mercredi 5 août 2015

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளில் சீனர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்

unnamed (1)_0  இலங்கைக்கு  வருகை தந்த சீன  அழகு ராணிகள் (படங்கள்) unnamed 1 0கடந்த ஜூலை மாதம், இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகளில் சீனர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளிலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தரவுகளின்படி,
இதுவரை காலமும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதில் இந்தியாவே முன்னணியில் இருந்தது. ஆனால், தற்போது இந்தியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது சீனா.
இலங்கைக்கு கடந்த ஜூலை மாதம், 175,804 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். இது கடந்த ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 31 வீதம் அதிகமாகும்.
சீனாவில் இருந்து மட்டும், கடந்த ஜூலை மாதம், 25,120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த ஆண்டு அதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 65.5 வீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும், 119,705 சீனர்கள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை, கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை, 24,681 ஆகும். கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 28 வீத அதிகரிப்பாகும்.
அதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களிலும், இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
170,134 இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களிலும் வருகை தந்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire