lundi 15 octobre 2012

100 கிலோ தங்கநகைகள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இரு மூடைகளில்

இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் இரு மூடைகளில் கட்டப்பட்டிருந்த சுமார் 100 கிலோ தங்கநகைகள் இரும்பு சேகரிகக்ச் சென்ற பொதுமக்களால் மீட்கப்பட்டது. இதனையறிந்த இராணுவத்தினர் அந்த தங்கநகைகளை மக்களிடம் பறித்துச் சென்றுள்ளனர்.

   முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுசிறு பொதிகளாக்கப்பட்ட தங்க நகைகள் இரண்டு மூட்டைகளில் புதைக்கப்பட்டிருந்த போது அதனை இரும்பு சேகரிக்கச் சென்ற பொதுமக்கள் மீட்டதாகத் தெரியவருகின்றது.

   இவர்கள் தங்கம் மீட்டதை அறிந்த அப்பகுதிப் படையினர் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் இருந்த தங்கத்தை பறிக்க முயன்ற போது அங்கு பெரும் அமளி நிலவியது.

   இருந்தும் படையினர் பொதுமக்களை அச்சுறுத்திவிட்டு தங்க மூட்டைகளைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

   தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வைப்பகத்திற்குரிய தங்க நகைகளாக இது இருக்கலாம் என பொதுமக்கள் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire