாக செயல்முறையின் கீழ் பணிநீக்கம் செய்ய முடியும் எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
இவை குறித்த தீர்மானத்திலுள்ள சில எதிர்மறை நடவடிக்கைகள் மட்டுமே எனவும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire