samedi 11 juillet 2015

வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்க மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே போட்டி

Résultat de recherche d'images pour "பிள்ளையான்"திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் துண்டாடப்படுவதை என்னைப்பொறுத்தவரையில் ஒரு தமிழனாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே போட்டியிடும் என தெரிவித்த அவர்,இணைந்து போட்டியிடுவதா,தனித்து போட்டியிடுவதாக என்பது தொடர்பில் எதிர்வரும் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களின் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் கிழக்கு மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் கட்சி.கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் வீதசாரம் மிகவும் குறைவாகவுள்ளது.ஆகக்கூடிய இரண்டு ஆசனங்களை இங்கு பெறமுடியும்.மட்டக்களப்பில்தான் தமிழர்கள் ஆககூடுதலாக நான்கு ஆசனங்களை பெறக்கூடியதாகவுள்ளது.அம்பாறையில் ஒரு ஆசனத்தினை மட்டுமே பெறமுடியும்.

ஆதனால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் துண்டாடப்படுவதை என்னைப்பொறுத்தவரையில் ஒரு தமிழனாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.அங்கு சிறந்த வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தமிழர்களுக்கு சேவையாற்றக்கூடியவர்கள் பாராளுமன்றம் அனுப்பப்படவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் தேசிய வாதிகளின் பேச்சுகளுக்கு பின்னால் இழுபட்டுச்செல்லாமல் மக்களுக்கு ஆக்கபூர்வமான விடயங்களை செய்யக்கூடிய பாராளுமன்றம் செல்லும்போது அங்கு பார்வையாளராக இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றக்கூடிய நிலையில் இருக்கவேண்டும் என்பது கொள்ளையாகவுள்ளது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலமடைந்து அவர்களின் இனம் பலமடைந்துசெல்லும்போது நாங்கள் இன்னும் அதனை பார்த்துக்கொண்டிருக்கும் நிலைமையை இனிவரும் காலங்களில் ஏற்படுத்தக்கூடாது என்பது எமது நோக்கமாகும்.

அதற்கான நகர்வுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்துவருகின்றோம்.எமது கட்சியின் அடிமட்ட போராளிகள் தனித்துவமாக படகுச்சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அதேவேளையில் மகிந்த ராஜபக்ஸவும் ஜனாதிபதி மைத்திரிபால ஒன்றிணைந்துள்ள ஐக்கிய சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதிலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இன்னும் சரியான முடிவுக்கு வரவில்லை.எதிர்வரும் 10ஆம் திகதி இது தொடர்பில் எமது கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire