mardi 23 octobre 2012

படைக்கு மேலும் காணி வேண்டுமாம்!


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புத் தேவைக்காக காணிகளை வழங்குமாறு காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிடம் இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது என்று அவ்வாணைக்குழுவின் யாழ் பிராந்திய பணிப்பாளர் விமலராஜ் தெரிவித்தார். ஏற்கனவே பெருமளவு காணியை கையகப்படுத்தியிருக்கும் நிலையில் இந்தக் கோரிக்கை இப்போது இராணுவத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பலவற்றைப் பெறுவதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டம் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 26 ஏக்கர் காணி இராணுவத்தால் கோரப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக காணி சீர்த்திருத்த ஆணைக்குழு தலைவரின் பரிந்துரைக்காக அனுப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதனைவிட மேலும் பெருமளவு காணியை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தினர் ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire