மேற்கண்ட தொகையில் பாலியல் நோய்களுக்கு உள்ளாகின்ற போதிலும் சுமார் 10ஆயிரம் முதல் 15ஆயிரம் பேர் மாத்திரதே இது தொடர்பான சிகிச்சைகளுக்காக வைத்தியர்களை நாடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெட்கம், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுதல், அறியாமை போன்ற காரணங்களாலேயே இந்நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதில்லை என்று டாக்டர் வீரசிங்க கூறினார்.
எச்.ஐ.வி எயிட்ஸ் தொற்றானது தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்றுவதால் கர்ப்பிணிப் பெண்கள் இரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்வது சிறந்ததென்று தெரிவித்த அவர், இலங்கையில் எயிட்ஸ் நோயானது ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் காரணமாகவே அதிகளவில் பரவுகின்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். (சஜீவ விஜேவீர)
Aucun commentaire:
Enregistrer un commentaire