dimanche 12 juillet 2015

அதிகாரத்தில் இருந்துகொண்டே ரனில் தேர்தல் வெடி

Ranilஇலங்கை தமிழர்களுக்கு, மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, அதிகார பகிர்வு அளிக்கப்படும்,'' என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வாக்குறுதி அளித்துள்ளார்.
இலங்கையில் கடந்த, 2009ல் நடந்த இறுதிப்போரில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டனர். அதன் பின், தமது பகுதிகளுக்கு அதிகாரபகிர்வு அளிக்கப்பட வேண்டுமென, தமிழர் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை பார்லிமென்டுக்கு வரும் ஆகஸ்ட் 17ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி, யு.என்.பி., எனப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் சிறப்புக் கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசியதாவது:ஒருங்கிணைந்த இலங்கையில், தமிழர்களின் புனர் வாழ்வுக்கென மேற்கொள்ளப்பட்டு வரும், மறு சமரச நடைமுறைகளின் ஒரு பகுதியாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும். உள்நாட்டு போரின்போது, ராணுவ தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட தமிழர் நிலங்கள், தேர்தலுக்கு பின் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கே பேசினார்.
யு.என்.பி., சிறப்புக் கூட்டத்தில், 'சிறந்த நிர்வாகம், ஜனநாயகத்தை பேணுவதற்காக, பரந்த அரசியல் முன்னணியாக, யு.என்.பி., திகழ வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை சுதந்திர கட்சியை சேர்ந்த சிறிசேன மைத்ரிபாலா, அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு பக்க பலமாக யு.என்.பி., செயல்பட்டது. முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷேவை, 'ஊழல் அரசியல்வாதி' என, சிறிசேனா முத்திரை குத்தி வந்தார். மாறாக, தற்போதைய பார்லிமென்ட் தேர்தலில் ராஜபக் ஷே போட்டியிட, இலங்கை அதிபர் சிறிசேன அனுமதி அளித்தது, யு.என்.பி., வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ராஜபக் ஷேவின் ஆதரவாளர்களுக்கும், தேர்தலில் போட்டியிட சிறிசேன, சீட்கள் வழங்கி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள யு.என்.பி.,யும் சிறிசேனவின் சிவில் சமூக ஆதரவாளர்களும், சிறிசேனா மோசம் செய்து விட்டதாக புலம்பி வருகின்றன. சிறிசேனாவின் ஆதரவாளர்கள் பலர், யு.என்.பி.,யில் சேரப்போவதாக தெரிவித்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire