lundi 10 août 2015

மரண அறிவித்தல் கதிரமலை என்று அழைக்கப்படும் திரு வைத்திலிங்கம் கோபாலகிருஸ்ணன் நெடுந்தீவு

மரண அறிவித்தல் கதிரமலை என்று அழைக்கப்படும் திரு வைத்திலிங்கம் கோபாலகிருஸ்ணன் நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னார் 02-08-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் காலஞ்சென்ற வைத்திலிங்கம், பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, அருளம்மா(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,குண்டுமணி அவர்களின் அன்புக் கணவரும்,கெளரி, ஈசன், தங்கா, துஸ்யா, கண்ணன், கனேஸ், குமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,விஸ்வரத்தினம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான பெற்றம்மா, தவமணி, மற்றும் மலர்(இலங்கை), சந்திரா(இலங்கை), லலிதா பிரான்ஸ் காலஞ்சென்ற குகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நற்குணராஜா, வரதலட்சுமி, ரத்தினம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரமேஸ், கண்ணன், வாகீசன், அனுஷா, அனித்தா, கொறாளி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுஜீவன், துசாந்தன், கிருஷாந்தன், ஆதவன், ஆதித்தன், அதிசயா, சுஹானா, சுதேவ், அஸ்ரொன், லீசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.புதன்கிழமை 12/08/2015, 10:45 மு.ப — 12:45 பி.ப
அஞ்சலிக்காக வைக்கப்பட்டும் முகவரி: La Maison Funérarium, 7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France(Metro L-2 Philippe Auguste  நல்லடக்கத்திற்காக புதன்கிழமை 12/08/2015, 01:00 பி.ப — 02:15 பி.ப
முகவரி: Crématorium du Père Lachaise, Place Gambetta, 71 Rue des, Rondeaux, 75020 Paris, France(Metro L-3 Gambetta) தொடர்புகளுக்கு ரமேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651505564
ஈசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33649698299
கண்ணன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33761745190
கனேஸ் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650499813
குமரன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781058902
லலிதா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666092731
விஸ்வரட்ணம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447402009333
நற்குணராஜா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33614874765
ரத்தினம்(மாமா டெக்கோர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33666905337

dimanche 9 août 2015

கொலைக்குற்றம் தொடர்பு இருப்பதாக தனது பாதுகாப்பு படையை கலைத்துவிட்டார் இலங்கை அதிபர்

ராஜபக்சேவை வீழத்தி புதிய இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைத்ரிபால சிறிசேனா ஆகஸ்ட் 17-ந்தேதி நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தீவிரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு அதிபர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இந்த அதிபர் பாதுகாப்பு பிரிவு முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியில் உருவாக்கப்பட்ட பிரிவாகும். இதில் இடம்பெற்றுள்ள பல்வேறு வீரர்கள் மீது கொலைக்குற்றம் தொடர்பு இருப்பதாக தகவல் வந்தது. இதனடிப்படையில் இந்த பிரிவை உடனடியாக கலைத்து விட்டு, தீவிர பயிற்சி பெற்ற சிறந்த கமாண்டர்களை கொண்ட சிறப்பு ஆயுதப்படை வீரர்களை பாதுகாப்பிற்காக ஸ்ரீசேனா அமைத்துள்ளார்.
ராஜபக்சே கடந்த 10 ஆண்டு காளமாக அதிபர் பதவியில் இருந்தபோது பயன்படுத்திய பாதுகாப்பு படையைத்தான் இதுவரை சிறிபாலா பயன்படுத்தி வந்தார். ராஜபக்சே காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நடைபெற்றது. அப்போது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக பாதுகாப்பு படையினர் மீது புகார் எழுந்தது.
இதனால், தன்னுடைய பாதுகாப்பு படையை கலைத்துவிட்டார் என்று இலங்கை மந்திரி ஜான் அமரதுங்கா கூறியதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், ‘‘ஆயுதம் ஏந்திய இலங்கையின் சிறப்பு ஆயுதப்படை சிறிபாலாவின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்கும்’’ என்றார்.
அதிபர் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் ஆயுதங்களுடன் சிறிபாலா அருகில் கடந்த ஏப்ரல் மாத்ம நெருங்கி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.
மேலும், கடந்த 2012-ம் ஆண்டு ரக்பி வீரர் வாசிம் தஜுதீன் கொலை வழக்கில் அதிபர் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக மந்திரிசபை செய்தி தொடர்பாளர் ரஜிதா செனரத்னே குற்றம்சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான்கள் தாக்குதல்: 29 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு நடத்தப்பட்ட தலிபான்கள் தாக்குதலில் 29 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு ஆப்கானிஸ்தானில் குர்தீஸ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தாலிபான் தீவிரவாதிகள் சனிக்கிழமை இரவு நடத்திய தற்கொலை தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் தலிபான்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மற்றவர்கள் பொதுமக்கள் ஆவார்கள். மேலும் இந்த தாக்குதலில் 19 பேர் மோசமாக காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் தலிபான் தலைவர் முல்லா ஒமர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தெரிவித்த நிலையில், இந்த தாக்குதல் நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

மர்மமான மரணத்தில் இரண்டாவது மகனுக்கு சமந்தம் கிடையாது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுப்பு

ரக்பி விளையாட்டு வீரரின் மர்மமான மரணத்தில் தனது இரண்டாவது மகனான யோஷிதவுக்கு தொடர்பு எதுவும் கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். 2012 இல் காரில் சடமாக மீட்கப்பட்ட வசீம் தாஜுதீன் என்னும் அந்த வீரர், தமது குடும்பத்தின் நெருங்கிய நண்பர் என்று ராஜபக்ஷவின் மூத்த மகனான நாமல் ராஜபக்ஷ கூறிய இரு தினங்களின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்த மறுப்பு வந்திருக்கிறது.
இந்த மரணம் தொடர்பாக புதிய விசாரணையை ஆரம்பிக்குமாறு நீதிபதி ஒருவர் உத்தரவிட்டதை அடுத்து, அவரது சடலம் திங்களன்று மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளது.
கார் விபத்திலேயே அவர் இறந்ததாக முன்னதாக போலிஸார் கூறிவந்தனர்.
ஒரு பெண் தோழி விவகாரத்தில் யோசித்த ராஜபக்ஷவுக்கும் தாஜுதீனுக்கும் இடையே முரண்பாடு இருந்ததாக பரவலாக கூறப்பட்டு வந்திருக்கும் நிலையில், ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகள் மூவர் தாஜுதீனை கொன்றதாக தம்மிடம் ஆதாரம் இருப்பதாக இலங்கையின் புதிய அரசாங்கம் கூறியுள்ளது

vendredi 7 août 2015

புதிய தேசத்தைக் கட்டியெழுப்ப கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள் பெற்ற வெற்றியை : சந்திரிகா

புதிய தேசத்தைக் கட்டியெழுப்ப கிடைத்த உயரிய சந்தர்ப்பத்தை நாசமாக்க எதிர்வரும் பொதுத் தேர்தல் ஊடாக முயற்சி மேற்கொள்ளும் சக்திகளைத் தோற்கடிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார். கட்சியைப் பாதுகாப்பதற்காக முதலில் நாட்டைச் சரி செய்ய வேண்டும். அதனை ஜனவரி 08 ஆம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாப்பது மிக முக்கியமானதென்றும் அவர் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். இதன் பிரகாரம் ஜனவரி 08 ஆம் திகதி நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணம் செய்த சகல சக்திகளுடன் ஒன்று சேர்ந்து சகல தரப்பினரின் பங்குபற்றல் உடன் வெற்றி கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு ஆளுமையைப் போன்று தியாகமும் பூண்ட சக்திகளுடனும், தலைமைத்துவத்துடனும் ஒன்றுபடுமாறும் அவர் சகல ஸ்ரீல.சு.கட்சியினரைக் கேட்டுள்ளார்.
அதிகார வெறி பொய்யான கற்பனை களைப் பரப்பி சமூகத்தைப் பயங்கர வாதமாக்கும் விஷம் கலந்த சக்திகளை தோற்கடிப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு அவசியம் என்றும் அவர் கருத்துத்
தெரிவித்துள்ளார்.

சிறந்த ஆட்சிக்கான தேர்தலில் சகல பிரஜைகளும் ஜனவரி 08 ஆம் திகதி வழங்கிய வெற்றியை முன்கொண்டு செல்லக்கூடிய நாகரிக மிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் வாக்குகளை வழங்கி பாராளுமன்றத்தைக் கெளரவமான மக்கள் அபிலாஷைகளை நிறைவேற்றும் நிறுவனமாக கட்டியெழுப்ப சிந்தித்துச் செயற்படுமாறும் அவர் தமது அறிவித்தலில் கேட்டுள்ளார்.

விஜயகலா மன்னன்னை ஈழக் கோரிக்கைக்கு ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லையாம்

ஈழக் கோரிக்கைக்கு ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என பிரதி அமைச்சர்  விஜயகலா மன்னன்னை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை எனவும் விஜயகலா மன்னன்னை  தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் சில தரப்பினர் அடிப்படையற்ற வகையில் தம்மைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த

இவ்வாறான பிரச்சாரங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ வரைப்படத்தில் வேட்பாளரின் உருவப்படத்தைப் பொறித்து தெற்கில் முரண்பாட்டு நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது என வட்டுக்கோட்டை தீர்மனத்தைப்பற்றி தெரியாத விஜயகலா மன்னன்னை மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

mercredi 5 août 2015

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளில் சீனர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்

unnamed (1)_0  இலங்கைக்கு  வருகை தந்த சீன  அழகு ராணிகள் (படங்கள்) unnamed 1 0கடந்த ஜூலை மாதம், இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளில் சீனர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளிலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தரவுகளின்படி,
இதுவரை காலமும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இந்தியாவே முன்னணியில் இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது சீனா.
இலங்கைக்கு கடந்த ஜூலை மாதம், 175,804 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இது கடந்த ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 31 வீதம் அதிகமாகும்.
சீனாவில் இருந்து மட்டும், கடந்த ஜூலை மாதம், 25,120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 65.5 வீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும், 119,705 சீனர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை, 24,681 ஆகும். கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 28 வீத அதிகரிப்பாகும்.
அதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும், இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
170,134 இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களிலும் வருகை தந்துள்ளனர்.

dimanche 2 août 2015

விக்னேஸ்வரன் கூத்தாடிகள் கூட்டமைப்புக்கு ஆப்பு

The photo of Sampanthan and Ranil holding the Lion flag highlighted in the Colombo media [Photo courtesy: Daily Mirror]யாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதில்லை என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமின்றி பல்வேறு தமிழ்க் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற விக்னேஸ்வரன், இம்முறை கூட்டமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார்.
தாம் மக்களுக்கு சேவையாற்றக் கூடிய நபர் என்பதால் பக்க சார்பின்றி நடுநிலை வகிப்பதாக விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

ஐநா உறுதி மொழி சமாதான நடவடிக்கை ஊக்கப்படுத்துவதற்கான நிதி மற்றும் தொழில்நுட்பஉதவிகள்

இலங்கையின் வடக்கு மக்களுக்கு சமாதான நடவடிக்கைகளில் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதற்கான உதவிகள் உட்பட அந்த நாட்டுக்கு பரந்துபட்ட தொழில்நுட்ப மற்றும் நிதிகளை ஒதுக்கியுள்ளதாக ஐநா நேற்று கூறியுள்ளது.ஐநாவின் தலைமைச் செயலர் மற்றும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநாவின் துணைச் செயலர் ஆகியோரின் உறுதி மொழிகளுக்கு ஏற்ப இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஐநா இந்த உதவிகளை வழங்கும் என்று ஐநா பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்த பொறுப்புக் கூறல் விடயத்தில், சர்வதேச பொறிமுறைக்கு பதிலாக உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமல்படுத்த ஏதுவாக ஐநா அந்த நாட்டுக்கு நிதி உதவிகளை செய்கிறதா என்று
செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஐநா பேச்சாளரான ஸ்டீபன் டுஜரிக், நல்லிணக்கத்துக்காகவும் பொறுப்புக்கூறலுக்காகவும் இலங்கை அரசாங்கமும், இலங்கை மக்களும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐநா உதவும் என்றும், வடமாகாண முதலமைச்சர் கேட்டதற்கு இணங்க அங்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை ஐநா செய்யும் என்றும், சமாதான முயற்சிகளில் வடமாகாண மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கான உதவிகளும் அதில் அடங்கும் என்றும் கூறினார்.
சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதி:
இந்த சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தவும், மனித உரிமைகளை அங்கு மேம்படுத்தவும், குற்றஞ்செய்பவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கும் நிலையை அகற்றவும் பயன்படும் என்றும் அந்த பேச்சாளர் மேலும் கூறினார்.
அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தவும், நல்லிணக்க முயற்சிகளுக்கும் ஏற்கனவே ஒரு மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பொறுப்புக் கூறும் பொறிமுறை உள்நாட்டுக்குரியதா, அல்லது சர்வதேச பொறிமுறையா என்பதற்கு அப்பால், திட்டங்களை அமல்படுத்த நாம் இலங்கை அரசாங்கத்துக்கும், வடக்கு மாகாண சபைக்கும் உதவுகிறோம் என்பதுதான் இங்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.
அங்கு மேற்கொள்ளப்படப் போவது உள்நாட்டுப் பொறிமுறையா அல்லது சர்வதேசப் பொறிமுறையா என்பதை அறிய ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் இறந்தது ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் தான் என ஆங்கில செய்தி நிறுவனங்கள் செய்தி


கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ப்பு தாய் மற்றும் சகோதரி, இன்று இங்கிலாந்தில் நேரிட்ட பயங்கர விமான விபத்தில் பலியாகியுள்ளனர்.
  
தெற்கு இங்கிலாந்தில் பின் லேடன் குடும்பத்திற்கு சொந்தமான தனியார் ஜெட் விமானத்தில், அவரின் வளர்ப்பு தாயும், சகோதரியும் இங்கிலாந்தில் உள்ள பிளாக்புஷ் விமான நிலையத்துக்கு பயணம் செய்தனர்.

ஜெட் விமானத்தை விமான நிலையம் அருகே தரையிறக்கம் செய்த போது, திடீரென அந்த ஜெட் விமானம் நிலை தடுமாறி அருகில் இருந்த கார் நிறுத்துமிடத்தில் மோதி வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த ஒசாமாவின் உறவினர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஜெட் விமான விபத்தில் இறந்தது ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் தான் என ஆங்கில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வந்தாலும் அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. சமூக வலைதளங்களிலும் உயிரிழந்தவர்கள் ஓசாமா பின்லேடனின் உறவினர்கள் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

mercredi 29 juillet 2015

போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில்

இந்திய கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக அந்நாட்டின் தேசிய அபாயகர மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டாக்டர் நிலங்க  சமரசிங்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்..இந்தியா - இலங்கைக்கு இடையிலான போதைப் பொருள் பரிமாற்றம் பெரும்பாலும் தென் இந்திய கடற்பரப்பினூடாகத்தான் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்த சமரசிங்க, இதைத் தடுப்பதற்காகவே பிராந்திய தகவல் நிலையமொன்றை அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இந்தியா விஷேச ஒத்துழைப்பை அளித்துவருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்கள் மீனவப் படகுகள் மூலமே இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நோக்குடன், இந்திய, பாகிஸ்தான் , நேபாளம், பர்மா, மாலத் தீவு மற்றும் இலங்கைக்கு இடையில் பிராந்திய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் உதவியுடன் ஆசிய தகவல் பறிமாற்ற சபை ஒன்றை இலங்கையில் நிறுவ நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.இது  பொலிஸ் போதைப்­பொருள் தடுப்­புப்­பி­ரிவின் பணிப்­பா­ளரை தொடர்பு கொண்டு கேட்டோம். கைப்­பற்­றப்­பட்ட போதைப்­பொ­ருட்­க­ளுக்கு என்ன நடக்­கி­றது என்­பதை அவர் பின்­வ­ரு­மாறு விளக்­கினார்:
எந்த ஒரு திணைக்­க­ளத்­தனாலும் கைப்­பற்­றப்­படும் போதைப்
பொ­ருள் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ரி­டமே கைய­ளிக்­கப்­படும். இவ்­வாறு கைய­ளிக்­கப்­படும் அல்­லது போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­படும் போதைப்­பொ­ருட்கள்  முதலில் முழு­மை­யாக   போதைப் பொருள் தடுப்பு பிரிவால் அரச இர­சா­யனப் பகுப்­பாய்­வாளர் திணைக்­க­ளத்­துக்கு  ஒப்­ப­டைக்­கப்­படும். 
அங்கு பரி­சோ­த­னைகள் நடத்­தப்­பட்டுஇ கைப்­பற்­றப்­பட்ட பொருட்கள் போதைப் பொருட்­கள்தான் என உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால்,உரி­ய­மு­றையில் சீல்­வைக்­கப்­பட்டு இர­சா­யனப் பகுப்­பாய்­வாளர் திணைக்­க­ளத்தால் நீதி­மன்­றத்­துக்கு கைய­ளிக்­கப்­படும்.கைப்­பற்­றப்­ப­டு­கின்ற ஹெரோயின் போதைப் பொருட்கள் தொடர்­பான வழக்­குகள் நீதிவான் நீதி­மன்றம் மற்றும் மேல் நீதி­மன்­றங்­களில் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. 500 மில்­லி­கி­ரா­முக்கு குறை­வான ஹெரோயின் கைப்­பற்­றப்­படும் போது அது தொடர்­பான வழக்கு நீதிவான் நீதி­மன்­றத்­திலும் 500 மில்­லி­கி­ரா­முக்கு மேற்­பட்ட  ஹெரோயின் தொடர்பா வழக்­குகள் மேல் நீதி­மன்­றத்­திலும் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­படும்.இவ்­வாறு  கைய­ளிக்­கப்­படும் ஹெரோயின் தொடர்­பான வழக்கு நட­வ­டிக்­கைகள் நிறைவு பெற்ற பின்னர் தண்­ட­னைச்­சட்டக் கோவையில்  உறுப்­புரை 425 முதல் 433 இல் கூறப்­பட்­டுள்ள முறை­மைக்கு அமைய ஹெரோயின் அழிக்­கப்­படும்.

தீர்ப்பு வழங்­கிய நீதி­பதிஇ பொலிஸ் போதைப்­பொருள் தடுப்பு பிரிவின் பணிப்­பாளர் அல்­லது அவ­ரது பிர­தி­நி­தி­யான ஓர் உயர் அதி­காரிஇ நீதி­மன்ற பதி­வாளர்இ தேசிய அபா­ய­க­ர­மான ஒள­டத கட்­டுப்­பாட்டு சபையின் அதி­கா­ரிகள்இ சட்­டத்­த­ர­ணிகள், நீதி­ப­தியின் அனு­ம­திக்கு இணங்க ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஆகி­யோரின் முன்­னி­லையில் இர­க­சி­ய­மாக அல்­லாமல் திறந்த இடத்தில் இந்த அழிப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.  கைப்­பற்­றப்­பட்ட ஹெரோயின் தண்­ணீரில் கரைக்­கப்­பட்டு மல­ச­லக்­கூட குழியில் ஊற்­றப்­பட்டு அழிக்­கப்­படும்.

இந்தப் போதைப் பொருட்கள் கடலில் கரைத்து அழிப்­பதால் சூழல் மாச­டை­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­மாக உள்­ளன. அதே­வேளை அப்­போதைப் பொருட்கள் தீயிட்டு அழிக்­கப்­ப­டு­மானால் சமூ­கத்­தி­லுள்ள, போதைப் பொருள் உப­யோ­கிக்­காத மக்­களின் ஆரோக்­கி­யத்­துக்கு பாதிப்பு ஏற்­படும் என்ற நோக்கில் இந்த முறைகள் தவிர்க்­கப்­ப­டு­கின்­றன. அதனால் தண்ணீரில் கரைக்­கப்­பட்டு மல­ச­ல­கூட குழியில் ஊற்றி அழிக்­கப்­ப­டு­கின்­றன.

பெரும்­பாலும் நீதி­மன்ற வளா­கத்தில் உள்ள மல­ச­லக்­கூட குழி­க­ளி­லேயே இவ்­வாறு கரைத்து ஊற்­றப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்தார் அவ்­வா­றால்­லாமல் வேறு ஒரு இடத்தில் இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­மானால் குறித்த இடத்­துக்கு மேற்­படி அதி­கா­ரிகள் அனை­வரும் வரு­கை­தர வேண்டும்' என அவர் கூறினார்.கஞ்சா போன்ற போதைப்­பொ­ருட்­களும் அழிக்­கப்­ப­டு­கின்­றன. அண்மைக் கால­மாக நாட்டில் பல்­வே­று­பட்ட போதைப் பொருள் சுற்­றி­வ­ளைப்­புகள் இடம் பெற்­று­வ­ரு­கின்­றன. ஹெரோயின் தொடர்பில் 12,000 இற்கும் அதி­க­மா­ன­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவின் தர­வுகள் தெரி­விக்­கின்­றன.

பொலி­ஸாரால்  இலங்­கையில் செயற்­பட்டு வரு­கின்ற இந்த போதைப் பொருள் வலை­ய­மைப்பை முடக்­கு­வ­தற்­கான பல்­வேறு நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. உள்­நாட்டில் மாத்­தி­ர­மல்­லாது சர்­வ­தேச அளவில் இந்த போதைப்­பொருள் மோசடி நீண்டு செல்வதாகவும் சர்வதேச அளவில் இருந்து செயற்படும்  போதைப் பொருள் செயற்பாட்டாளர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியையும் இலங்கை பொலிஸார் நாடியுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர்  தெரிவித்துள்ளார்.போதையற்ற ஓர் உலகை கட்டி யெழுப்பவும்,எதிர்கால சமூகத்துக்கு ஒரு சிறந்த உலகை கையளிக்கவும் இந்த ஆபத்தான போதைக் கெதிராக ஒவ்வொரு  மனினும் தன்னால் முடியுமான முயற்சிகளை செய்ய முன்வரவேண்டியது காலத்தின் தேவையாகும்

lundi 27 juillet 2015

உள்நாட்டு யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு கருவியாக தான் பயன்பட்டிருப்பதாக தெரிவிக்கும் கருணா,

எல்.ரீ.ரீ.ஈ யின் உயர்மட்ட தளபதிகளில் ஒருவரும் மற்றும் அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஒரு காலத்திய மெய்ப்பாதுகாவலருமாக இருந்த வினாயகமூர்த்தி முரளீதரன் என்கிற கருணா கடந்த காலத்தில் நடைபெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் சிலவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
எல்.ரீ.ரீ.ஈ யினைக் கைவிட்டு பிரதான அரசியல் நீரோட்டத்தில் தான் நுழைந்ததால் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஒரு கருவியாக தான் பயன்பட்டிருப்பதாக தெரிவிக்கும் கருணா, ஆகஸ்ட் மாதம் வரவிருக்கும் தேர்தலில் பங்குபற்ற தனக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப் படாததையிட்டு மிகுந்த சீற்றம் அடைந்துள்ளார்.
ஒரு காலத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் பெருந் தலையாக இருந்த கருணா, எல்.ரீ.ரீ.ஈ யினால் ஆயுதப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பின்னால் ஒரு மூலோபாயமாக இருந்துள்ளார். வரப்போகும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தன்னை இணைத்துக் கொள்ளாததையிட்டு தனது கோபத்தை தெரிவித்த அவர், சில அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்த சில கொலையாளிகளைக் கூட கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு அனுமதித்திருக்கிறார்கள், ஆனால் கட்சியின் உபதலைவர்களில் ஒருவராக இருக்கும் தன்னை வரப்போகும் தேர்தல்களில் ஒரு வேட்பாளராக இணைத்துக் கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2004ல் எல்.ரீ.ரீ.ஈ யில் நம்பமுடியாத பிளவு ஏற்பட்ட உடனேயே, கருணா மற்றும் அவரது சக எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரான பிள்ளையான் ஆகியோர் பிரதானமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேறு சில நூற்றுக்கணக்கான அங்கத்தவர்களுடன் சேர்ந்து அந்த அமைப்பை விட்டு வெளியேறி இருந்தார்கள், முறையற்ற உட்பூசல் காரணமாக ஏற்பட்ட அந்த சூழ்நிலை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களிடையே பயங்கரமான மோதல் உருவாவதற்கு வழி வகுத்தது.
அரசியல் படுகொலைகள்  கடந்த காலத்தில் நடைபெறும் ஒரு வழமையாக இருந்தபடியால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரும் மற்றும் ஐதேக வை சேர்ந்த ரி. மகேஸ்வரனும் 2005 மற்றும் 2008க்கு இடையில் படுகொலை செய்யப் பட்டார்கள்.
காலஞ்சென்ற சட்டமா அதிபர் கமலசபேசனின் மருமகனான காண்டீபனின் தந்தையான பாலேந்திரன் கொழும்பில் கப்பம் கோரி நடத்தப்பட்ட சர்ச்சையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக்கொல்லப் பட்டது உட்பட பல தமிழ் வர்த்தகர்களும் கொல்லப் பட்டார்கள்.
கணிசமான அளவு தமிழ் வர்த்தகர்கள்; கொழும்பு மற்றும் வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பகுதிகளில் வைத்து வெள்ளை வான்களில் வந்த மர்மமான நபர்களால் கடத்தப் பட்டார்கள், அவர்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ உடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
எல்.ரீ.ரீ.ஈ யினால் நடத்தப்பட்ட போரை தாங்கள் ஒரு முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாக ராஜபக்ஸ ஆட்சி பெருமை பேசினாலும், யுத்தத்துக்கு பின்னான காலநிலை வெள்ளை வான் கடத்தல்கள், கப்பம் கோருதல் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் போன்ற வடிவத்தில் பெரும் எண்ணிக்கையிலான மனித உரிமை மீறல்களுக்கு வழி வகுத்திருந்தது.
எனவே முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ தளபதியான கருணா, சிலோன் ரூடேக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சில வேட்பாளர்களின் பின்னணி விபரங்களை வெளிப்படுத்தி, அவர்கள் கொலைகாரர்கள் மற்றும் குண்டர்கள் எனக் குறிப்பிட்டுள்ளதுடன் கடந்த காலத்தில் நடைபெற்ற அநேக அட்டூழியங்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு என்றும் சொல்லியுள்ளார்.
கருணா தான் யாரை கொலைகாரர்கள் மற்றும் குண்டர்கள் எனக் குறிப்பிடுகிறேன் என்று அவர்களின் பெயர்களைக் குறிப்பிடா விட்டாலும் கூட, அவரது வெளிப்படுத்தல்கள் உறுதிப் படுத்துவது, நடத்தப்பட்ட அட்டூழியங்கள் பெருமளவுக்கு அவர் எல்.ரீ.ரீ.ஈ யினைக் கைவிட்ட பின்புதான் நடந்துள்ளது மற்றும் அவரது வழிகாட்டிகள், கொலைகாரர்கள் மற்றும் குண்டர்கள் என அழைக்கப் படுபவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்துள்ளது, என்பதையே.
எல்.ரீ.ரீ.ஈ யினை விட்டு விலகி பிரதான அரசியல் நீரோட்டத்தில் இணைந்த உடனேயே ஒரு பிரதி அமைச்சர் பதவியினை பொறுப்பேற்றதன் பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (ரி.என்.ஏ) கொள்கைகளைத் தாக்கியதுடன் பல சந்தர்ப்பங்களில் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களை ரி.என்..ஏ தான் தவறாக வழி நடத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் சிலோன் ரூடே உடனான நேர்காணலில், ரி.என்..ஏ  தமிழர்களால் பெருமளவு ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது மற்றும் தான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடாமல் விலகியிருப்பது ரி.என்..ஏ யின் வாக்கு வங்கியை பாதுகாப்பதற்காகவே என்று சொல்லியிருப்பது, கருணாவின் அரசியல் முதிர்ச்சி அவர் எல்.ரீ.ரீ.ஈ யை கைவிட்டதின் பின்னர் தெளிவாக வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. கருணா மேலும் தெரிவித்தது, கடந்த காலங்களைப் போல அல்லாது தனது முடிவுகளில் ரி.என்..ஏ பிடிவாதம் காட்டுவதில்லை மற்றும் தமிழர் பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் குறித்த நிலைப்பாட்டிலும் அது நெகிழ் தன்மையைக் கடைப்பிடிக்கிறது என்று.
கிழக்கு தமிழர்களின் நாடித்துடிப்பு
கிழக்கிலுள்ள தமிழர்களின் நாடித்துடிப்பை படித்ததின் பின் கருணா மேலும் சொன்னது, ராஜபக்ஸவுக்கு வேட்பாளர் நியமனம் வழங்கியதின் மூலம் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு கிழக்கு மாகாணத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு மங்கியுள்ளது என்று.
சமீப காலம் வரை கருணா, மகிந்த ராஜபக்ஸ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பனவற்றின் செல்லப் பிள்ளையாகவே இருந்தார். எனினும் அரசியலில் நிரந்தர நண்பர்களோ அல்லது எதிரிகளோ கிடையாது நிரந்தரமான நலன்கள் மட்டுமே உள்ளது, எனும் பழமொழிக்கு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ யின் பலசாலி கருணாவும் நன்கு பொருந்துகிறார்.
கருணாவால் நன்கு குறிப்பிடப் பட்டதைப் போல, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழர்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளான, அதிகாரப் பரவலின் விரிவாக்கம் மற்றும் மனிதாபிமான விடயங்களான அரசியல் கைதிகளை விடுவிப்பது, மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பான விடயங்கள் என்பனவற்றுடன் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்தி விடயங்களில் அதிக கவனத்தை செலுத்தப் போவதாக ஆகஸ்ட் மாத பாராளுமன்ற தேர்தலுக்கான  தேர்தல் விஞ்ஞ}பனத்தில் குறிப்பிட்டுள்ளது.
எனினும் ரி.என்..ஏயின் தேர்தல் விஞ்ஞ}பனத்தில், 2009 ல் நடந்த போரின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்டதாக நம்பப்படும் போர் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணைகள் பற்றி உறுதியாக வலியுறுத்தப் படுவதால், ஸ்ரீலங்காவில் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய ஐநா அறிக்கை இந்த வருடம் செப்ரம்பர் மாதம் வெளியிடப்பட இருப்பதால், அது ரி.என்..ஏயின் விசாரணைக்கான அழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
ஆகவே கொலைகாரர்கள் மற்றும் குண்டர்கள் என தான் குறிப்பிட்டுள்ளவர்களுக்கு வேட்பு மனு வழங்கியதையிட்டு கருணா சீற்றம் கொண்டிருந்தாலும், திட்டமிடப் பட்டுள்ள உள்நாட்டு யுத்தக் குற்ற விசாரணை கூட மேலும் பல பின்னணி தகவல்களை சம்பந்தப் பட்டவரின் வாயிலிருந்தே நேரடியாகவே பெறக்கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.               நன்றி தேனி

dimanche 26 juillet 2015

திமுக கழக தொண்டர்களின் மது விலக்கு முயற்சிக்கு மக்கள் ஆதரவு

விழுப்புரம் தெற்கு மாவட்ட அவைத் தலைவர் திரு.ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருமதி.அங்கயற்கண்ணி அவர்கள் அனைவரையும் வரவேற்று கூட்டப் பொருள் பற்றி விளக்கமாகப் பேசினார். தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் ஆகியோர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி அவர்களும், அவர்களது குடும்பங்களும் சீரழிந்து போவதை அன்றாட செய்திகளிலும், ஊடகங்களிலும் பார்த்து மனம் நொந்து போன தாயுள்ளம் கொண்ட  கழக தொண்டர்கள் "மது விலக்கை அமல்படுத்துவோம்" என்று அறிவித்த. அந்த அறிவிப்பிற்கு மாவட்டக் கழகம் தனது நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறது. நான்கு தொகுதிகளுக்கு வழங்கப்பட்ட இறப்பு மற்றும் இரு முறை பதிவு வாக்காளர் பட்டியலை பூத் வாரியாக அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி கழக செயலாளர்கள் சரி பார்த்து குறைபாடுகள் இருப்பின் அதற்குண்டான படிவத்தை பூர்த்தி செய்து, குறைகளை நிவர்த்தி செய்திட விரைந்து செயல்பட வேண்டும் எனவும், நீதி கேட்கும் பேரணி விளக்க தொடர் பொதுக்கூட்டங்களை அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழகத்தின் சார்பில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது, மற்றும் ஜெயலலிதா அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது பற்றி தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயசூரியன் அவர்கள், மாவட்ட அவைத் தலைவர் திரு.ராமமூர்த்தி அவர்கள், மாவட்ட பொருளாளர் திரு.கென்னடி அவர்கள், மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு.காமராஜ், திரு.ஆசிர்வாதம், திருமதி.அமிர்தவள்ளி கோவிந்தராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.செல்வநாயகம், பொது குழு உறுப்பினர்கள் திரு.எஸ்.என்.டி.முருகன், திரு.ஜெகதீசன், திருமதி.சுபாஷினி அய்யனார் ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.துரைராஜ், திரு.வசந்தவேல், திரு.முருகன், திரு.வைத்தியநாதன், திரு.ராஜ்வேல், திரு.வெங்கடாசலம், திரு.அரவிந்தன், திரு.ஆறுமுகம், திரு,கனகராஜ், திரு,பாண்டுரங்கன், திரு.பெருமாள், திரு.சின்னதம்பி, திரு.கிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர்கள் திரு.பொன்.ராமகிருஷ்ணன், திரு.டேனியல் ராஜ், திரு.செந்தில்குமார், திரு.சத்தியமூர்த்தி, திரு.எம்.எஸ்.குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.வி.பி.தாகப்பிள்ளை, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திரு.அருண் பிரசாத், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் திரு.சத்தியகீர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் திரு.சர்ப்புதீன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் திரு.மாயக்கண்ணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு.மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறப்புக் கயிறு .தூக்கு தண்டனை .சுற்றிலும் பாதுகாப்பு. ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது

மும்பையில் 1993ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் தூக்கு தண்டனை பெற்றுள்ள யாகூப் மேமனை தூக்கிலிடுவதற்கான ஒத்திகை நேற்று செய்யப்பட்டது.
வரும் 30ம் தேதி யாகூப் மேமன், அவனது பிறந்த நாளன்று தூக்கிலிடப்பட உள்ளான்.
இதையடுத்து, மகாராஷ்டிர மாநில சிறைத் துறை ஐ.ஜி. மீரான் நேற்று சிறைக்கு வந்திருந்தார். விதிமுறைப்படி, யாகூப் மேமனின் உடல் எடைக்கு சமமான மூட்டை ஒன்று தூக்கு மேடையில் கட்டப்பட்டு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஒத்திகை பார்க்கப்பட்டது.
யாகூப் மேமனை தூக்கிலிட சிறப்புக் கயிறு ஒன்று புதிதாக வாங்கி தயார் நிலையில் வைக்கப்பட்டது.
நாக்பூர் சிறைச்சாலையை சுற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

samedi 25 juillet 2015

சிறிலங்கா சமூகங்களுக்கு சரியான இடமளிக்காத தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும்;விஜித தேரர்

wataraka-vijithaசிறிலங்காவின் தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும் என்று, நவ சம சமாஜக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர், வண.வட்டரகே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த நவ சம சமாஜக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறிலங்காவின் தேசியக் கொடியின் 75 சதவீதம் சிங்கள சமூகத்தையே பிரதிபலிக்கிறது.
வாளேந்திய சிங்கமும், நான்கு வெள்ளரசு இலைகளும், தேசியக்கொடியின் பெரும்பகுதியில் இடம்பிடித்துள்ளன.
ஏனைய சமூகங்களுக்கு சரியான இடமளிக்காத, இந்த தேசியக்கொடி தீயிட்டு எரிக்கப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகியங்கனை பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினரான  வட்டரகே விஜித தேரர், பொது பல சேனாவுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஜாதிக பல சேனாவின் அமைப்பாளருமாவார்.
பொது பல சேனாவுக்கு  எதிரான தீவிர போராட்டங்களில் ஈடுபட்ட இவர், கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரி வருகை தருவதற்கு முன்னரே துப்பாகியோடு நின்றிருந்த மாணவன்

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாடசாலை பரிசளிப்பு விழாவில், மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில், தோட்டாக்கள் நிரப்பி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அந்த மாணவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்திருக்கும் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே துப்பாகியோடு நின்றிருந்த மாணவனை பிடித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.
2014ம் ஆண்டில் பல பிரிவுகளிலும் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய 25 மாணவர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களால் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதில் ஶ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன மற்றும் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி வைத்திருந்த ஒரு மாணவனை பாதுகாப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் எவ்வாறு இம்மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி கிடைத்திருக்கும்? ஜனாதிபதியை கொல்வதற்கான திட்டமா? என  பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

lundi 20 juillet 2015

பசில் ராஜபக்ச தப்பியோடினார் ஆனால் நாம் தப்பியோடவில்லை;கருனா மேலும் தெரிவிக்கையில்

வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முழுமையான பரப்புரையும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகவே இருந்தது. இப்போது அவர் எப்படி மாறமுடியும்? அவரால் முடியாது.
எனவே, ராஜபக்ச தோல்வியடைவார், அவருக்கு பிரதமர் பதவியை வழங்குவதில்லை என்ற ஜனாதிபதியின் நிலைப்பாடு சரியானதே. அதற்கு அவருக்கு அதிகாரமும் உள்ளது.
வடக்கு, கிழக்கின் நிலைமைகள் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது.
அவர்கள் புலம்பெயர்ந்தோர், இனவாதம், போர் பற்றியே பேசுகின்றனர். தமிழ் மக்களின் மனோ நிலை அத்தகைய தேசியவாதத்துக்கு எதிரானது. 
பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை எதிர்ப்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகாரத்துக்கு வரும்.
புலம்பெயர்ந்தோர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்த்தனர். அவர்களுக்கு ராஜபக்சவின் மீள்திரும்பல் பயத்தை அளித்துள்ளது.
குறிப்பாக முஸ்லிம்கள், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ தான் வாக்களிப்பார்கள்.
மாகாணங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும். இப்போது யாரும் தனிநாடு கேட்கவில்லை, அவர்களின் தனிப்பட்ட உரிமைகளைத் தான் கேட்கின்றனர்.
வடக்கு, கிழக்கில் பெருமளவு தமிழர்கள், காவல்துறையில் இணைந்துள்ளனர். காணி அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மக்கள் மிதவாத அரசியலையே விரும்புகின்றனர். அவர்கள் அடிப்படைவாதத்தையோ இனவாதத்தையோ விரும்பவில்லை.
போருக்குப் பின்னர், பல விடயங்களை மாற்றியிருக்க முடியும். ஆனால் ராஜபக்ச அதனைச் செய்யவில்லை. அவர் பல தவறுகளையும், கெட்ட விடயங்களையும் செய்தார்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தப்பியோடினார். நாமும் கூட மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்தோம். ஆனால் தப்பியோடவில்லை.
இப்போது பசில் ராஜபக்ச திரும்பி வந்திருக்கிறார். தலையீடுகளை செய்கிறார். அவரால் அரசியலில் தொடர்புபட்டால் வெற்றியடைய முடியாது.
சுசில் பிரேமஜெயந்தவும், பசில் ராஜபக்சவும் இரகசியமாக பல தவறுகளையும், கெட்ட செயல்களையும் செய்துள்ளனர்.
பல சாராயத் தொழிலதிபர்களுக்கு வேட்புமனு வழங்கப்பட்டுள்ளது. எனவே எதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வேட்புமனு வழங்கவில்லை?
எந்த தவறுகளையோ, கெட்ட செயல்களையோ செய்யாத பெண் அரசியல்வாதி ஒருவருக்கும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஒரு மத்திய குழுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். எனக்கு இன்னமும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
எனவேதான் கட்சியின் யாப்புக்கு ஏற்ப மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற உத்தரவை பெற வேண்டி ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

dimanche 19 juillet 2015

தமிழர்களின் அரசியலுக்கு அவசியமா தென்னங்கன்று விஜயகலா???


முன்னால் மண்ணெண்ணெய் கடத்தல் மன்னன் மகேஸ்வரனின் பொம்மை அரசியலுக்கு பின் இந்த அம்மணி அதே இடத்திற்கு வந்துள்ளார்.
கடத்தல் கும்பலின் கடவுளான மகேஸ்வரன் தன் வியாபாரத்திற்க்காகவும், வங்கியில் கடன் வாங்குவதற்க்கும் அரசியலை நன்கு பயன் படுத்திக்கொண்டார்.
விடுதலைப்புலிகள் வன்னியில் இருந்த போது கடல் மார்க்கமாக உணவுப்பொருட்களை எடுத்துச்சென்று யாழ்ப்பாணத்தில் விற்று பல கோடிகளை சம்பாதித்தார். அன்று யாழில் இராணுவம் மக்களை கொடிய சோதனைகளுக்கும்,மக்கள் பெரும் வறுமையில் வாடிய போதும் கண்டு கொள்ளாதவர்.
இன்றைய தென்னங்கன்று விஜயகலா கொழும்பில் எந்த கஷ்டமும் அறியாமல் மிகவும் சொகுசு வாழ்க்கையை நடத்தி வந்தார் அன்று.

நட்புறவையும் ஏற்ப்படுத்தி வந்தார்.
அது மடும்மல்லாமல் சிங்கள பெரும் அரசியல் வாதிகளிடமும் நல்ல
அதன் பின் சொந்தமாக ஒரு கப்பலையும், ஒரு விமானத்தையும் வங்கி கடன் பெற்று வாங்கினார் கடத்தல் கடவுள்.யாழ் ,கொழும்பு சேவையை நடாத்தி,கட்டணத்தையும் இரு மடங்காக விற்று இமாலய பணக்கார வரிசையில் முடி சூடா மன்னனாக வலம்வந்தார்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்ப்படுத்தியும் வந்தார். இராணுவத்தினரால் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்கள் இவரது விமானம் மூலம் கொழும்பு நாலாம் மாடிக்கு இரகசியமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
போரில் காயம் அடைந்த இராணுவத்தினரும், விடுமுறையில் செல்லும் படையினரையும் தன் விமானம் மூலம் ஏற்றி இறக்கி வந்தார். இதை நன்கு அறிந்த புலிகளின் புலனாய்வுப்பிரிவு பல முறை எச்சரித்தபோதும் தட்டிக் களித்தேவந்தார்.

இவர் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சமாதனம் வந்து சிங்கள அரசாங்கமும், புலிகளும் போரை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
கடத்தல் மன்னன் மகேஸ்வரன் என்ன செய்வதென்று தெரியாமல்
தடுமாறி, வியாபாரம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த வட்டிக்கு மேல் வட்டி கட்டி வந்தார்.
அதன் பின் பாதை திறந்து மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றி வந்தனர். அப்படி இருந்தும் புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதியை தாண்டிச் செல்லும் பொருட்களுக்கு பெரும் வரி வசூலித்து
வந்தனர். இது யாவரும் அறிந்த விடயம்.
அன்றாட பொருட்களை தரைப்பாதை மூலம் கொண்டுசென்றால் புலிகளுக்கு மிகப்பெரிய வரி கட்டவேண்டி வரும் மென்பதால் கடல் மூலம் பொருட்களை யாழ் கொண்டு சென்றார். இவருடைய இச் செயல் புலிகளுக்கு முளைக் காச்சலை உண்டாக்கியது.
கடத்தல் மன்னனை புலிகள் வன்னிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பொருட்களை தமது கட்டுபாட்டு பகுதியூடாக கொண்டுசென்றால் சிறப்பு சலுகை வழங்குவதாக சொன்னார்கள்.
இல்லையென்றால் தமக்கு சர்வதேச அளவில் தமது சமாதான செயற்பாடுகளுக்கு கெட்டபெயர் வரும் என்று சொன்னார்கள்.
அவர் அதற்க்கு மறுப்பு தெருவிக்க புலிகள் பெரும் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். அன்று இரவு முழுதும் மாட்டுத் தொழுவத்தில் உடைகளை கழட்டிவிட்டு தூங்கவைத்தனர். இதை மறுக்க முடியுமா
இன்று தென்னங்கன்று விஜயகலாவாள்???
அடுத்த நாள் கொழும்பு சென்ற கடத்தல் கடவுள் புலிகள் மீது பெரும் கோபமடைந்து அவர்களுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார்.
அதேசமயத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் முட்டி மோதிக்கொண்டு இருந்த இன்றைய நரிக்கூட்டத்தின் நச்சு தலைவனாக இருந்த ரணில் லுடன் கூட்டு சேர்ந்தார்.
இவருக்கு ஏற்க்கனவே பெரும் கடன் வழங்கிய சிங்கள அதிகாரிகள் சந்திரிகாவுடன் நெருக்கமாக இருந்தனர். அரசியலில் ஈடு பட்டால் தன் வியாபாரத்தின் பாதுகாப்புக்கும் புலிகளின் அச்சுறுத்தலுக்கும் உதவியாக இருக்கும் என்று மனக்கணக்கு போட்டார்.
சந்திரிகாவை இவர் விமர்சனம் செய்ய விடுவார்களா அம்மையாரின் அருவருடிகள். கடனை வட்டியுடன் அவர்கள் கேட்க்க இவரின் கணக்குப்படி அது தவறு என்று சொல்ல வார்த்தைகள் முற்றி பெரும் கோபத்திற்கு ஆளானர்.
ஆத்திரம் அடைந்த சிங்கள கனவான்கள் கடத்தல் கடவுளை சொர்க்கபுரிக்கு அனுப்பி வைத்தனர். தொங்கு பாலத்தில் அரசியல் நடத்திக்கொண்டு இருந்த நரிக்ககூட்டத்தின் நச்சு தலைவனான இன்றைய ரணில் தன் பதவியை பாதுகாக்க பெரும் சதி திட்டத்தை தீட்டினான் அன்று.
சர்வதேச உதவியுடன் புலிகளை இரண்டாக உடைத்து புலிகளின் இராணுவ இயந்திரத்தை இயங்க விடாது தடுப்பதே இவனின் திட்டம்.
புலிகள் கிழக்கு தமிழர்களின் அர்ப்பணிப்பாலும், வடக்குதமிழ் மக்களின் உதவியுடனும் உலகமே அதிரவைக்கும் ஒரு தமிழர் அரசாங்கத்தை நடத்திவந்தனர்.
நரிக்கூட்டத்தின் நச்சு தலைவனான ரணில் புலிகளின் கிழக்கு தளபதியாக இருந்த குருணா என்கிற கருணா என்ற அரக்கன் மூலம் தான் நினைத்தது போல் சாதித்தான். கருணாவால் பிரபாகரனை எதிர் பார்த்த அளவு வீழ்த்த முடியவில்லை என்பது தான் உண்மை.
ஆனால் இன்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும், கிழக்கு தமிழர்கள் மீது ஒருவித சந்தேகத்துடன் பார்ப்பதும்,
ஆத்திரம் வரும் போது சுட்டிக்காட்டுவதும் மிகவும் வேதனையான விடயம், இது ஆரோக்கியமானது இல்லை என்பதே என் கருத்து.
ரணிலின் அக்கிரமத்தால் 2009இல் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். எண்பதாயிரம் பெண்கள் விதவை ஆனார்கள்,பன்னிரெண்டாயிரம் தமிழ் குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டார்கள். இருபதாயிரம் தமிழர்கள் இடுப்புக்கு கீள் இயங்காமல் நடுத்தெருவில் அலைவதை இன்றும் வன்னியில் பார்க்க்கலாம்.
எல்லாத்துக்கும் காரணமான நயவஞ்சகன் ரணிலும், பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்ட சந்திரிகாவுடன் கூட்டு சேர்ந்து சிங்களவர்களின் எடுபிடியான தென்னங்கன்று விஜயகலாவை நம்பபோகிறீர்களா சகோதர, சகோதரிகளே???
இந்த தென்னங்கன்று விஜயகலா இப் பாவங்களை மூடி மூடி வைத்தாலும் முட்டைக்குள் இருந்து முயல் குட்டியா வரப்போகிறது??
நடக்கபோகும் தேர்தலில் புயல் வந்து கேள்வி கேட்டால் பூவரசம் சருகு என்ன பதில் சொல்லும்மென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் நண்பர்களே.
கடந்தகாலத்தில் ஏதோவொரு காரணத்தினால் தேர்தலில் நிற்க்கவில்லையாம் என்னவென்று சொல்லிவிட்டு இந்த தேர்தலை சந்திக்க முடியுமா?? சவால் விடுகிறேன் திருகோணமலையில் ஐ.தே.கட்சிக்கு வேட்ப்பாளர்களே இல்லை அங்கும் தமிழர்கள் தானே வாழ்கிறார்கள் அங்கு போய் தேர்தலை சந்திக்க முடியுமமா??
போரில் நெஞ்சொடிந்த தமிழ் மக்களுக்கு நெல்லுச்சோறு உங்களால் போடா முடியுமமா?? உங்கள் கணவனை கொன்றவர்களை கண்டு பிடிப்பதற்க்கு உங்களுக்கு அரசியல் தேவையா ??
நீங்கள் இன்று கூத்தடிக்கும் தலைவர்களால் கொல்லப்பட்ட எம் மண்ணில் எண்பதாயிரம் பெண்களும் வந்து தேர்தலை சந்திக்கிரார்களா??
நீங்கள் கணவனுக்காக கண்ணீர் விடுவது மாதிரி தெரிய வில்லையே
தமிழர்களை கொன்ற கொடியவர்களிடம் கூட்டு சேர்ந்து என்ன விடுதலையை பெற்று கொடுக்க போகிறீர்கள்??
உங்கள் காமக் கண்ணீரும் அனந்தி அக்காவின் கண்ணீரும் ஒன்றா?? இல்லை இல்லவே இல்லை. நீங்கள் சிங்களவனின் எடுபிடி.
சிலபேர்தான் பிள்ளைகளை பெறுவார்கள். பலபேர் பத்துமாசம் சுமந்து பிரச்சனைகளை பெறுவார்கள். நீங்கள் இதில் எந்த வகையை சேர்ந்தவர் ?? தகப்பன் இல்லாமல் வளரும் உங்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்லி வளர்க்க போகிறீர்கள் ??சிங்களவனுடன் கூத்தடிக்கும் கூத்தாடி நீங்கள் உங்களுக்கு எதற்க்கு பிள்ளைகள் எதற்க்கு அரசியல் நேர்மையாக பதில் சொல்ல முடியுமமா??
என் அன்பின் சகோதர, சகோதரிகளே இந்த தேர்தல் கணவனை இழந்த பெண்களுக்கும் , பிள்ளைகளை இழந்த தாய்களுக்கும், அம்மா,அப்பாவை இழந்த குழந்தைகளுக்குமான விடுதலைக்கான தேர்தல். இந்த கூத்தாடிக்கு இல்லை எனவே அடுத்து வரும் ஐந்து வருடங்களில் தமிழர்களின் தலை விதியை தீர்மானிக்கும் தேர்தல்.
சிந்தித்து இந்த உதவியாவது செய்யுங்கள் பதிக்கப்பட்ட உங்கள் தமிழ் உறவுகளுக்காக. யார் தமிழர்களுக்காக ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்கிறர்களோ அவர்களுக்கு செய்யுங்கள். இந்த விஜயகலா என்ற கூத்தாடியை விரட்டி அடியுங்கள் நண்பர்களே
இல்லையேல் நாளைக்கு உங்களுக்கு தென்னங்கன்று மற்றும் கமுகங்கன்று தான் இவரால் பெற்றுக்க கொடுக்கமுடியும்.
படித்த வாலிபர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுப்பதாக உளறியுள்ளார். சொரிவதற்கு இளைஞர்கள்தான் தேவையா உங்களுக்கு??
இளைஞர்களே நீங்கள் படித்தது உண்மையானால் வன்னி மாணவர்களையும், கிழக்கு தமிழ் ஏழை எளிய மாணவர்களையும் உங்கள் மனதில் வைத்து பாருங்கள்.உங்கள் படிப்பிற்க்கு உங்களுக்கு வெளிநாட்டு பின்னணி அல்லது உங்கள் தாய் தந்தையர் உதவி செய்திருப்பார்கள் அவர்களுக்கு யார்??
உங்கள் படிப்பை நாம் நன்கு மதிக்கிறேன் ஆனால் அதை நீங்கள் எப்படி பயன் படுத்த போகிறீர்கள் என்பதில் தான் அதன் பெறுமதி உள்ளது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
எனவே சிந்தித்து செயற்படுங்கள்
இந்த செய்திகள் நாம் உட்கார்ந்து
யாரையும் கேட்கவுமில்லை, எவரையும் பிடித்து வைத்து உளவியல் ஆராட்சி பண்ணவும் இல்லை எல்லாமே ஊடகச்செய்திகள் தான்.
என் மனதிற்க்கு சரியென்று பட்டதை சொல்லியிருக்கிறேன்.
இதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், அதாவது நம்பாததீர்கள்
உங்கள் அறிவிற்க்கும், அனுபவத்திற்க்கும், உணர்வுக்கும் சரி என்று பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள்
இல்லையேல் அப்படியே தள்ளிவிடுங்கள்.
நன்றி
புதுக்குடியிருப்பில் இருந்து
ஏ.புத்திமான்

இதல்லாம் திருட்டு அரசியளிள் சகஜமப்பா

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்த மைத்திரிபால சிறீசேனாவால், அதே ராஜபக்ச இப்போது பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதியில், அவரை எதிர்த்து முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் பதவியை குறிவைத்து இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக ராஜபச்சே அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் போட்டியிடும் குருநேகலா தொகுதியில் பிரபாகரனின் உறவினரும், முன்னாள் எம்பியுமான சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார். 

தமிழ் ஈழ விடுதலை அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிவாஜி லிங்கம், கட்சியின் சார்பில் போட்டியிடாமல் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறும் போது, ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிடுவதே எனது நோக்கமாகும். எனவே குருநேகலா தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ என்றார். ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிடுவதாக கூறி மகேந்தாவை வெள்ள வைக்க எதிர் கட்சியினரின் வாக்குகளை சிதறடிக்க எத்தனை ஆயிரம் கை மாறியதோ. இதல்லாம் திருட்டு அரசியளிள் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்