samedi 25 juillet 2015

ஜனாதிபதி மைத்திரி வருகை தருவதற்கு முன்னரே துப்பாகியோடு நின்றிருந்த மாணவன்

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாடசாலை பரிசளிப்பு விழாவில், மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மாணவர் படையணியில் முன்வரிசையில் நின்றிருந்த மாணவர் ஒருவரிடம் இருந்த துப்பாக்கியில், தோட்டாக்கள் நிரப்பி இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அந்த மாணவருக்கு எவ்வாறு துப்பாக்கி கிடைத்திருக்கும் என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எனினும் ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தருவதற்கு முன்னரே துப்பாகியோடு நின்றிருந்த மாணவனை பிடித்துள்ளனர்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதி வரவேற்கப்பட்டார்.
2014ம் ஆண்டில் பல பிரிவுகளிலும் சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய 25 மாணவர்களுக்கு ஜனாதிபதியின் கரங்களால் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதில் ஶ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிங்க சிறிசேன மற்றும் பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் என் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி வைத்திருந்த ஒரு மாணவனை பாதுகாப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் எவ்வாறு இம்மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி கிடைத்திருக்கும்? ஜனாதிபதியை கொல்வதற்கான திட்டமா? என  பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire