யாழ்ப்பாணத்தினிலிருந்து கண்டி நோக்கி
பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸிலிருந்து கை துப்பாக்கிகள் மற்றும் வெடி
பொருட்கள் என, கடத்தி செல்லப்பட தயாராக இருந்த நிலையில் ஆயுதங்கள்
மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் வன்னியிலிருந்து
பயணித்துக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள், ஓமந்தை பொலிஸாரால் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த பஸ் மற்றும் அதன் சாரதி
நடத்துனர்களும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என் அதிர்வு இணையம்
அறிகிறது. எனினும் குறித்த பஸ்ஸில் பயணிதது கொண்ருந்த பெருமளவிலான படையினர்
வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் குறித்த பேருந்து பிற்பகல் ஒரு மணியளவில் யாழ்.நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் இடைநடுவில் ஏறிய தலைக்கவசம் அணிந்த நபர் ஒருவர் குறித்த பையினை பயணிகள் ஆசனமொன்றின் கீழ் வைத்துள்ளார். குறித்த பஸ் ஓமந்தை சோதனை சாவடியினில் நிறுத்தப்பட்ட வேளையில் படையினரது சோதனையின் போது குறித்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தது. பஸ்ஸினுள் இருந்த அனைவரும் அவசரமாக ஓமந்தை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டு தடுத்த வைக்கப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டனர். குறித்த பஸ்ஸினில் பயணித்த படையினர் வெளியேற அனுமதிக்கப்பட்ட போதும் பொதுமக்கள் சுமார் எட்டு மணி நேரம் வரையில் மூடப்பட்ட பஸ்ஸினுள் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் குதித்தமையினால் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் கைது செய்யப்பட்ட நாலு வன்னியை சேர்ந்த இளைஞர்களும் மன்னாரில் நடைபெறவிருந்த விளையாட்டுப்போட்டியொன்றிற்காக பயணித்த அப்பாவிகளென, கூடப்பயணித்த பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஆயுதங்களுள் கைத்துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான ரவைகள் மறறும் கிரேனேட் என்பவை இருந்ததாகவும் அவை படையினராலேயே கடத்தப்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது. ஆனால் இதற்கு பலியானது தமிழ் இளைஞர்களே.

Aucun commentaire:
Enregistrer un commentaire