dimanche 19 juillet 2015

இதல்லாம் திருட்டு அரசியளிள் சகஜமப்பா

மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்த மைத்திரிபால சிறீசேனாவால், அதே ராஜபக்ச இப்போது பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதியில், அவரை எதிர்த்து முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் பதவியை குறிவைத்து இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக ராஜபச்சே அறிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் போட்டியிடும் குருநேகலா தொகுதியில் பிரபாகரனின் உறவினரும், முன்னாள் எம்பியுமான சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார். 

தமிழ் ஈழ விடுதலை அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிவாஜி லிங்கம், கட்சியின் சார்பில் போட்டியிடாமல் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறும் போது, ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிடுவதே எனது நோக்கமாகும். எனவே குருநேகலா தொகுதியில் போட்டியிடுகிறேன்’’ என்றார். ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிடுவதாக கூறி மகேந்தாவை வெள்ள வைக்க எதிர் கட்சியினரின் வாக்குகளை சிதறடிக்க எத்தனை ஆயிரம் கை மாறியதோ. இதல்லாம் திருட்டு அரசியளிள் மக்கள்தான் முடிவு எடுக்க வேண்டும் 

Aucun commentaire:

Enregistrer un commentaire