jeudi 2 juillet 2015

இரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார் திமுகஸ்டாலின்


தமிழக சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், வெற்று விளம்பரத்திற்காகவும் 1.7.2015 அன்று சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்த ஸ்டாலின், அந்த இரயிலில் பயணம் செய்த பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த செய்தியும், காட்சியும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். இது போன்று அநாகரிகமாக நடந்துகொள்வது சட்டமன்ற உறுப்பினருக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொது இடங்களில் எல்லோருக்கும் சம அளவு உரிமை உள்ளது என்பதையும், யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்பதையும் உணர்ந்து, சட்டமன்ற உறுப்பினரின் கண்ணியத்தை ஸ்டாலின் இனியாவது காப்பாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மெட்ரோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் உரிய அக்கறை செலுத்தாமல், நான்காண்டுகளில் 3 சதவீதப் பணிகளே முடித்த முந்தைய திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியும், அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலினும், தற்போது முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்து பயணிகள் சேவை துவக்கப்பட்டுள்ள இந்த புகழுக்கு, எந்த விதத்திலும் சொந்தம் கொண்டாட முடியாது, அரசியல் ஆதாயமும் தேட முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire