19 ஒக்ரோபர் 2012
பிரான்சு ஸ்த்ரஸ்பௌர்க நகரில் ஐரோப்பிய கவுன்சிலில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜனநாயகதிற்கான மகாநாட்டில் பிரான்சு தமிழீழ மக்கள், ஐரோப்பிய தமிழர் ஒன்றியமும் பங்கு பற்றியது.
இந்த முதல் மகாநாட்டில் ஐக்கியநாடுகள் சபையின் காரியதரிசி திரு Ban Ki Moon திறந்து வைக்க இந்த மகாநாட்டில் ஐரோப்பிய கவுன்சிலின் காரியதரசி Thorbjørn Jagland, பிரான்சு ஐரோப்பிய பாராளுமன்ற மந்திரி திரு Bernard Cazeneuve, ஸ்த்ரஸ்பௌர்க நகர நகரபிதா, கனடிய நாட்டின் முன்னைய பிரதமர் Kim Camphell என்று பன் நாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இந்த மாகநாட்டை திறந்து வைத்த திரு Ban Ki Moon ஜனநாயக கட்டமைப்புகளின் முக்கியதுவத்தையும் சென்ற வருடம் ஆரம்பித்து அராபிய நாடுகளின் மக்களின் ஜனநாயக போராட்டத்தை போற்றி பேசினார், அந்த மேடையில் பேசிய சென்ற வருட அமைதிக்கான நோபெல் பரிசை பெற்ற இயமன் நாட்டை சேர்ந்த செல்வி Tawakkol Karman பேசும் போது, ஜனநாயகம் என்ற பெயரில் அரசுகள் செய்யும் அநீதிகளை சுட்டிக்காட்டி ஐக்கிய நாடுகள் சபையின் பாரமட்ச நடைமுறையும், பல இடங்களில் மக்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதும் இன்று தொடரும் போர்களை தடுத்து நிறுத்த முடியாதவர்களாக இருப்பதை சுட்டி காட்டினார்.
இந்த 5 நாள் மகாநாட்டில் ஜனநாயகத்தை பற்றி பல ஆய்வு கூடங்கள், பல பட்டறைகள், விவாதங்கள் நடைபற்றது. இந்த ஆய்வு கூடங்களில் பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் விஞ்ஞானிகள், மனித நேய அமைப்புகள் கலந்து கொண்டனர்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் பிரதிநிதிகளும், ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் இந்த ஆய்வு கூடங்களில் பங்கு பற்றி தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதும், ஜனநாயகமும் தீவிரவாதம் என்ற ஆய்வுகூடத்தில் ஜனநாயக நாடுகளில் நடைபெறும் தீவிரவாதம் பற்றி கலந்துரையாடலின் போது சிறிலங்கா அரச பயங்கரவாதம், சிங்கள பெளத்த தீவிரவாதம் பற்றி கலந்துரையாடப்பட்டது. இந்த ஆய்வு கூடத்தில் பங்கு பற்றிய உகந்த நாட்டை தலைமை பீடமாக கொண்டு இயங்கும் மனிதவுரிமை அமைப்பை சேர்ந்த திரு ஹசன் ஷிரே ஷெஇக்ஹ அவர்கள் தமிழ் பிரதிநிதிகளின் விவாதத்தின் உண்மையை ஏற்று ஈழத்தமிழர்களுக்கு சிறி லங்காவில் நடைபெறும் இனப்படுகொலையை ஆதாரப்பூர்வமாக விபரித்தார்.
சுய நிர்ணயவுரிமை பற்றிய ஆய்வுகூட்டதில் சுயநிர்ணயவுரிமை மறுக்கப்பட்ட மக்களின் இன்றைய நிலை பற்றி விவாதிக்கப்பட்டது. அங்கு பேசிய பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பிரதிநிதி இன்று சர்வதேசத்தின் பாரம்பட்ச செயல்பாடுகளும் அதனால் பாதிக்கப்படும் மக்களும் என்ற தலைப்பில் பேசும் போது, இன்றைய உலக சூழலில் பல நாடுகளில் பல்லின மக்களின் சுயநிர்ணய வுரிமை மறுக்கப்படுவதும் அதே நேரத்தில் சர்வதேசம் குறிப்பாக ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் சுயலநல நடைமுறைகள் இன்று உலகத்தை பல போருக்கு இட்டு சென்று இருக்கிறது என்றும், அவர்களின் தம் நலம் காக்கும் செயல்பாடுகளால் பல நாடுகளில் மக்கள் தமது சுயநிர்ணயவுரிமைகள் இழந்து நிற்பதும், மக்களின் ஜனநாயக போராட்டங்கள் பயங்கரவாதம் என்று வருணிக்க படுவதும், லிபியா போன்ற நாடுகளில் சர்வதேசத்தின் தலையீடும், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரபத்திரம் மதிக்கப்படாமை, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சாசனம் மதிக்கப்படாமை இன்று இந்த உலகத்தின் ஜனநாயகம் மதிக்கபடாமைக்கு முக்கிய காரணமாகவும், மக்களின் இறைமை மறுக்கப்பட்டு இருக்கும் நிலையில், இறைமை இழந்து நிற்கும் மக்களின் நிலை, அவர்களின் அடிப்படை சுதந்திரம் இழந்து நிற்கும் நிலையில், மாபெரும் போருக்கு பின் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை இன்று செயல் இழந்து நிற்பது இன்றைய உலகநாடுகளில் நடக்கும் போருக்கு காரணமாகிறது என்று கூறினார். இந்த சூழ்நிலையில் சுயநிர்ணய வுரிமையை வேண்டி போராடும் மக்களுக்கு இந்த மகாநாடு எதை சொல்லப்போகிறது என்ற கேள்வியை எழுப்பி ஈழத் தமிழர்கள் போன்று, பாலஸ்தின மக்கள், தீபத்திய மக்கள், தென் சஹாரா மக்கள், குர்திஸ்தான் மக்கள் என்று இன்றும் போராடும் மக்களின் உரிமை எங்கே என்ற கேள்வி எழுப்பட்டது.
இந்த முதல் மகாநாடு பல்லின மக்கள் ஜனநாயகத்தில் இன்று உள்ள அதிர்ப்தியை தெரிவிக்க கூடிய களமாக அமைத்தது வரவேற்கத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire