dimanche 19 juillet 2015

தமிழர்களின் அரசியலுக்கு அவசியமா தென்னங்கன்று விஜயகலா???


முன்னால் மண்ணெண்ணெய் கடத்தல் மன்னன் மகேஸ்வரனின் பொம்மை அரசியலுக்கு பின் இந்த அம்மணி அதே இடத்திற்கு வந்துள்ளார்.
கடத்தல் கும்பலின் கடவுளான மகேஸ்வரன் தன் வியாபாரத்திற்க்காகவும், வங்கியில் கடன் வாங்குவதற்க்கும் அரசியலை நன்கு பயன் படுத்திக்கொண்டார்.
விடுதலைப்புலிகள் வன்னியில் இருந்த போது கடல் மார்க்கமாக உணவுப்பொருட்களை எடுத்துச்சென்று யாழ்ப்பாணத்தில் விற்று பல கோடிகளை சம்பாதித்தார். அன்று யாழில் இராணுவம் மக்களை கொடிய சோதனைகளுக்கும்,மக்கள் பெரும் வறுமையில் வாடிய போதும் கண்டு கொள்ளாதவர்.
இன்றைய தென்னங்கன்று விஜயகலா கொழும்பில் எந்த கஷ்டமும் அறியாமல் மிகவும் சொகுசு வாழ்க்கையை நடத்தி வந்தார் அன்று.

நட்புறவையும் ஏற்ப்படுத்தி வந்தார்.
அது மடும்மல்லாமல் சிங்கள பெரும் அரசியல் வாதிகளிடமும் நல்ல
அதன் பின் சொந்தமாக ஒரு கப்பலையும், ஒரு விமானத்தையும் வங்கி கடன் பெற்று வாங்கினார் கடத்தல் கடவுள்.யாழ் ,கொழும்பு சேவையை நடாத்தி,கட்டணத்தையும் இரு மடங்காக விற்று இமாலய பணக்கார வரிசையில் முடி சூடா மன்னனாக வலம்வந்தார்.
யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்ப்படுத்தியும் வந்தார். இராணுவத்தினரால் கைது செய்யப்படும் தமிழ் இளைஞர்கள் இவரது விமானம் மூலம் கொழும்பு நாலாம் மாடிக்கு இரகசியமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
போரில் காயம் அடைந்த இராணுவத்தினரும், விடுமுறையில் செல்லும் படையினரையும் தன் விமானம் மூலம் ஏற்றி இறக்கி வந்தார். இதை நன்கு அறிந்த புலிகளின் புலனாய்வுப்பிரிவு பல முறை எச்சரித்தபோதும் தட்டிக் களித்தேவந்தார்.

இவர் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சமாதனம் வந்து சிங்கள அரசாங்கமும், புலிகளும் போரை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
கடத்தல் மன்னன் மகேஸ்வரன் என்ன செய்வதென்று தெரியாமல்
தடுமாறி, வியாபாரம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த வட்டிக்கு மேல் வட்டி கட்டி வந்தார்.
அதன் பின் பாதை திறந்து மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றி வந்தனர். அப்படி இருந்தும் புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதியை தாண்டிச் செல்லும் பொருட்களுக்கு பெரும் வரி வசூலித்து
வந்தனர். இது யாவரும் அறிந்த விடயம்.
அன்றாட பொருட்களை தரைப்பாதை மூலம் கொண்டுசென்றால் புலிகளுக்கு மிகப்பெரிய வரி கட்டவேண்டி வரும் மென்பதால் கடல் மூலம் பொருட்களை யாழ் கொண்டு சென்றார். இவருடைய இச் செயல் புலிகளுக்கு முளைக் காச்சலை உண்டாக்கியது.
கடத்தல் மன்னனை புலிகள் வன்னிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பொருட்களை தமது கட்டுபாட்டு பகுதியூடாக கொண்டுசென்றால் சிறப்பு சலுகை வழங்குவதாக சொன்னார்கள்.
இல்லையென்றால் தமக்கு சர்வதேச அளவில் தமது சமாதான செயற்பாடுகளுக்கு கெட்டபெயர் வரும் என்று சொன்னார்கள்.
அவர் அதற்க்கு மறுப்பு தெருவிக்க புலிகள் பெரும் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். அன்று இரவு முழுதும் மாட்டுத் தொழுவத்தில் உடைகளை கழட்டிவிட்டு தூங்கவைத்தனர். இதை மறுக்க முடியுமா
இன்று தென்னங்கன்று விஜயகலாவாள்???
அடுத்த நாள் கொழும்பு சென்ற கடத்தல் கடவுள் புலிகள் மீது பெரும் கோபமடைந்து அவர்களுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார்.
அதேசமயத்தில் சந்திரிகா அரசாங்கத்துடன் முட்டி மோதிக்கொண்டு இருந்த இன்றைய நரிக்கூட்டத்தின் நச்சு தலைவனாக இருந்த ரணில் லுடன் கூட்டு சேர்ந்தார்.
இவருக்கு ஏற்க்கனவே பெரும் கடன் வழங்கிய சிங்கள அதிகாரிகள் சந்திரிகாவுடன் நெருக்கமாக இருந்தனர். அரசியலில் ஈடு பட்டால் தன் வியாபாரத்தின் பாதுகாப்புக்கும் புலிகளின் அச்சுறுத்தலுக்கும் உதவியாக இருக்கும் என்று மனக்கணக்கு போட்டார்.
சந்திரிகாவை இவர் விமர்சனம் செய்ய விடுவார்களா அம்மையாரின் அருவருடிகள். கடனை வட்டியுடன் அவர்கள் கேட்க்க இவரின் கணக்குப்படி அது தவறு என்று சொல்ல வார்த்தைகள் முற்றி பெரும் கோபத்திற்கு ஆளானர்.
ஆத்திரம் அடைந்த சிங்கள கனவான்கள் கடத்தல் கடவுளை சொர்க்கபுரிக்கு அனுப்பி வைத்தனர். தொங்கு பாலத்தில் அரசியல் நடத்திக்கொண்டு இருந்த நரிக்ககூட்டத்தின் நச்சு தலைவனான இன்றைய ரணில் தன் பதவியை பாதுகாக்க பெரும் சதி திட்டத்தை தீட்டினான் அன்று.
சர்வதேச உதவியுடன் புலிகளை இரண்டாக உடைத்து புலிகளின் இராணுவ இயந்திரத்தை இயங்க விடாது தடுப்பதே இவனின் திட்டம்.
புலிகள் கிழக்கு தமிழர்களின் அர்ப்பணிப்பாலும், வடக்குதமிழ் மக்களின் உதவியுடனும் உலகமே அதிரவைக்கும் ஒரு தமிழர் அரசாங்கத்தை நடத்திவந்தனர்.
நரிக்கூட்டத்தின் நச்சு தலைவனான ரணில் புலிகளின் கிழக்கு தளபதியாக இருந்த குருணா என்கிற கருணா என்ற அரக்கன் மூலம் தான் நினைத்தது போல் சாதித்தான். கருணாவால் பிரபாகரனை எதிர் பார்த்த அளவு வீழ்த்த முடியவில்லை என்பது தான் உண்மை.
ஆனால் இன்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும், கிழக்கு தமிழர்கள் மீது ஒருவித சந்தேகத்துடன் பார்ப்பதும்,
ஆத்திரம் வரும் போது சுட்டிக்காட்டுவதும் மிகவும் வேதனையான விடயம், இது ஆரோக்கியமானது இல்லை என்பதே என் கருத்து.
ரணிலின் அக்கிரமத்தால் 2009இல் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். எண்பதாயிரம் பெண்கள் விதவை ஆனார்கள்,பன்னிரெண்டாயிரம் தமிழ் குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டார்கள். இருபதாயிரம் தமிழர்கள் இடுப்புக்கு கீள் இயங்காமல் நடுத்தெருவில் அலைவதை இன்றும் வன்னியில் பார்க்க்கலாம்.
எல்லாத்துக்கும் காரணமான நயவஞ்சகன் ரணிலும், பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போட்ட சந்திரிகாவுடன் கூட்டு சேர்ந்து சிங்களவர்களின் எடுபிடியான தென்னங்கன்று விஜயகலாவை நம்பபோகிறீர்களா சகோதர, சகோதரிகளே???
இந்த தென்னங்கன்று விஜயகலா இப் பாவங்களை மூடி மூடி வைத்தாலும் முட்டைக்குள் இருந்து முயல் குட்டியா வரப்போகிறது??
நடக்கபோகும் தேர்தலில் புயல் வந்து கேள்வி கேட்டால் பூவரசம் சருகு என்ன பதில் சொல்லும்மென்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் நண்பர்களே.
கடந்தகாலத்தில் ஏதோவொரு காரணத்தினால் தேர்தலில் நிற்க்கவில்லையாம் என்னவென்று சொல்லிவிட்டு இந்த தேர்தலை சந்திக்க முடியுமா?? சவால் விடுகிறேன் திருகோணமலையில் ஐ.தே.கட்சிக்கு வேட்ப்பாளர்களே இல்லை அங்கும் தமிழர்கள் தானே வாழ்கிறார்கள் அங்கு போய் தேர்தலை சந்திக்க முடியுமமா??
போரில் நெஞ்சொடிந்த தமிழ் மக்களுக்கு நெல்லுச்சோறு உங்களால் போடா முடியுமமா?? உங்கள் கணவனை கொன்றவர்களை கண்டு பிடிப்பதற்க்கு உங்களுக்கு அரசியல் தேவையா ??
நீங்கள் இன்று கூத்தடிக்கும் தலைவர்களால் கொல்லப்பட்ட எம் மண்ணில் எண்பதாயிரம் பெண்களும் வந்து தேர்தலை சந்திக்கிரார்களா??
நீங்கள் கணவனுக்காக கண்ணீர் விடுவது மாதிரி தெரிய வில்லையே
தமிழர்களை கொன்ற கொடியவர்களிடம் கூட்டு சேர்ந்து என்ன விடுதலையை பெற்று கொடுக்க போகிறீர்கள்??
உங்கள் காமக் கண்ணீரும் அனந்தி அக்காவின் கண்ணீரும் ஒன்றா?? இல்லை இல்லவே இல்லை. நீங்கள் சிங்களவனின் எடுபிடி.
சிலபேர்தான் பிள்ளைகளை பெறுவார்கள். பலபேர் பத்துமாசம் சுமந்து பிரச்சனைகளை பெறுவார்கள். நீங்கள் இதில் எந்த வகையை சேர்ந்தவர் ?? தகப்பன் இல்லாமல் வளரும் உங்கள் குழந்தைகளுக்கு என்ன சொல்லி வளர்க்க போகிறீர்கள் ??சிங்களவனுடன் கூத்தடிக்கும் கூத்தாடி நீங்கள் உங்களுக்கு எதற்க்கு பிள்ளைகள் எதற்க்கு அரசியல் நேர்மையாக பதில் சொல்ல முடியுமமா??
என் அன்பின் சகோதர, சகோதரிகளே இந்த தேர்தல் கணவனை இழந்த பெண்களுக்கும் , பிள்ளைகளை இழந்த தாய்களுக்கும், அம்மா,அப்பாவை இழந்த குழந்தைகளுக்குமான விடுதலைக்கான தேர்தல். இந்த கூத்தாடிக்கு இல்லை எனவே அடுத்து வரும் ஐந்து வருடங்களில் தமிழர்களின் தலை விதியை தீர்மானிக்கும் தேர்தல்.
சிந்தித்து இந்த உதவியாவது செய்யுங்கள் பதிக்கப்பட்ட உங்கள் தமிழ் உறவுகளுக்காக. யார் தமிழர்களுக்காக ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்கிறர்களோ அவர்களுக்கு செய்யுங்கள். இந்த விஜயகலா என்ற கூத்தாடியை விரட்டி அடியுங்கள் நண்பர்களே
இல்லையேல் நாளைக்கு உங்களுக்கு தென்னங்கன்று மற்றும் கமுகங்கன்று தான் இவரால் பெற்றுக்க கொடுக்கமுடியும்.
படித்த வாலிபர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுப்பதாக உளறியுள்ளார். சொரிவதற்கு இளைஞர்கள்தான் தேவையா உங்களுக்கு??
இளைஞர்களே நீங்கள் படித்தது உண்மையானால் வன்னி மாணவர்களையும், கிழக்கு தமிழ் ஏழை எளிய மாணவர்களையும் உங்கள் மனதில் வைத்து பாருங்கள்.உங்கள் படிப்பிற்க்கு உங்களுக்கு வெளிநாட்டு பின்னணி அல்லது உங்கள் தாய் தந்தையர் உதவி செய்திருப்பார்கள் அவர்களுக்கு யார்??
உங்கள் படிப்பை நாம் நன்கு மதிக்கிறேன் ஆனால் அதை நீங்கள் எப்படி பயன் படுத்த போகிறீர்கள் என்பதில் தான் அதன் பெறுமதி உள்ளது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
எனவே சிந்தித்து செயற்படுங்கள்
இந்த செய்திகள் நாம் உட்கார்ந்து
யாரையும் கேட்கவுமில்லை, எவரையும் பிடித்து வைத்து உளவியல் ஆராட்சி பண்ணவும் இல்லை எல்லாமே ஊடகச்செய்திகள் தான்.
என் மனதிற்க்கு சரியென்று பட்டதை சொல்லியிருக்கிறேன்.
இதை அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், அதாவது நம்பாததீர்கள்
உங்கள் அறிவிற்க்கும், அனுபவத்திற்க்கும், உணர்வுக்கும் சரி என்று பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்ளுங்கள்
இல்லையேல் அப்படியே தள்ளிவிடுங்கள்.
நன்றி
புதுக்குடியிருப்பில் இருந்து
ஏ.புத்திமான்

Aucun commentaire:

Enregistrer un commentaire