dimanche 23 août 2015

பெண் கல்விக்காக துப்பாக்கிச் சூட்டை தாங்கிய சிறுமி மலாலா பாடங்களில் மதிப்பெண் தரவரிசையில் ஆறு 'ஏ* கிரேட்' மற்றும் நான்கு 'ஏ கிரேட்'

பாகிஸ்தானை சேர்ந்தவர் பள்ளி மாணவி மலாலா யூசுப்சாய் (வயது 17). கைபர் பக்துங்வா மாகாணத்தில் வசித்துவந்த இவர் தலீபான் தீவிரவாதிகளின் தடையை மீறி, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தார். இதன் காரணமாக கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ந் தேதி பள்ளிக்கூட பஸ்சில் மலாலா பயணம் செய்தபோது தலீபான் தீவிரவாதிகள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் லண்டன் கொண்டு செல்லப்பட்டார். லண்டனில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று குணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தின்மூலம் அவர் உலகமெங்கும் பிரபலம் ஆனார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிற மலாலா, தலீபான்களின் தொடர் மிரட்டல் காரணமாக நாடு திரும்ப முடியாத நிலை உள்ளது.மலாலாவின் குடும்பம் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் வசித்து வருகின்றது. பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா 2014-ம் ஆண்டு நோபல் பரிசை வென்றார்.

உயிர்பிழைத்த மலாலா யூசுப்சாய், லண்டனில் உள்ள பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றுவருகிறார் மலாலா, கணிதம், இயற்பியல், தாவரவியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மதிப்பெண் தரவரிசையில் ஆறு 'ஏ * கிரேட்' மற்றும் நான்கு 'ஏ கிரேட்' ரேங்குகளை பெற்றுள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire