19 ஒக்ரோபர் 2012
வலிகாமத்தில் உள்ள 6 தமிழர்கள் இணைந்து, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளனர். இச் செய்தி ஏற்கனவே வெளியாகியது யாவரும் அறிந்ததே. தமிழர்கள் கொடுத்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவைப் படித்த நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க முடிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளனர், என அதிர்வு இணையம் அறிகிறது. இலங்கையில் கோத்தபாயவுக்கு எதிராக வழக்குத் தெடுத்த நபர்கள் மிகவும் சொற்பமானவர்களே. அவர்களில் பலரை மிரட்டி, கோத்தபாய அடிபணியவைத்துள்ளார். ஆனால் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கோத்தபாயவின் மீதும் யாழ் கட்டளைத் தளபதி மீதும் குறிப்பிட்ட இந்த 6 தமிழர்களும் துணிச்சலாக வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமர்வின் முன், நவம்பர் 12ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது. இவ்வழக்கில் யாழ் கட்டளைத் தளபதி மற்றும் கோத்தபாய ஆகியோர் நீதிமன்றம் வரவேண்டிய சூழலும் ஏற்படலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Aucun commentaire:
Enregistrer un commentaire