mercredi 31 octobre 2012

தமிழ் மக்களே! :கனடிய இளையராஜா நிகழ்ச்சிநவம்பர் 3ம் தேதி


தமிழர்கள் எதிர்ப்பு மற்றும் புயல் காரணமாக, இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கனடாவில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி தொடர்பாளர் தருமி, 
இணையதளத்தை தொடர்புகொண்டு,  ‘’நிகழ்ச்சி ரத்து ஆகவில்லை.  நிகழ்ச்சியில் பங்கேற்போரில் 60 சதவிகிதம் பேர் கனடா வந்துவிட்டனர்.

  இளையராஜா மட்டும் வரவில்லை.  அவரும் வருவதற்கு தயார் நிலையில் உள்ளார்.  வரும் நவம்பர் 3ம் தேதி நிகழ்ச்சி நடைபெறப்போவது உறுதி.  இதில் எந்த மாற்றமும் இல்லை.  அமெரிக்க சாண்டிபுயலால் கனடாவிற்கு எந்த ஆபத்தும் இல்லை’’ என்று கூறினார்.

அவர் மேலும்,  நிகழ்ச்சி நடப்பதை கனடா மக்கள் வரவேற்கிறார்கள்.  எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சிலர்தான் அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆவேசமாக கூறினார்.இந்த மாவீரர் தினம் இளையராயாவின் தமிழ் முழக்கமாக அமையும் என்பது தின்னம்

நாடு கடந்த அரசு தொடர்பாக செய்தி

கடந்த 3 தினங்களுக்கு முன்னர், ஆங்கில ஊடகமான ஸ்ரீலங்கா காடியன் பத்திரிகை நாடு கடந்த அரசு தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதாவது கே.பி ஊடாக மகிந்தர் முன்னெடுக்கும் புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தையில் நாடு கடந்த அரசின் உறுப்பினர் சிலரும் கலந்துகொள்கின்றனர் என்பது தான் அச்செய்தியாகும். இது எவ்வாறு ஸ்ரீலங்கா காடியன் ஊடகத்துக்கு தெரியும் என்று கேட்டால், கே.பியின் நண்பர்களில் ஒருவர், தனக்கு வந்த மின்னஞ்சல் ஒன்றை காடியன் ஊடகத்துக்கு அனுப்பியதால். இதனை ஆதாரமாக வைத்தே அவர்கள் இச் செய்தியை வெளியிட்டார்கள். அதிர்வு இணையமானது இச் செய்தியை மொழிபெயர்த்து வெளியிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, மேன்மை தங்கிய பிரதமர் திரு ருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இச் செய்தியை, முதலில் வெளியிட்ட ஸ்ரீலங்கா காடியன் ஊடகத்துக்கு தனது கண்டனங்களை வெளியிடாது, இச்செய்தியை தமிழாக்கம் செய்த இணையங்களை தாக்கியுள்ளார். அதாவது அவர் சொல்வது என்னவென்றால் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால், தம்மிடம் கேட்க்காமல் எப்படி போடுவீர்கள் என்பது தான் ! சரி தான் ஒத்துக்கொள்கிறோம் ! ஜனநாயக வழிமுறையில் உங்களிடம் இப்படி நடக்கிறதா என்று கேட்டுத் தான் போடுவது நல்லது. இல்லையேல் உங்கள் கருத்தையும் இணைத்து போடுவது நல்லது...... ஆனால் ...... ஆனால் ....... சுவாமி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்றே தெரியவில்லையே ? அங்கே தானே குழப்பமே ஆரம்பமாகிறது. ஒரு மனிதரை தொலைபேசியில் தொடர்புகொள்லலாம், மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம், இல்லையேல் நவீனகாலமாச்சே ஸ்கைப்பில் தொடர்புகொள்ளலாம், ஆனால் சுவாமி உங்களை எப்படித் தொடர்புகொள்வது ?



தொலைபேசியில் அழைத்தால் கறுப்பு, ஒலிப்பதிவு பண்ணிவிடும் என்று சொல்லுறீங்களே ! சிலருக்கு கறுப்பு என்றால் என்ன என்று தெரியாது இல்ல ? கறுப்பு என்பது ஒரு மின்னஞ்சல் பத்திரிகை. அது எப்ப வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அப்பப்ப வரும் ! அதில் அதிகமாகத் தாக்கப்படும் நபர் யார் என்று கேட்டால் திரு.ருத்திரகுமார் அவர்கள் தான். சரி எழுதுவார்கள் என்று மட்டும் பார்த்தால் பின்னர் தொலைபேசி உரையாடலை ரக்கோட் பண்ணி(ஒலிப்பதிவுசெய்து) வெட்டி ஒட்டி, தமக்கு ஏற்றவாறு பின்னர் வெளியிடுவார்கள். கறுப்பு பேப்பர் வந்தால், கூடவே ஒரு ஒலி நாடாவும் சேர்ந்துவரும்.(ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பதுபோல ஓகே !) இதில் பல முறை திரு.ருத்திரகுமார் அவர்கள், சிலருடன் பேசிய உரையாடல்கள் வெளியாகியது. இது பலருக்குத் தெரியாது. கறுப்பு பேப்பர் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்தா-தான் அது தெரிந்திருக்க வாய்ப்புண்டு !

இப்படியான நிலையில், யாராவது போன் அடித்தால், நான் உங்களோடு பேசமாட்டேன். நீங்கள் அதனை ரக்கோட் பண்ணி கறுப்பிடம் கொடுப்பீர்கள் என்று பிரதமர் ருத்திரா அவர்கள் எமக்கே சொல்லியுள்ளார். அதாவது கறுப்பு பேப்பரில் அவருக்கு அப்படி ஒரு பயம் இருக்கு என்றால் பாருங்களேன். இப்படி மறைந்திருந்து மட்டும் பார்த்தால் போதுமா ? சுவாமி ! 

அப்ப ஏதாவது டவுட் கேட்ப்பது என்றால், நாம் யாரிடம் போய் கேட்ப்பது ? இல்லை ஒரு செய்தி வந்திருக்கிறதே இதில் உண்மை உண்டா ? என்று கேட்க்கக் கூட வழியில்லாத நிலை இருக்கும்போது, திரு.ருத்திரா அவர்கள் தன்னிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்தியைப் போடலாமே என்று ஊடக அறிக்கையில் எவ்வாறு குறிப்பிட முடியும் என்கிறேன் சுவாமி ? 

திரு.ருத்திரகுமார் அவர்கள், ஸ்ரீலங்கா அரசின் சதி என்கிறார். ஆனால் நாடுகடந்த அரசின் முக்கியஸ்தரான திரு.சர்வே அவர்கள் தனது அறிக்கையில், இது ஸ்ரீலங்கா அரசின் சதி என்று ஒருபொழுதும் குறிப்பிடவில்லை. எனவே அவர் இப்படி ஒரு மின்னஞ்சல் இருக்கலாம் என்று மறைமுகமாக ஒத்துக்கொள்கிறார். ஆதலால் திரு.ருத்திரகுமாரன் அவர்கள் நிச்சயம் இதுகுறித்து உள்விசாரணை செய்யவேண்டிய மிகவும் அவசியம் என்பது மக்களின் கருத்தாக அமைந்துள்ளது. 

60 மில்லியன் டொலர் நிதியுதவி சவூதி



வீதி அபிவிருத்திக்காக சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளது. சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவூதி அரேபிய அரசாங்கம இலங்கையில் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டதை மேற்கொள்வதற்காக வழங்கியுள்ளது.

சவூதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான போராசிரியர் இப்றாகிம் அல் அசாபின் இலங்கை விஜயத்தின் ஊடாகவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அரேபிய நிதி அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போதே இந்நிதியுதவி தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பதந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதில் சவூதி அரேபிய நிதி அமைச்சரும் அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தலைவருமான
போராசிரியர் இப்றாகிம் அல் அசாப் மற்றும் சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர் கையொழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பிரதி அமைச்சர் நிர்மல் கொத்தலாவல, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர், திறைசேரி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நியூயோர்க் பயணம் டெசோ தீர்மான அறிக்கையுடன் தி.மு.க


இலங்கைத் தமிழர்களின் நலனை வலியுறுத்தில் த.மு.க. சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று நியூயோர்க் பயணமாகவுள்ளனர்.

மேற்படி தீர்மான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதற்காகவே அவர்கள் இருவரும் இன்று மாலை நியூயோர்க் பயணமாகவுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை தமிழர் நலனை வலியுறுத்தி கடந் ஓகஸ்ட் மாதம் சென்னையில் திமுக சார்பில் டெசோ மாநாடு நடத்தப்பட்டது. இதன்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வாக சில தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையினை, ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க தி.மு.க தீர்மானித்தது. இந்நிலையிலேயே அந்த அறிக்கை இன்று நியூயோர்க் கொண்டுசெல்லப்படவுள்ளது என்று மேற்படி செய்திகள் தெரிவிக்கின்றன.

mardi 30 octobre 2012

அமெரிக்காவில் 6 கோடி பேர் பாதிப்பு

கரீபியன் கடல் பகுதியில் நிலைகொண்டி ருந்த ‘சாண்டி’ சூறாவளி அமெரிக் காவின் புளோரிடா மற்றும் மேரிலாண்ட் மாகாணங்களைத் தாக்கியதில் 6 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 60 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இம்மாகாணங்களில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டிருப்பதுடன், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளித் தாக்கத்தைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற விருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பராக் ஒபாமா மற்றும் மிட்ரோம்னி ஆகியோர் இம் மாநிலங்களில் நடத்தவிருந்த தேர்தல் பிரசாரப் பணிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. சாண்டி சூறாவளித் தாக்கத்தால் அமெ ரிக்காவின் 12 மாநிலங்களில் கனமழை பெய்துவருகின்றது. இந்த மாகாணங்களில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் தயார் நிலையில் வைக் கப்பட்டிருப்பதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சூறா வளித் தாக்குதலுக் குள்ளான பகுதிகளில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடும்மழை தொடர்வதால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

16 புலிகளை கடத்திய தாய்லாந்து வேன் டிரைவர் கைது.


தாய்லாந்து நாட்டில் 100 வருடங்களுக்கு முன்பு ஒரு  லட்சம் புலிகள் இருந்தன. சமூக விரோதிகள் வேட்டையால் பெரும்பாலான புலிகள் அழிக்கப்பட்டு தற்போது 3200 புலிகள் மட்டுமே இருக்கின்றன. ஆனாலும் புலி வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
புலிகள் முற்றிலும் அழிந்து விடாமல் தடுக்க இப்போதுதான் அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் லாவோஸ் நாட்டு எல்லையில் உள்ள கான்கான் என்ற இடத்தில் ஒரு வேனில் கடத்திச் சென்ற 16 புலிகளை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த வேனை ஓட்டி சென்றவர் பிடிபட்டார்.
ஆனால் அவர், சிலர் இந்த புலிகளை குறிப்பிட்ட இடத்தில் கொண்டு சேர்க்குமாறு பணம் கொடுத்தாக தெரிவித்தார். எனவே கடத்தல்காரர்கள் யார் என்று தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட 16 புலி குட்டிகளும் பிறந்து 2 வாரத்தில் இருந்து 2 மாதங்கள் ஆனவை ஆகும். இவற்றை லாவோஸ் நாட்டுக்கு கடத்தி அங்கிருந்து வேறு நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஜேர்மன் நாட்டில் 28 கிலோ கட்டி ஒன்றை மருத்துவர்கள் வெட்டி எடுத்துள்ளார்கள் !


ஜேர்மன் நாட்டில் உள்ள மருத்துவர்கள் பெரும் சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டு சுமார் 28 கிலே கிராம் எட்டையுள்ள கட்டியை நீக்கியுள்ளனர். இதுவரை காலமும் இவ்வளவு எடைகொண்ட கட்டி ஒன்று உடலில் இருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இதைவிட வேதனையான விடையம் என்னவென்றால், இந்தக் கட்டி தனது வயிற்றில் இருக்கிறது என்று தெரியாமலே ஒரு யுவதி வாழ்ந்துள்ளார். 60 வயதான இந்த யுவதி பலவருடங்களாக வாழ்ந்துள்ளார். சமீபத்திலேயே இக் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்தே மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் இதனை அகற்றியுள்ளனர்.

இந்தக் கட்டி வயிற்றில் இருப்பதை அறியாத மருத்துவர்கள், குறிப்பிட்ட யுவதி அபரிவிதமாக எடைபோடுவதாக நினைத்து, உடல் எடை குறைவதற்காக மாத்திரைகளைக் கொடுத்துள்ளார்கள். அத்தோடு நின்றுவிடாமல் அவர் உடல் எடையைக் குறைக்க, உணவுப் பழக்கவழக்கத்தையும் மாற்றுமாறு கூறியுள்ளனர். என்னத்தை தான் செய்தபோதிலும் அவர் எடை குறையவில்லையாம். இறுதியில் தான் மேட்டர் என்ன என்று கண்டுபிடித்துள்ளார்கள் மருத்துவர்கள்.

சுமார் 5 மணித்தியாலங்கள் நடந்த இந்த சத்திரசிகிச்சையில் இந்தக் கட்டியை மருத்துவர்கள் அவர் வயிற்றில் இருந்து எடுத்தபின்னர், இந்த யுவதி பழைய எடைக்கு திரும்பியுள்ளார். எனவே அபரிவிதமாக எடை அதிகரிப்பவர்கள், எல்லாவிதமான மருத்துவப் பரிசோதனைகளை எடுப்பது நல்லது. நீங்கள் எடை கூடியிருப்பது உடல் ரீதியாக இருக்க சிலவேளைகளில் வாய்ப்பு இல்லை.

தங்கத்துடன் கப்பல் மாயம் ஒன்பது கடற்படை அதிகாரிகளுடன்



ஒன்பது கடற்படை அதிகாரிகளுடன் 700 தொன் தங்கத்தை ஏற்றிக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த கப்பலொன்று காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பசுபிக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த ரஷ்ய கப்பலொன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது. மேற்படி கப்பல், கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையுடன் ஒக்ஹொட்ஸ்க் கடலுக்கு கிழக்கில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹரானிலிருந்து ஒக்ஹொட்ஸ்க் கடலூடாக பெக்லிஸ்டோவ் தீவை நோக்கி இந்த கப்பல் பயணித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி கப்பலில் உள்ள தங்கத்தின் பெறுமதி தொடர்பில் அறிவிக்க பொலிமெடல் சுரங்க நிறுவனம் மறுத்து வருகின்றது. இருப்பினும் வழமையாக பயணிக்கும் வழியிலேயே இம்முறையும் அந்த கப்பல் பயணித்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போன கப்பலைத் தேடுவதற்காக மூன்று கப்பல்கள், ஹெலிகொப்டர் மற்றும் கரையொதுக்கும் கப்பல் போன்றன அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் காணாமல் போன கப்பல் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கடலில் ஏற்பட்டுள்ள கடும் அலை சீற்றத்தால் கப்பலைத் தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடற் பகுதியில் சுமார் 13 அடி உயரத்துக்கு அலைகள் எழுவதாக மீட்புப் பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கப்பலிலுள்ள அதிகாரிகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை உதவி கோரியுள்ள போதிலும் அதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாத நிலையில் இன்றைய தினமே கப்பல் காணாமல் போயுள்ளதாக மொஸ்கோ செய்திகள் தெரிவிக்கின்றன.  

பாலூட்டுகிறது: கே.பிக்கு அரசு


'விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் சர்வதேச ஆயுத கடத்தல்களுடன் தொடர்புடையவர். பயங்கரவாத தலைவரான அவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ள போதிலும் கே.பிக்கு எதிராக அரசாங்கம் எவ்விதமான சட்ட நடவடிக்கைகளையும் எடுக்காது அவருக்கு புட்டிப் பாலூட்டிக்கொண்டிருக்கிறது' என்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அக்கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

'கே.பிக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்தது. அவரை இராணுவ புலனாய்வு பிரிவினர் கைது செய்தபோதும் உத்தரவாதமளித்ததுபோல அவருக்கு எதிராக அரசாங்கம் எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வில்லை.

கே.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்று படையினரும் மக்களும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அதேபோல அவர் இந்தியாவுக்கு கையளிக்கப்படவேண்டியவர். அவ்வாரானதொரு  பயங்கரவாத தலைவருக்கு அரசாங்கம் புட்டிப்பால் ஊட்டிக்கொண்டு இருக்கிறது. அவர் கிளிநொச்சியில் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடாத்திக்கொண்டிருக்கிறார். இவரது விடயத்தில் அரசாங்கம் சட்டத்தையும் மீறி இருக்கிறது.

13 ஆவது திருத்த விவகாரத்தில் அரசாங்கம் நாடகமாடிகொண்டிருக்கிறது. சில அரசியல் பிரிவுகளே இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு பின் நின்று அழுத்தம் கொடுத்துகொண்டிருக்கின்றன. அதன்மூலம் அரசாங்கம் சந்தோசத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் வாழ்க்கை செலவு ஏவுகனை போல் வானலவு உயர்ந்து செல்கின்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதியில் இறங்கி போராடுவோம்' என்றார்.

lundi 29 octobre 2012

22 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு: புதிய அமைச்சரவையில் ராகுல் இடம் பெறவில்லை


பரபரப்பான அரசியல் திருப்பங்களுடன் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. 7 பேர் கேபினட் அந்தஸ்துடனும்,22 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். மிகவும் எதிர்பார்த்த ராகுல் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. நடிகர் சிரஞ்சீவி தனிப்பொறுப்புடன் அ‌மைச்சரானார்.

வரப்போகும் 2014-ம் ஆண்டு பார்லிமென்ட் லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் இன்று பெருமளவு மத்திய மந்திரிசபை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் பெரிய அளவில் மத்திய மந்திரிசபை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யக் கூடாது என, நினைக்கிறேன். இது கடைசி மாற்றமாக இருக்க வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்து பேசினார். அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டதால், அவர் வகித்த நிதி அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். அதே நேரத்தில் மத்திய அமைச்சராக இருந்த வீரபத்ரசிங் ஊழல் புகாரில் சிக்கி ராஜினாமா செய்தார்.
இதையடுத்து மத்தியில் காங். கூட்டணிக்கு ஆதரவு அளித்த வந்த திரிணாமுல் காங். வெளியேறிதால் அக்கட்சியின் 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் சிறிய அளவில் மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு, நிதிஅமைச்சராக சிதம்பரமும், உள்துறை அமைச்சராக சுஷில்குமார் ஷிண்டே, மின்துறை அமைச்சராக வீரப்ப மொய்லியும் , மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்த சூழ்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 22 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். அதற்கு முன்னதாக மூத்த அமைசசர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, அம்பிகாசோனி உள்ளிட்ட 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
புதிய அமைச்சரவையில் பதவியேற்றவர்கள் விவரம் வருமாறு:
கேபினட் அமைச்சர்கள்:
1) ரஹ்மான்கான் (சிறுபான்மையினர் விவகாரம் )
2) தின்ஷாபட்டேல் (சுரங்கத்துறை )
3) அஜெய்மக்கான், (வீட்டுவசதி, ஊரக வறுமை ஒழிப்பு )
4) பல்லம் ராஜூ, ( மனித வள மேம்பாட்டுத்துறை )
5) அஸ்வினிகுமார் (சட்டம், நீதி )
6) ஹரீஷ்ராவத் (நீர்வளத்துறை )
7) சந்திரேஷ்குமாரி கடோஜ் (கலாச்சாரத்துறை )
தனிப்பொறுப்பு
1) மணீஷ்திவாரி (தகவல் ஒளிபரப்புத்துறை )
2) சிரஞ்சீவி (சுற்றுலாத்துற )
இணை அமைச்சர்கள்:
1) சசி தரூர் (மனித வள மேம்பாட்டுத்துறை ).
2) கோடி குனில் சுரேஷ (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
3) தாரிக் அன்வர் (வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை )
4) ஜெயசூரிய பிரகாஷ் ரெட்டி (ரயில்வே )
5) ராணி நாரா (பழங்குடியினர் நலம் )
6) அதிர் ரஞ்சன் செளத்ரி (ரயில்வே )
7) அபு- கசிம்கான் ‌சவுத்ரி (சுகாதாரம், குடும்ப நலத்துறை )
8) சர்வே சத்யநாராயணா (நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து)
9) நினாங் எரிங், (சிறுபான்மையினர் நலம் )
10) தீபாதாஸ் முன்ஷி (ஊரக மேம்பாட்டுத்துறை)
11) போரிகா பல்ராம் நாயக் (சமூக நீதி
12) கிருபாராணி கில்லி (தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை )
13) லால்சந்த் கட்டாரியா(ராணுவம் ).
ராகுல் ஏன் இடம் பெறவில்லை: பிரதமர்
கட்சியை பலப்படுத்த விரும்புவதால் அவர் மத்திய ‌அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாக பிரதமர் கூறினார். பிரதமர் கூறியதாவது: பார்லிமென்ட்டிற்கு முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பில்லை. ராகுலிடம் மத்திய அமைச்சர் பொறுப்பு ஏற்குமாறு நான் தொடர்ந்து வலியுறத்தி வந்தேன் அவர் கட்சிப்பணியை ஏற்க இருப்பதால் அவர் மறுத்துவிட்டார். 2014-ம் ஆண்டு பார்லிமென்ட் லோக்சபா தேர்தலுக்கு முன்னர் இது தான் கடைசி அமைச்சரவை மாற்றம் . இவ்வாறு பிரதமர் கூறினார். இதே போன்று தான் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலையில் மத்திய அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டது. அப்போது இதுவ‌ே கடைசி அமைச்சரவை மாற்றம் என பிரதமர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலாகா மாற்றியமைக்கப்பட்ட அமைச்சர்கள்
சல்மான்குர்ஷித் -வெளியுறவுத்துறை.வீரப்ப ‌மொய்லி- பெட்ரோலியம், இயற்கை எரிவாயு.பவன்குமார்பன்சல்: ரயில்வே.‌ஜெய்பால் ரெட்டி- அறிவியல், தொழில் நுட்பம்.ஆர்.பி.என்.சிங்- .உள்துறை (இணை அமைச்சர் )இ.அகமது – வெளியுறவு (இணை அமைச்சர் )புரந்தேஷ்வரி -வர்த்தகம் ஜிதின்பிரசாத்- ராணுவம் மற்றும் மனிதவள மேம்பாடு . கே.சி. வேனுகோபால் – உள்நாட்டு விமான போக்குவரத்து (இணை அமைச்சர் )ராஜிவ் சுக்லா ( பார்லிமென்ட் விவகாரத்துறை )ஜோதிராத்தியா சிந்தியா – மின்சாரம்.கே.எச். முனியப்பா – சிறு மற்றும் நடுத்தர தொழில்கள். பி.எம். சோலன்கி -கம்பெனிகள் விவகாரம்.ஜிதிதேந்திரா சிங் – இளைஞர் விவகாரம்- விளையாட்டு.
மேலும் அரசியல் செய்திகள்:
மேலும் இரு எம்.எல்.ஏ.,க்கள் ஜெ.,யுடன் சந்திப்பு: மதுரையில் விஜயகாந்த் “அப்செட்’
5 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா: ராகுலுக்கு பெரிய பொறுப்பு காத்திருக்கு
இந்திய விமானப்படைக்கு இத்தாலி ஹெலிகாப்டர் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல்?
நீங்க அமைச்சராக இருந்தது போதும் ., கட்சிப்பணி கவனிக்க போங்க., ; காங்.,
மாற்றியமைக்கப்பட்ட அமைச்சர்கள் இலாகா விவரம்
இது தான் கடைசி அமைச்சரவை மாற்றம் : 2-வது முறையாக சொன்ன பிரதமர்
2014- ஆண்டிலும் ஐ.மு., கூட்டணி ஆட்சி:சிரஞ்சீவி
ஜெகத்ரட்சகன் இலாகா மாற்றம்
அமைச்சர்கள் இலாகா அறிவிப்பு வதேரா:கருத்து கூற சோனியா மறுப்பு
இதுவே இறுதி மாற்றம்: பிரதமர் மன்மோகன்சிங்
புதிய மத்திய அமைச்சர்கள் விபரம்
கேபினட் அமைச்சர்கள் பதவியேற்பு
அமைச்சரவை மாற்றம் ‘வேஸ்ட்:கெஜ்ரிவால்
அமீர்கானுடன் இணைய ஹசாரே திட்டம்
நாளை தமிழக சட்டசபை கூட்டம்
இன்று மத்திய அமைச்சரவை மாற்றம்
2 மாஜி எம்எல்ஏக்கள் கைது
புதிய மத்திய அமைச்சர்கள் இன்று காலையில் பதவியேற்பு

இலவச கருக்கலைப்பு:திருமணம் ஆகாமல் பெண்கள் கர்ப்பம் ஆனால் இலவச கருக்கலைப்பு: பிரான்சில் புதிய சட்டம்


பிரான்ஸ் நாட்டில் திருமணம் ஆகாமலே பெண்கள் கர்ப்பம் ஆவது அதிகமாக உள்ளது. அதிலும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் அதிக அளவில் கர்ப்பம் அடைகிறார்கள். இவர்கள் கருக்கலைப்பு செய்வதற்கு பிரான்ஸ் நாட்டில் அதிக அளவில் செலவாகிறது.

எனவே கடும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இது மட்டும் அல்லாமல் வேறு வகையான பிரச்சினைகளும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

எனவே 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் இலவசமாக கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 
பிரான்ஸ் நாட்டில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இந்த இலவச கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.

மேலும் 18 வயதிற்கு மேல் உள்ளவர் கருக்கலைப்பு செய்தால் 80 சதவீத பணத்தை அரசே திருப்பி தரும் வகையில் புதிய சட்டமும் கொண்டு வரப்பட உள்ளது.

இவ்வருடம் மேலும் 10,000 பசுக்கள் இறக்குமதி!


பால்மாவுக்குப்பதிலாக புதிய பால்நுகர்வை ஊக்குவிப்பதற்காக இவ்வருடம் மேலும் 10,000 பசுக்கள் இறக்குமதி செய்யப்படும். இதன்மூலம் பசுக்களின் எண்ணிக்கையை 10,000 இலிருந்து 20,000ஆக அதிகரிப்பதற்கு தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை தீர்மானித்துள்ளது.

ஏற்கெனவே அவுஸ்திரேலியாவிலிருந்து 500 பசுக்கள் இறக்குமதி செய்யப் பட்டுள்ளதாகவும் மேலும் 1500 பசுக்கள் இரு மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் எனவும் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

பால்மா இறக்குமதிக்காக இலங்கை வருடாந்தம் 4000 மில்லியன் டொலர்களை செலவிடுவதாகவும் பசுக்களை இறக்குமதி செய்வது நீண்டகால அடிப்படையில் செலவு குறைவானது என தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் இவ்வருடம் இறக்குமதி செய்யப்பட்ட பசுக்களின் மொத்தப் பெறுமதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் அவை பல மில்லியன் பெறுமதியானவையாக இருக்கும் எனவும் அவர் தெரவித்தார். மலையகத்தில் பசுக்களின் பராமரிப்பு உணவு என்பனவற்றுக்காக மில்லியன் கணக்கன ரூபா செலவிடப்படவுள்ளது.

கர்ப்பம் தரித்த பசுக்களும் இறக்குமதி செய்யப்படும் எனவும் இதன்மூலம் பசுக்களின் எண்ணிக்கை மற்றும் பால் உற்பத்தி அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


புலிகள் தொடர்பிலான வழக்கில் வாதாடுவதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்திருக்கிறது.


இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிரதிநிதிக்கு, அந்த அமைப்பின் தடையை நீக்குவது தொடர்பிலான வழக்கில் வாதாடுவதற்கு நீதிபதியின் அனுமதி கிடைத்திருக்கிறது.
விடுதலைப் புலிகள் மீதான தடையினை இந்திய மத்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து பிறப்பித்த ஆணை சரியானது தானா என்பதை ஆராய்ந்துவரும் நீதிபதி வி.கே.ஜெயின் தலைமையிலான தீர்ப்பாயம், சுவிட்சர்லாந்தில் தற்போது வசித்துவரும் விஜயரட்னம் சிவநேசன் விடுதலைப்புலிகள் சார்பாக நீடிப்பினை எதிர்த்து மனு சமர்ப்பிக்கலாம் என்று இன்று உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், 1992 முதல் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீதிபதி ஒருவர் தலைமையிலான தீர்ப்பாயம் தடை அவசியமா என்பது குறித்து விசாரித்து, விசாரணையின் அடிப்படையில் மத்திய அரசு ஆணை செல்லுமா இல்லையா என தீர்ப்பு கூறும்.
தடை செல்லும் என்றே இதுவரை தீர்ப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படியே கடந்த மே மாதத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
அதுகுறித்து டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயின் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலில் அத்தீர்ப்பாயத்தின் அமர்வு நடைபெற்றது. அப்போது சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விஜயரட்ணம் சிவநேசன் என்பவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பிராந்திய ஒருங்கிணைப்பாளர் என்று மனு சமர்ப்பித்துள்ளார்.
ஐரோப்பாவில் இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தான் பாடுபடுவதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கைத் தமிழர் உரிமைக்காக பாடுபட்டது, தற்போது இந்தியாவில் அதன் செயல்பாடு எதுவுமில்லை. அந்நிலையில் இந்தியாவில் அதன் மீதான தடை நீக்கப்படவேண்டும் எனக் கோரி அவர் எழுதியிருந்த மனுவினை அவர் சார்பில் சென்னை வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்தார்.
அவர் சார்பாக தீர்ப்பாயத்தின் முன் தன்னை வாதாடுமாறு கோரி சிவநேசன் எழுதியிருந்த கடிதத்தினையும் ராதாகிருஷ்ணன் நீதிபதியிடம் கையளித்தார்.
சிவநேசன் குறித்து விபரங்கள் உறுதியாகத் தெரியாத நிலையில் சிவநேசனின் மனு ஏற்கப்படக்கூடாது என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால் நீதிபதி வி.கே.ஜெயின் சிவநேசன் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என உத்தரவிட்டார்.
தீர்ப்பாயம் இப்போது தான் தடையினை எதிர்த்து விடுதலைப்புலிகள் சார்பாக வாதிட ஒருவரை அனுமதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரவு கோருகிறார் அமைச்சர் விமல் 13 ஆவது திருத்த சட்டத்தை இரத்துச்

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை ரத்துச் செய்ய ஒத்துழைப்பு வழங்கும்படி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி ஐ.தே. கட்சி உட்பட அனைத்துக்கட்சிகளுக்கும் பதிவுத்தபாலில் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இக்கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பியசிரி விஜேநாயக தெரிவித்துள்ளார். 

இதேவேளை மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளின் ஆசியைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் விமல்வீரவன்ச 28 ஆம் திகதி கண்டிக்கு விஜயம் செய்கின்றார்.

இந்த நாட்டில் பிறந்த அனைவரும் இலங்கையர்களே இதனை எவராலும் மாற்ற முடியாது

news
எமது நாட்டில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் இந்த நாட்டை அனைவரினதும் நாடாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டும் என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அண்மையில் மஹாத்மா காந்தி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
 
அனைத்து நாடுகளும் பெருமிதம் கொள்ளக் கூடிய வகையில் இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள அனைவரது பங்களிப்பும் அவசியமானது.
 
குறிப்பாக பெரும்பான்மை மக்கள் இந்த நாட்டை அனைவரினதும் நாடாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளுக்கு முக்கிய பங்களிப்பினை வழங்க வேண்டும்.
 
அதன்படி நாட்டில் உள்ள அனைத்து சமூக மக்களும் இந்த நாட்டை தாய் நாடு என பெருமிதத்துடன் கூறிக் கொள்ளக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது.
 
இந்த நாட்டில் பிறந்த அனைவரும் இலங்கையர்களே இதனை எவராலும் மாற்ற முடியாது. ஒரே நாட்டில் பல்வேறு இன சமூகங்கள் தங்களது மரபுரிமைகளுடன் வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள முடியாது என்றில்லை அனைவரும் ஒன்று பட்டு அதனை உருவாக்குவோம். 
 
தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது. எனவே கடந்த கால பிரச்சினைகள் தொடர்பிலான தெளிவான புரிந்துணர்வு, நல்லிணக்கத்தை துரித கதியில் ஏற்படுத்த வழிகோலும்.
 
அத்துடன் யுத்த காலத்தில் காணாமல் போன ஒரு இலட்சத்து 40ஆயிரம் பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்

எதிர்பேன்:13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் .சரத் ஏக்கநாயக்க


'நாட்டின் இறைமை, ஒருமைப்பாட்டின் பிரகாரம் அரசியலமைப்புக்கு அமைவாக நான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன். எனினும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் நான் எதிர்ப்பேன்' என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். 

13ஆவது திருத்தத்தின் நகல் உண்மையிலேயே மாகாணசபைகளில் அமுல்படுத்தப்படவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த திருத்தம் மாகாணசபைகளுக்கு கொண்டுவரப்பட்டது.

வட, கிழக்கில் இந்த முறைமை உண்மையாக நடைமுறையில் இல்லை. தற்பொழுது கிழக்கு மாகாணசபை நிறுவப்பட்டுள்ளது. எனினும் அங்கும் 13ஆவது திருத்தம் முறையாக அமுல்படுத்துவதில்லை.

இது அரசாங்கத்தினதோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ கருத்து அல்ல. இது எனது தனிப்பட்ட கருத்தாகும். 13ஆவது திருத்தத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்தால் நான் அதை எதிர்ப்பேன் என்று அவர் மேலும் கூறினார். 

தொண்டு நிறுவன ஊழியர் 17பேரின் கொலை வழக்கு நிறைவுறும்'

 2006ஆம் ஆண்டு திருகோணமலையில் கொலை செய்யப்பட்ட மாணவர்கள் ஐவர் மற்றும் மூதூரில் தொண்டு நிறுவன பணியாளர்கள் 17பேரின் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த விசாரணைகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டுவரப்படும் என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்தன.

சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன இந்த வழக்குகளை மீளவும் ஆரம்பித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் கொடுத்தன.

கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டது.

இது தொடர்பில் சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ கூறுகையில், 'சட்டமா அதிபர் திணைக்களம், மேற்படி வழக்குகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவுக்கு கொண்டுவரும்' என்றார்.

இதேவேளை, இந்த வழக்குகளுக்குப் பொறுப்பான மேலதிக சொலிஷ்டர் ஜெனரல் சுஹத கம்லத் கூறுகையில், 'இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலான ஆதாரங்களை தனித்தனியாக ஆராய்ந்து வருவதாகவும் இந்த சம்பவங்களோடு தொடர்புடையவர்களுக்கு எதிராக மிக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புவதாகவும்' கூறினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் திகதி திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அத்துடன், பிரான்ஸ் நாட்டின் தொண்டு நிறுவனமொன்றைச் சேர்ந்த 17 பணியாளர்கள் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இரு சம்பவங்கள் தொடர்பிலும் ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அந்த சம்பவங்களை ஆராய்ந்த மேற்படி குழு தனது அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

dimanche 28 octobre 2012

இளையராஜாவை துரோகியாக்க முயலும் சட்டாம்பிள்ளைகள்


 – சுப வீரபாண்டியன்
subaveerapandianஇசைஞானி இளையராஜாவைத் தமிழினத் துரோகியாகக் காட்டும் முயற்சியில் இன்று சிலர் ஈடுபட்டுள்ளனர். வரும் நவம்பர் 3ஆம் நாள், கனடாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நவம்பர் 27, மாவீரர் நாள் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. மாவீரர் நாள் நினைவு கூரப்படும் கார்த்திகை மாதத்திலும், தமிழீழ மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட வைகாசி (மே) மாதத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர் எவரும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்று புதிதாய் ஒரு விதியை தமிழ்நாட்டில் இன்று சிலர் அறிவித்துள்ளனர்.
அதனையொட்டிக் கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களில் ஒரு சாரார், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். 1982 நவம்பர் 27 அன்று, வீரச்சாவடைந்த போராளி சங்கரின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அந்நாளை மாவீரர் நாளாக நினைவுகூரும்படி, விடுதலைப்புலிகள் அமைப்பு 1989ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. அப்போதிருந்து ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அந்நாளில் மாவீரர் நாள் நினைவு எழுச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அந்நிகழ்ச்சி நடைபெறும் மாதம் முழுவதும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது என்று, விடுதலைப் புலிகள் அமைப்போ, அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களோ ஒரு நாளும் எந்த அறிவிப்பையும் வெளியிட்டதில்லை. சென்ற ஆண்டு வரையில் அப்படி எந்த ஒரு ‘கொண்டாட்டத் தடையும்’ நடைமுறையில் இல்லை. அப்படியானால், இப்போது இப்படி ஒரு புதிய சட்டத்தை உருவாக்கும் சட்டாம்பிள்ளைகள் யார், எப்போதிருந்து இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்பன போன்ற வினாக்கள் நம்முள் எழுகின்றன. தலைவர் பிரபாகரனே கூறாத விதிகளைப் புதிதாய்க் கூறி, அவரையும் மிஞ்சிய தலைவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்கின்றவர்கள் யார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
மாவீரர் நாள் என்பது அழுவதற்காக அன்று, மீண்டும் மீண்டும் எழுவதற்காக என்பதைப் புலிகளும், ஈழ மக்களும் நன்கறிவார்கள். ‘மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ என்று மொழியின் பெயரிலும், அடுத்ததாக, வழிகாட்டும் தலைவரின் பெயரிலும், அதற்கடுத்து, விழிமூடித் துயில்கின்ற மாவீரர்கள் பெயரிலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, மீண்டும் தங்களின் இன விடுதலைக்காகத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் நாள்தான் மாவீரர் நாள்.
ஆண்டு முழுவதும் போராளிகளையும், பொதுமக்களையும் அந்த ஈழ மண் இழந்திருந்தாலும், இயக்கத்தின் முதல் பலி நடைபெற்ற நாளை ஓர் அடையாளமாக மட்டுமே புலிகள் இயக்கம் அறிவித்தது. மாவீரர்கள் இறந்த நாளில் எல்லாம் கொண்டாட்டங்கள் கூடாது என்றால், ஆண்டின் எந்த ஒரு நாளிலும் நாம் எந்த மகிழ்வையும் வெளிக்காட்ட இயலாது. அங்கே மாவீரர்கள் சாகாத நாளுமில்லை, மாவீரர்கள் இல்லாத வீடுமில்லை. ஆதலால், அடையாளமாகத்தான் சிலவற்றை நாம் செய்ய முடியும். அதுதான் நடைமுறை இயல்பு. அதனைப் புலிகள் அமைப்பும், தலைமையும் தெளிவாக அறிந்திருந்தனர்.
ஆனால், இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமலோ, புறந்தள்ளியோ இரண்டு மாதங்களுக்கு எந்தக் கொண்டாட்டமும் கூடாது என்று சிலர் இன்று கூறுகின்றனர். மாவீரர் நாளுக்கு முந்தைய நாள், தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள். ஒவ்வோர் ஆண்டும், அந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி விட்டுத்தான், மறுநாளை மாவீரர் நாளாக நாம் கொள்கிறோம். ‘ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின்னர், வாராது போல் வந்த’ அந்த மாமணியின் பிறந்தநாளையும் இனிமேல் கொண்டாடக்கூடாது என்று கூறிவிடுவார்களோ என்னவோ தெரியவில்லை.
இரண்டு மாதங்கள் எந்தத் தமிழர் வீட்டிலும், திருமண நிகழ்வுகளோ, மகிழ்வான விழாக்களோ நடைபெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வருவார்களா என்றும் தெரியவில்லை. இவ்வளவு வேண்டாம் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி முடிந்து, பத்து நாள்களுக்குப் பிறகு வரவிருக்கும் தீபாவளியைத் தமிழ்நாட்டுத் தமிழர்களோ, தமிழ் ஈழத் தமிழர்களோ கொண்டாடக்கூடாது என்று இவர்களால் அறிவிக்க முடியுமா? பகுத்தறிவின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், இன உணர்வின் அடிப்படையிலாவது தீபாவளியை இந்தப் புதிய நண்பர்கள் தடுத்து நிறுத்தி விடுவார்களா? இவையெல்லாம் நடைமுறையில் நடைபெறக் கூடியதுதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இதில் இன்னொரு வேடிக்கையான சிக்கலும் உள்ளது. நவம்பர் மாதத்தைக் கார்த்திகை மாதம் என்றும், டிசம்பர் மாதத்தை மார்கழி மாதம் என்றும் கணக்கிடுவது புலிகள் இயக்கத்தின் மரபு. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தளவு, நவம்பர் 15ஆம் தேதி அளவில்தான் கார்த்திகை தொடங்கும். டிசம்பர் 15வரை கார்த்திகைதான். எனவே தமிழ்நாட்டுக்காரரான இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவது, மாவீரர் நாள் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் அன்று, ஐப்பசி மாதத்தில்.
இப்படி எல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, நடைமுறைக்கு ஏற்ற, லட்சியங்களை உயர்த்திப் பிடிக்கின்ற வழிமுறைகளை மேற்கொள்வதே சரியானது என்பதை நாம் உணரவேண்டும்.
1988ஆம் ஆண்டு, ‘ஈழ மக்களைக் கொல்லாதே, இந்திய ராணுவமே திரும்பி வா’ என்ற கோரிக்கையை முன்வைத்து, ‘ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு’ கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தியது. பல்வேறு துறைகளைச் சார்ந்த புகழ்பெற்ற 300 பேர் அவ்வறிக்கையில் கையொப்பமிட்டனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், முரசொலி மாறன், சுரதா, வைரமுத்து, மு.மேத்தா, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஞாநி, பாலுமகேந்திரா, கலைப்புலி தாணு உள்ளிட்ட பலர் அன்று கையொப்பமிட்டனர். அந்த வரிசையில் ஒருவராய், இளையராஜாவும் கையெழுத்திட்டிருந்தார் என்பதைப் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் ஈழ ஆதரவாளர்கள் அறிவார்களா என்று தெரியவில்லை.
எப்போதும் ஈழவிடுதலை போன்ற நியாயமான கோரிக்கைகளை நோக்கி, வெவ்வேறு துறைகளிலும் உள்ள பலரையும் நாம் ஈர்க்க வேண்டும். அதுதான் அக்கோரிக்கைக்கு நாம் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். எல்லோரையும் அடித்துத் துரத்துவதும், துரோகிகளாகக் காட்ட முயல்வதும், நாம் முன்னெடுக்கும் கோரிக்கையின் வலிமையைக் குறைக்கும்.
தாங்கள் மட்டுமே ஈழ ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள முயலும் சிலரின் மலிவான உத்திதான் இது. ஈழ ஆதரவு என்பது எவர் ஒருவருக்கும் ‘மொத்தக் குத்தகைக்கு’ விடப்படவில்லை என்பதைப் புதிய சட்டாம்பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும்.
-தனது வலைப்பூவில் சுப வீ எழுதிய கட்டுரை

கே.பியின் திரைமறைவுக் கும்பல்.... பெயர்கள் அம்பலம்


கே.பியின் திரைமறைவுக் கும்பல்.... பெயர்கள் அம்பலம் [KP's cabal group]
இரகசிய ஈமெயில் ஒன்று அம்பலமானதால், பல விடையங்கள் வெளியாகியுள்ளதாக ஆங்கிலப் ஊடகமான கார்டியன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் சில புலம்பெயர் தமிழர்களை அழைத்து தாம் சமரசம் பேசவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனை மகிந்தவே நடத்துவார் என்றும் அது தம்பட்டம் அடித்தது. இதனை அடுத்து பிரித்தானியா கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகள், தாமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என வெளிப்படையாக அறிவித்தது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் கே.பி சில தமிழர்களுடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகளை மேற்கொண்டுள்ளார். இவர்களில் உள்ள வெள்ளை ஆடு ஒன்று, (கறுப்பாடு இல்லை) இந்த மின்னஞ்சலில் ஒன்றை காப்பி எடுத்து, அப்படியே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அனுப்பிவிட்டார். இதனை சாட்சியாக வைத்தே தற்போது பல செய்திகள் வெளியாகியுள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த அரசில் இருந்து, நிதி அமைச்சர் இளையதம்பி, அவைத் தலைவர் பென் பால்ராஜன், கனடாவில் இருந்து இன்பம், லண்டனில் இருந்து லேபர் பார்டி கவுன்சிலர் கணா, நோர்வேயில் இருந்து சர்வே, இதில் பங்குகொள்வதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் இவர்கள் தான் ஒட்டுமெத்த புலம்பெயர் தமிழர்களின் தலைவர்கள் என்று நினைக்கிறது இலங்கை அரசு ! இல்லை இல்லை இப்படி ஒரு படம் காட்டப்பட்டுள்ளது. இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினால், புலம்பெயர் தமிழர்கள் தமது கோரிக்கையை கைவிட்டுவடுவார்களாம் ! மற்றது மகிந்தர் வெளிநாடு வந்தால் போராட்டம் நடத்தமாட்டார்களாம். இது எல்லாவற்றையும் நாங்க பாத்துகொள்ளுவோம் என்று இவர்கள் ஒரு 70MM படம் ஓட்டியுள்ளார்கள்போல. இதை டாரக்ட் பண்ணுவது கே.பியாம் !

இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக இணைத்து, இலங்கைக்கு அனுப்ப GTV இன் உரிமையாளர் செல்வி நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தார் என்ற செய்தியும் மின்னஞ்சலில் உள்ளதாக, ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக அரசாங்கத்தின் இரகசியப் பிரதிநிதி ஒருவர் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்றுவந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதிர்வு இணையம், GTV உரிமையாளர் செல்வி அவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு இதுகுறித்துக் கேட்டது. திரு.செல்வி அவர்கள் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனக்கும் இப் பேச்சுவார்த்தைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேபோல லேபர் கட்சியின் கவுன்சிலர், தாம் தனது அம்மாவின் உடல் நிலை காரணமாகவே இலை செல்லவிருப்பதாகவும், இதனைப் பயன்படுத்தி சில ஊடகம் செய்தி வெளியிட்டுவிட்டது என்றும் கூறுகிறார்.

ஒரு காலத்தில் புலிகள் ஆதரவாளராக இருந்த நோர்வேயில் வசிக்கும் சர்வே தற்போது இலங்கை அரசின் சார்பாக இயங்குவது யாவரும் அறிந்த விடையம். ஆனால் நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் இதில் ஏன் கலந்துகொள்ளவேண்டும் என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. இதேவேளை பிரதமர் ருத்திரகுமாரனுக்குத் தெரியாமல் தான் இச் சந்திப்பு நடைபெறவிருப்பதாகவும், வெளியான அந்த மின்னஞ்சலில் உள்ளதாக ஸ்ரீலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகளின் பாரிய பின்னடைவை சந்திக்க 2006ம் ஆண்டில் இருந்தே கே.பி தான் காரணம் என அந்த ஊடகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 2006ம் ஆண்டில் இருந்தே, கே.பி இலங்கைப் புலனாய்வுத் துறையின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான கபில ஹந்தவிதாரண வுடன் தொடர்புகளில் இருந்துள்ளார். அவர் வழங்கிய பல தகவல் தான் புலிகள் அழிக்கப்பட ஏதுவாக இருந்தது என்பதனை எந்தத் தமிழர்களும் மறந்துவிடவில்லை.

மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில், போனமுறையை விட மிகவும் கடினமான இலங்கைக்கு எதிரான தீர்மாணம் ஒன்றைக் கொண்டுவர மேற்குலகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் இருந்து தப்ப முடியாது என்பதனை உணர்ந்த இலங்கை தற்போது, புலம்பெயர் நாட்டில் உள்ள பல தமிழ் தலைவர்களையும், அமைப்புகளையும் வளைத்துப்போடும் குள்ளத்தனத்தை கையாண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே கே.பியை சு.ப தமிழ்செலவன் அவர்களின் வீட்டில் அமர்த்தி, தேசிய தலைவர் பாவித்த ஒரு வீடை காரியாலயமாக்கி, புலம்பெயர் தமிழ் மக்களை கே.பி ஊடாக தம் பக்கம் இழுக்க முயற்சிகளை அது மேற்கொண்டு வருகிறது. கே.பி சு.ப தமிழ்ச் செல்வன் அவர்களின் வீட்டில் இருந்தால், தமிழ் மக்கள் என்ன அவரை நம்பி விடுவார்களா ? துரோகி என்றுமே துரோகிதான் !

நடு ரோட்டில் நின்று காதலிக்காக துப்பாக்கி வேட்டுகளை தீர்த்த முன் நாள் புலிகள் உறுப்பினர் !


காதலியுடன் தன்னை சேர்ச்து வைக்க கோரி துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டத்தில் குதித்த இளைஞரொருவர் படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.வறணிப்பகுதியில் வறணி மகா வித்தியாலம் முன்பதாக நேற்றைய தினம் குறித்த நபர் கைகளில் துப்பாக்கியை ஏந்தியவாறு வானத்தை நோக்கி வேட்டுக்களை தீர்த்த வண்ணமிருந்த வேளை படையினரால் பிடிக்கப்பட்டுள்ளார்.பின்னர் அவர் கொடிகாமம் பொலிஸார் வசம் கையளிக்கப்பட்டிருந்தார்.பொதுமகனான குறித்த நபர் வசம் எவ்வாறு துப்பாக்கி வந்து சேர்ந்ததென்பது தொடர்பினில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பினில் மேலும் தெரியவருகையில் குறித்த இளைஞயன் யுவதியொருத்தியை காதலித்து வந்திருந்த நிலையில் யுவதியின் பெற்றோர் அதற்கு மறுத்து வந்திருந்தனர்.அத்துடன் குறித்த யுவதியினை மறைத்து வைத்தவாறு தகவல்களை வழங்கவும் மறுத்து வந்துள்ளனர்.இதனால் சீற்றமுற்ற குறித்த இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி சகிதம் யுவதியினது குடும்பத்தவர்களை அச்சுறுத்த முற்பட்டுள்ளார். அவ்வேளையிலேயே அவர்களை மிரட்ட துப்பாக்கியினால் வேட்டுக்களையும் அவர் தீர்த்துள்ளார்.

எனினும் நடுவீதியில் வைத்து துப்பாக்கியினால் ஆட்களை அவர் மிரட்ட முற்பட்ட வேளை அச்சமடைந்த பொதுமக்கள் படையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.குறித்த நபர் விடுதலைப்புலிகளது முன்னாள் போராளியெனவும் அவர் பதுக்கி வைத்த துப்பாக்கியினாலேயே எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்ததாகவும் பொலிஸ் தரப்பினால் கூறப்படுகின்றது.இதே வேளை அவரது மனநிலை தொடர்பில் வைத்திய நிபுணர்களது அறிக்கையினை பெற பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

இன்றைய இளைஞர்கள் முக்கிய பொறுப்புகளைக் கையேற்க வேண்டிய தருணம் இது.


'இன்றைய இளைஞர்கள் முக்கிய பொறுப்புகளைக் கையேற்க வேண்டிய தருணம் இது.

எமது இளம் தலைமுறையினரான இளைஞர்களுக்கு அமைச்சரவையில் சந்தர்ப்பம் வழங்கவே எனது அமைச்சுப் பதவியினை ராஜினாமா செய்தேன்' என்று பதிவியை ராஜினாமா செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இந்திய அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா, தனது பதவியை நேற்றைய தினம் ராஜினாமா செய்தார்.

அவரைத் தொடர்ந்து தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, சுபோத்காந்த் சகாய் நபி, சமூக நீதித்துறை அமைச்சர் முகுல் வாஷ்னிக் ஆகிய மூவரும் தங்களது அமைச்சுப் பதவிகளை  ராஜினாமா செய்வதாக சோனியா காந்தியிடம் கடிதம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்த எஸ்.எம்.கிருஷ்ணா, இன்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்த பின்னர் தனது ராஜினாமா குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் கூறுகையில்,

'இன்றைய இளைஞர்கள் முக்கிய பொறுப்புகளைக் கையேற்க வேண்டிய தருணம் இது. எமது இளம் தலைமுறையினரான இளைஞர்களுக்கு அமைச்சரவையில் சந்தர்ப்பம் வழங்கவே எனது அமைச்சுப் பதவியினை ராஜினாமா செய்தேன்.

இந்த முடிவை நானாகத்தான் எடுத்தேன். இதில் என் மனைவியின் பங்களிப்பு அதிகம். இப்போது நான் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக முக்கிய பிரச்சினைகளை கையாள நேர்ந்தது.

நான் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது. மாநில அரசியலிலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இளைஞர்கள்தான் மாநில தலைமையை ஏற்பார்கள். கட்சித் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் உறுதுணையாக இருப்பேன்' என்றார். 

samedi 27 octobre 2012

செய்தியாளர் ஒருவரை தே.மு.தி.க தலைவர் விஜயகாந் அனுகும் பண்பாட்டை பார்க்கவும்


மீண்டும் மோதல்கள் ஏற்படும் - சிவநேசதுரை சந்திரகாந்தன் 13வது அரசியல் மக்களுக்கு அன்றி அரசாங்கம் அல்ல



13வது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்படுதென்பது, நாட்டில் மீண்டும் மோதல்கள் ஏற்பட மூல ஆரம்பமாக அமையும் என ஜனாதிபதியின் ஆலோசகரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான உ தெரிவித்துள்ளார். 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்படுவதை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் இந்த அரசியல் அமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்தி, மாகாண சபைகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் 13வது அரசியல் அமைப்புத்திருத்தம் தொடர்பாக கடும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன் மூலம் அந்த மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து செல்வது முக்கியமானது.  இந்த அரசியல் அமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என கூறுபவர்கள் அரசாங்கத்த்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரே அன்றி அரசாங்கம் அல்ல எனவும் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.





சிக்கல் எண்ணெய்க் கொள்வனவில்


சப்புகஸ்கந்த எண்ணெய்  சுத்திகரிப்பு செயற்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும். அதன் பின்னர் செயற்பாட்டை தொடர்வதில் சிக்கல்கள் உள்ளன. காரணம் இனிவரும் காலங்களில் ஈரானிடம்  எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பில் சிக்கல்கள் உள்ளன.  எனவே மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆலோசித்துவருகின்றோம் என்று  அமைச்சரவை  பேச்சாளரும் அமைச்சருமான  கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஊடகத்துறை அமைச்சில் நேற்று  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட   அமைச்சர்  ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
சப்புகஸ்கந்த எண்ணெய்  சுத்திகரிப்பு செயற்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என்று  அதன் செயற்பாட்டு பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  நாளையுடன் ( இன்று) முடிவடையும் என்று கூறப்பட்டுவந்தாலும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஈரானிடம் இருந்து அரசாங்கம் கொள்வனவு செய்த  எரிபொருளையே   சப்புகஸ்கந்தையில் சுத்திகரிப்பு செய்துவந்தது.  இந்நிலையில் தற்போது  ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளமையினால்  அந்நாட்டிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்  மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசாங்கம் ஆலோசித்துவருகின்றது. தற்போதைக்கு ஓமானிலிருந்து எண்ணெய் கொள்வனவு செய்யப்படுகின்றது. மேலும்  ஈரான் மீதான பொருளாதார தடையினால்  எங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில்   தடைவிதிக்க  பங்களிப்பு வழங்கிய அமெரிக்கா போன்ற நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

தொற்று நோய் காரணமாக அமெரிக்காவில் 219 பேர் பலி! 4,725 பேர் பாதிப்பு


அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்களில் நீர்வழி செடிகளினால் ஏற்படும் தொற்று கிருமியினால் ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையில் 219 பேர் இறந்து விட்டார்கள்.  மேலும் 4,725 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். இதுகடந்த 2002-ம் ஆண்டிற்கு பிறகுஏற்பட்ட அதிக பாதிப்பு ஆகும். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த நோய் தாக்குதல் டெக்சாஸ், கலிபோர்னியா, லூசியானா, இல்லியான்ஸ், மிஷிகான் உள்பட 8 மாநிலங்களில் நிலவுகிறது.
அதிகபட்சமாக டெக்சாசில் 1,683 பேருக்கு பாதிப்பு நிகழ்ந்து 77 பேர் உயிர் இழந்தனர். அங்குள்ள டால்ஸ் போர்ட் பகுதியில் மட்டும் 36 பேர் செத்தனர் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் கொசுக்கடி நோயினால் இந்த ஆண்டில் 36 பேர் உயிர் இழந்துள்ளனர்.

17 பொதுமக்கள் மற்றும் 15 காவல்துறையினர் ஆப்கானிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதலில் சாவு


காபூல், அக். 26-ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மயாமனா மசூதியில் இன்று பக்ரீத் பண்டிகையின் முதல் நாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது போலீஸ் உடையில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இதில் 17 பொதுமக்கள் மற்றும் 15 காவல்துறையினர்   கொல்லப்பட்டனர்.

காவல்துறை தலைவர் அப்துல் காலிக் அக்சாய் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. என்றாலும், ஹமீது கர்சாய் தலைமையிலான அரசுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தலிபான்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வடக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டு தற்போது அங்கு அமைதியாக இருந்தது. இந்நிலையில் அங்கு மீண்டும் தலிபான்கள் கைவரிசை காட்டியிருப்பது ராணுவத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இந்திய வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பம் மன்னாரில்

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரசூல் புதுவெளி கிராமத்தில் இந்திய வீட்டுத்திட்டத்திற்கென 47 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர். இந்த நிலையில் குறித்த கிராமத்தில் வீட்டுத்திட்டத்தினை ஆரம்பிக்குமுகமாக இன்று 3 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு வைபவரீதியாக இடம்பெற்றது.

இதன் போது நானாட்டான் பிரதேச செயலாளர் சந்திரையா, நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் அன்புராஜ் லெம்பேட், மன்னார் செஞ்சிலுவைச்சங்கத்தின் உப தலைவர் பி.ஜேறோம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மூன்று வீடுகளுக்கும் வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

கெஹலிய கோரிக்கை அமெரிக்கா, இலங்கைக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்

news
அமெரிக்கா இலங்கைக்கு நட்ட ஈடு வழங்க வேண்டுமென ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
இலங்கை ஈரானில் இருந்து மசகு எண்ணையினை இறக்குமதி செய்து வருகின்றது. 
 
ஆனாலும் தற்போது அமெரிக்கா அரசாங்கம் ஈரான் மீது பிரயோகித்துள்ள பொருளாதாரத் தடையினால் இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நட்பு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 
அத்தடன் ஈரானிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 
 
இதன் காரணமாக இலங்கை பாரியளவு எரிபொருள் பிரச்சினையை எதிர்நோக்கி வருகின்றது. 
 
இதனால் இலங்கைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கருத்திற் கொண்டு அமெரிக்க அரசாங்கம் நட்பு நாடுகள் பாதிக்காத வகையில் தடைகள் விதிக்கப்பட வேண்டும்.
 
அல்லது அதற்கான நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமெரிக்காவிடம் கோரிக்கையினையும் விடுத்துள்ளார். 

கார் முன்நோக்கி நகர்ந்ததில்,இந்தியர் ஒருவர் லண்டனில் பரிதாபமாக மரணமாகியுள்ளார்.

48 வயதான பற்றிக் பாண்டியா என்னும், இந்தியர் ஒருவர் லண்டனில் பரிதாபமாக மரணமாகியுள்ளார். பாண்டியாவின் 7 வயது மகன் காரில் இனிப்பு பண்டத்தை தேட முற்பட்டவேளை இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. லண்டன் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான ஐசில்வேத் பகுதியில் வசித்துவந்த பாண்டியா, தனது காரை ஸ்டாட் செய்துவிட்டு, இறங்கிச் சென்று கேராஜை மூட முற்பட்டுள்ளார். இதேவேளை காரில் இருந்த அவரது 7 வயதுச் சிறுவன், காரில் ஏதாவது இனிப்பு பண்டங்கள் இருக்கிறதா என்று தேடியுள்ளான். அப்போது அவன் அறியாமல் காந் பிரேக்கை அழுத்திவிட்டான். இதன் காரணமாக கார் முன்நோக்கி நகர்ந்துள்ளது.

கான் பிரேக், அமுக்கப்பட்ட நிலையில் கார் முன்நோக்கி நகர்ந்ததில், பாண்டியா கால்கள் தொடை மற்றும், இடுப்பு ஆகிய பகுதிகள் நசுங்கியுள்ளன. கார் முன் நகர்ந்து சுவருடன் சேர்த்து அவரை நசுக்கியுள்ளது. மனைவி ஓடிவந்து, காரை ரிவர்ஸ் கியர் போட்டு, பின் நோக்கி எடுத்துள்ளார். உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியாவின் இடுப்பில் உள்ள முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 25/10/2012மாலை பாண்டியா பரிதாபமாக இறந்துவிட்டார்.

அம்மா அப்பாவை நான் தான் கொன்றுவிட்டேன், ஆனால் வேண்டும் என்று செய்யவில்லை தற்செயலாக நடந்துவிட்டது என்று அச் சிறுவன் திரும்பத் திரும்ப கூறி அழுது வருவதாகப் பொலிசார் கூறியுள்ளனர். இச் சிறுவனை சாந்தப்படுத்தவே முடியவில்லை என்று அவரது குடும்பத்தார்கள் மேலும் தெரிவித்துள்ளனர். விதி எப்படி எல்லாம் விளையாடுகிறது என்று பார்த்தீர்களா ? மரணத்தில் இருந்து தப்பிக்கவா முடியும் ? இருந்தாலும், சில விடையங்களில் நாம் கவனமாக இருந்தால், ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும். 

vendredi 26 octobre 2012

வைகோ பொய்சொல்றார்.பிரபாகரன் உடலை நான் கண்ணால் கண்டேன். தயா மாஸ்ரர்


பிரபாகரன் உயிருடன் இருப்பதாக, மறுமலர்ச்சி திராவிட முன்னனேற்ற கழக தலைவர் வைகோ. போலி பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், தமிழ் நாடு அரசியல் வாதிகள், தங்களது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக, இலங்கை தமிழர்களின் உரிமைகள் பற்றி பேசுவதாகவும், எல்ரிரிஈ முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர், த ஹிந்து பத்திரிகையுடனான செவ்வியின்போது தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், இலங்கை ராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட தயா மாஸ்டர், பிரபாகரன் உயிருடன் இல்லை. அதில் எதுவித சந்தேகமும் இல்லை. அவரது இறந்த உடலை தான் நேரில் கண்டதாகவும், த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். 

புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று தெரிவித்துள்ள தயா மாஸ்டர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதே, தமிழர் பிரச்சினை தீர்வுக்கு ஒரே வழியென, தெரிவித்துள்ளார். 

சமாதானம் மலர்வதற்கு கிடைத்த இரண்டு அருமையான சந்தர்ப்பங்களை பிரபாகரன் தவறவிட்டதாகவும், தயா மாஸ்டர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் திராவிட முன்னேற்றக்கழக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி, அவர்களது குறுகிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே, இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதாகவும், இதுவிடயத்தில் இதய சுத்தியுடனோ அல்லது நேரடியாகவோ கருத்துகளை தெரிவிப்பதில்லையெனவும், தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில், விவசாயம், நிர்மாணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அபிவிருத்திகள் இடம்பெற்று வருவதாகவும், அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

1987-ம் ஆண்டு உருவான இந்திய-இலங்கை அரசியலமைப்பு ஒழிக்கும் திட்டம் இல்லை': இலங்கை அரசு


1987- இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையில் மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது.

1987- இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையில் மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது.
இலங்கையில் மாகாணசபை முறைமையை ஏற்படுத்திய அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை ஒழித்துவிட வேண்டும் என்று ஆளுந்தரப்பில் உள்ளவர்களே கடந்த சில நாட்களாக கூறிவருகின்ற நிலையில், அப்படியான ஒரு எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளார்.
1987-ம் ஆண்டு உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் அரசியலமைப்புக்கு ஒழித்துவிடவேண்டும் என்று ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் பங்காளிகளாக உள்ள சில கடும்போக்கு தேசியவாத கட்சிகள் பிரசாரம் செய்துவருகின்றன.
ஜனாதிபதியின் சகோதரர்களான பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்களும் 13-ம் திருத்தத்தை ஒழிப்பது பற்றிய கருத்துக்களுக்கு அரசு ஆதரவளிப்பதாக இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.
இந்த நிலைமையிலேயே, இதுபற்றி அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்ன என்று இன்று வியாழக்கிழமை நடந்த அமைச்சரவை நிலைப்பாடுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, '13-வது திருத்தம் என்பது அரசியலமைப்பின் ஓர் அங்கம். அதனை பாதுகாப்பதற்கு நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அனைவரும், குறிப்பாக அரசாங்கம் என்ற ரீதியில் நாங்களும் கடமைப்பட்டிருக்கிறோம்' என்று கூறினார்.

'ஜனாதிபதி 13 பிளஸ் என்று கூறியது நாடாளுமன்றத்திற்கு செனட்சபை ஒன்றை உருவாக்குவதைத் தான்': கெஹெலியஜனாதிபதி 13 பிளஸ் என்று கூறியது நாடாளுமன்றத்திற்கு செனட்சபை ஒன்றை உருவாக்குவதைத் தான்': கெஹெலிய

'
அரசியலமைப்பின் 13வது திருத்தத்துக்கும் அப்பால் செல்லும் அதிகார பரவலாக்கல் மூலம் நாட்டின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதானே அரசின் நிலைப்பாடு என்று ஊடகவியலாளர்கள் இங்கு கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், '13 பிளஸ் என்பதன் மூலம் செனட் சபை ஒன்றை, அதாவது நாடாளுமன்றத்தில் மேலவை ஒன்றை ஏற்படுத்தி, சிதறிகிடக்கும் பிராந்தியங்களின் தலைவர்களை மத்திய அதிகார மையத்துடன் ஒன்றிணைக்கும் திட்டத்தைத் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் டில்லியில் நடந்த கூட்டமொன்றில் தெளிவாக விளக்கியிருந்தார்'என்று கூறினார்.
எனினும் நாட்டில் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பது அவசியம் என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியிருப்பதாக அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.
அப்படியான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்மதம் கிடைத்துவிட்டதா என்று பிபிசி சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர், 'கடந்த 6 மாதங்களாக இதுபற்றி பேசப்பட்டுவருகிறது. இந்தியாவுக்கு போகிறார்கள்,. வருகிறார்கள் அங்கு ஆலோசனை பெறுகிறார்கள். சில நேரங்களில் (நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு) வருவதாகக் கூறுகிறார்கள். சில நேரங்களில் இவர்களுடன் பேசி வேலை இல்லை என்றும் கூறுகிறார்கள். எல்லாக் கட்சிகளும் அங்களும் வகிக்கும் நாடாளுமன்றத்தில் பேசாவிட்டால் எங்கு பேசுவது, யாருடன் பேசினாலும் இறுதியில் நாடாளுமன்றத்துக்கு வந்துதானே ஆகவேண்டும்' என்று கூறினார்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்துகின்ற அரசாங்கம், இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசு அடுத்தக் கட்டமாக என்ன நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்று பிபிசி மீண்டும் கேள்வி எழுப்பியது.
'எதிரில் இருக்கின்ற பிரதானமான அரசியல் கட்சி என்ற ரீதியில் டிஎன்ஏக்கு அரசாங்கம் முடியுமான வாய்ப்புகளை வழங்கும். அப்படி இல்லாவிட்டால், இருக்கின்ற நிலைமைகளை கருத்தில்கொண்டு,நாட்டில் பல்வேறு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனைக்கு எப்படி தீர்வுகாண்பது என்று ஆராய்வதற்காக. பொருத்தமானவர்கள் என்று அரசாங்கம் கருதுகின்ற தரப்பினருடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டி ஏற்படும்' என்று இலங்கை அரசின் அமைச்சரவை நிலைப்பாடுகளை அறிவிக்கும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதற்குப் பதிலளித்தார்.

jeudi 25 octobre 2012

எங்கள் மக்களையும், நிலப்பகுதிகளையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும்.17 janv. 2011 நடந்த நிகழ்வு

எங்கள் மக்களையும், நிலப்பகுதிகளையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்தியா நேரடியாகத் தலையிட வேண்டும். ஐ.நா.வை நம்பியிருந்தால் அது ராஜபக்சவுக்குத்தான் சாதகமாக முடியும்.

   இதுதவிர, நாடாளுமன்ற நாற்காலிக்கு அலையும் எந்த நபரும் தமிழ் மக்களுக்கு விடிவைத் தேடித் தரமாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு தமிழ் இனம் ஒன்றுபட்டு தீர்வைக் காண முன்வரவேண்டும். இது சாத்தியமான ஒன்றுதான். ஓன்றுபடுவது மட்டுமல்ல எங்கள் இனத்தை வழிநடத்த புதிய தலைமுறை ஒன்றை நாம் உருவாக்க வேண்டும்.முலுமயாக கேட்கவும்

குடியுரிமை வழங்க நடமாடும் சேவை

தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்பியவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான நடமாடும் சேவை ஒன்று எதிர்வரும் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இந்த நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன் போது உள்நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால், இந்தியாவுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்பியவர்களுள் இலங்கை குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கவே இந்த நடமாடும் சேவை நடத்தப்படுகிறது. 

இதற்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் இதற்கு அனுசரனை வழங்குகிறது.