இப் படத்தில் காணப்படுகின்ற இருவருமே குற்றம் ஏதும் செய்யாமல் குற்றவாளிகள் ஆக்கப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஒருவர் Bangladeshi student (AL QAEDA) மற்றவர் கனேடிய தமிழ் student ( LTTE ). இந்த இருவரும் பயங்கரவாத செயல்கள் செய்ய முனைந்ததாக அமெரிக்க (FBI) போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த இருவரும் உண்மையில் எந்தவொரு பாரிய குற்றமும் செய்யவில்லை. ஆனால், குற்றம் செய்வதற்கு தயாராக இருந்தார்கள் என்பது தான் குற்றம் . FBI யினர் இவர்களை குற்றம் செய்ய தூண்டினார்கள் என்பதுதான் உண்மை. பயங்கரவாதிகளை உருவாக்குவதும், உருவாக்கிய பயங்கரவாதிகளை வளர்தெடுப்பதும் பின்பு உருவாக்கிய பயங்கரவாதிகளை தாங்களே அழிப்பதும் அமெரிக்கர்களின் கொள்கைகளில் ஒன்று. நடந்த உண்மைச் சம்பவத்தைத் தருகிறோம் வாசியுங்கள் !
Quazi Mohammad Rezwanul Ahsan Nafis, 21, இவர் என்ன குற்றம் செய்தார் என்பதை முதலில் வாசியுங்கள் பின்பு...... எல்லாம் புரியும்…
நபீஸை கடந்த ஜூலை மாதத்தில் தான் எப்பிஐ உளவாளி முதன்முதலில் சந்தித்துள்ளார். இதையடுத்து பலமுறை சந்திப்பு நடந்துள்ளது. அப்போது நடந்த உரையாடல்கள் அனைத்தும் ரகசியமாக டேப் செய்யப்பட்டதோடு, அவரது இ-மெயில்கள், தொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்பட்டு வந்துள்ளன. அப்போது தான் நபீஸ் மிக மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டது உறுதியானதாக எப்பிஐ கூறியுள்ளது. ஆனால் சிறிய குண்டு ஒன்றை வைக்கலாமா என யோசித்த இவருக்கு பாரிய ஐடியா கொடுத்ததே எப்.பி.ஐ தான். எப்படி ஒரு குற்றம் செய்ய இருப்பவரை தூண்டி அதி பயங்கர குற்றத்தை செய்யவைத்து, பின்னர், நீண்ட தண்டனையை வாங்கிக் கொடுப்பது என்பதனை நாம் எப்.பி.ஐ யிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த விடையத்தில் இவர்கள் தான் பிதாமகன்கள் !
நியூயார்க்கில் உள்ள அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைமையகத்தை குண்டு வைத்து தகர்க்க, நேற்று 435 கிலோ வெடிமருந்துகளை நிரப்பிய ஒரு வேனை இந்த வங்கிக் கட்டடத்தின் முன் நிறுத்திவிட்டு அதை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்ய இந்த வாலிபர் முயன்றார். இந்த வாகனத்தைக் கொடுத்ததும் எவ்.பி.ஐ தான், வெடிமருந்துகளைக் கொடுத்ததும் எவ்.பி.ஐ தான். ஆனால் பழி மட்டும் இந்த இளைஞர் மீது போடப்பட்டுள்ளது. முதலில் தற்கொலைத் தாக்குதல் நடத்த நபீஸ் திட்டமிட்டதாகவும் பின்னர் அதிலிருந்து பின் வாங்கியதாகவும், இதையடுத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் குண்டுவெடிப்பை நடத்தலாம் என்று தங்களது உளவாளியே ‘ஆலோசனை’ தந்ததாகவும் எப்பிஐ தெரிவித்துள்ளது.
நேற்று காலை நபீஸுடன் எப்பிஐ உளவாளியும் சேர்ந்து ஒரு வேனில் வெடிமருந்துகளை நிரப்பிக் கொண்டு, அதை ஒரு செயல்படாத டெட்டோனேட்டருடன் இணைத்துக் கொண்டு நியூயார்க் ரிசர்வ் வங்கி கட்டடத்தின் முன் அதை நிறுத்தியதாகவும், பின்னர் அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்கு இருவரும் சென்று இந்தத் தாக்குதலுக்கான காரணத்தை விளக்கி நபீஸ் பேசும் ஒரு வீடியோவையும் பதிவு செய்துள்ளனர் (இந்த வீடியோவை நபீஸ் வங்கதேசத்துக்கு தப்பியுடன் வெளியிடுவதாக திட்டmaam !) இதன் பின்னர் செல்போன் உதவியோடு டெட்டோனேட்டரை வெடிக்கச் செய்ய நபீஸ் திரும்பத் திரும்ப முயன்றதாகவும், ஆனால், குண்டு வெடிக்காமல் அவர் திகைத்துக் கொண்டிருந்தபோது அவரை தங்களது அதிகாரிகள் கைது செய்ததாகவும் எப்பிஐ தெரிவித்துள்ளது.
கனேடிய தமிழ் மாணவர் சங்கத் தலைவர் சதா சரத் சந்திரன் ( இவருக்கு என்ன நடந்தது ?)
30 ஆண்டு காலமாக ஆயுதங்களைக் கடத்திவந்த கே.பி, இன்று நிரபராதி என்று இலங்கை அரசு சொல்கிறது. இதனை அமெரிக்காவும் கண்டுகொள்ள வில்லை. இன்ரர் போலின் தலைமையகம் அமைந்துள்ள நாடே இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறதே, ஆனால் சதாவிடையத்தை அமெரிக்கா ஏன் பெரிது படுத்தியது ? கே.பி அனுப்பிய வெறும் ஆயுதக் கப்பல், எங்கு செல்கிறது என்று, அமெரிக்காவுக்குத் தெரியும். ஆனால் பிறர் ஆயுதம் வாங்கினால், அது நிச்சயம் வன்னி சென்றுவிடும் என்பதும் அமெரிக்காவுக்குத் தெரியும். எனவே கே.பியை விட பிறர் மீதே அமெரிக்காவின் கண் இருந்திருக்கிறது என்பது திட்டவட்டமாகப் புரிகிறது. புலிகள் அழைக்கப்படவேண்டும் என்று அந் நாடு திட்டவட்டமாக எண்ணியிருந்ததும் புலப்படுகிறது அல்லவா ?
அமெரிக்க சிறையில் வாடும் சதா இதுபோன்றதொரு சதி நடவடிக்கை மூலமாகவே கைதுசெய்யப்பட்டார் என்பதும், அவர் செய்த குற்றத்துக்கு மேலாக(அதிகபட்ச) தண்டனைய அவர் அனுபவித்து வருவதையும் அமெரிக்கா நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா ?
Aucun commentaire:
Enregistrer un commentaire